முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (செப்டம்பர் 18, 2022) மன அழுத்தத்தை குறைக்க சிறிய பயணத்தை திட்டமிடலாம்!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (செப்டம்பர் 18, 2022) மன அழுத்தத்தை குறைக்க சிறிய பயணத்தை திட்டமிடலாம்!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்று முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால் அதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த ஒரு வேலையை அர்ப்பணிப்புடன் செய்தாலும் இன்று அதற்கான பலன்களை கண்கூடாக காண்பீர்கள். எனவே செய்யும் வேளைகளில் கவனம் செலுத்தி சிந்தனையுடன் வேலை செய்யுங்கள்.

ராசியான எண்: 9, ராசியான நிறம்: காவி

பரிகாரம்: கிருஷ்ணருக்கு இனிப்புகளை வைத்து படைக்கவும்

ரிஷபம்:

இன்று உங்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் ஒரு சிறிய பயணத்தையும் திட்டமிடலாம். இந்த பயணத்தால் உங்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று முழு நேரத்தையும் உங்கள் குடும்பத்தினருடன் செலவிட முக்கியத்துவம் கொடுங்கள்.

ராசியான எண்: 3, ராசியான நிறம்: வெளிர் மஞ்சள்

பரிகாரம்: கடுகு எண்ணெய் தடவிய ரொட்டியை கருப்பு நாய்க்கு கொடுக்கவும்

மிதுனம்:

இன்று அறிமுகமில்லாதவர்களிடம் பேசும் போது கவனமாக இருங்கள். வெளிநபர்களின் ஆலோசனையின் பேரில் முதலீடு செய்யாதீர்கள், அப்படி செய்தால் நஷ்டமாகும். வீட்டில் சுப காரியங்கள் பற்றிய பேச்சு மகிழ்ச்சியை தரும்.

ராசியான எண்: 9, ராசியான நிறம்: வெள்ளை

பரிகாரம்: ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்

கடகம்:

சொத்து விஷயத்தில் குடும்பத்தாரும், சுற்றி இருப்பவர்களும் சில பிரச்சனைகளை உருவாக்க முயற்சிப்பார்கள். மற்றபடி இன்றைய நாள் மிகவும் சாதகமாக இருக்கும். புதிய திட்டம் ஏதாவது உங்கள் மனதில் இருந்தால் அதற்கான முக்கிய வேலைகளை இன்று தொடங்கலாம்.

ராசியான எண்: 0, ராசியான நிறம்: கருப்பு

பரிகாரம்: ஆலமரத்தடியில் நெய் தீபம் ஏற்றவும்

சிம்மம்:

பொருளாதார ரீதியாக இன்றைய நாள் மிகவும் சாதகமாது. நாள் முழுவதும் லாப வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். இன்று மிகவும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவும்.

ராசியான எண்: 5, ராசியான நிறம்: லைட் ப்ளூ

பரிகாரம்: சுந்தரகாண்டம் மற்றும் ஹனுமான் சாலிசா 7 முறை பாராயணம் செய்யவும்

கன்னி:

வியாபாரத்தில் பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டாம், நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே இன்று கவனமாக இருக்க வேண்டும். சிலர் தங்களுக்கென்று கொஞ்சம் பணம் ஏற்பாடு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். சிலரது குடும்பத்தில் கவலையான சூழல் நிலவும்.

ராசியான எண்: 2, ராசியான நிறம்: சிவப்பு

பரிகாரம்: கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகளை விடுவிக்கவும்

துலாம்:

இன்று உங்கள் குழந்தை தொடர்பான விஷயங்களில் முக்கிய முடிவு எடுக்க வேண்டியிருக்கும். பார்ட்னர்ஷிப்புடன் செய்யும் தொழிலில் இன்று லாபம் பெருகும். அன்றாட வேலைகளை சமாளிக்க இன்று பொன்னான வாய்ப்பு உள்ளது.

ராசியான எண்: 9, ராசியான நிறம்: ஃபிரோசி

பரிகாரம்: விநாயக பெருமானுக்கு லட்டு படைக்கவும்

விருச்சிகம்:

வியாபார ரீதியாக இன்றைய நாள் இனிமையாக இருக்கும் என்றாலும் அவசரத்தை தவிர்க்கவும். மேலும் இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வானிலை மாற்றம் உங்கள் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுத்தலாம். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.

ராசியான எண்: 4, ராசியான நிறம்: ஊதா

பரிகாரம்: ராமர் கோவிலில் அமர்ந்து ராம ரக்ஷா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யவும்

தனுசு:

இன்று ரிஸ்க் எடுப்பது லாபம் தரும். பொறுமை மற்றும் உங்கள் மென்மையான நடத்தை மூலம் பிரச்சனைகளை சரி செய்யலாம். துன்பத்தில் இருப்பவருக்கு உதவ வாய்ப்பு கிடைத்தால் அதை தயங்காமல் செய்வது சிறந்தது.

ராசியான எண்: 7, ராசியான நிறம்: பச்சை

பரிகாரம்: தாயாருக்கு இனிப்புகளை வழங்கி அவரின் ஆசீர்வாதம் பெறுங்கள்

மகரம்:

உங்கள் நலம் விரும்பிகளின் ஆலோசனைகளை கேட்டு நடந்தால் இன்று சிறப்பான நாளாக இருக்கும். வியாபாரத்தில் ஒற்றுமையாக செயல்பட்டால் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பொருளாதார விஷயங்களில் இதுநாள் வர காணப்பட்ட மந்த நிலை மறைந்து போகும்.

ராசியான எண்: 7, ராசியான நிறம்: கிரே

பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் அர்ப்பணிக்கவும்

கும்பம்:

அதிர்ஷ்டம் சிறப்பாக இருக்கும் என்பதால் உங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். லாபமும் செல்வாக்கும் இன்று அதிகரிக்கும். அதே போல தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை என எதுவாக இருந்தாலும் இன்று பெரிய முயற்சிகளை துணிந்து மேற்கொள்ள நேரிடும்.

ராசியான எண்: 5, ராசியான நிறம்: வெளிர் சிவப்பு

பரிகாரம்: காயத்ரி மந்திரம் 108 முறை உச்சரிக்கவும்

மீனம்:

இன்று பரிவர்த்தனைகளில் கவனமாக இல்லாவிட்டால் நிதி இழப்பு ஏற்படும். வியாபாரத்தில் லாபம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் உங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள்.

ராசியான எண்: 3, ராசியான நிறம்: நீலம்

பரிகாரம்: அனுமனுக்கு தேங்காய் வைத்து படைக்கவும்

First published:

Tags: Astrology, Rasi Palan