Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 10, 2022) நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தியால் உங்கள் நாள் பிரகாசமாக மாறும்

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 10, 2022) நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தியால் உங்கள் நாள் பிரகாசமாக மாறும்

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (10-09-2022) ராசிப்பலன்

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India
   

  மேஷம்:
  உங்களுக்கான ஆதாரங்கள் இன்று குறிப்பிட்ட வரைமுறையுடன் காணப்படலாம். ஆனால் நீங்கள் உங்களுடைய திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளலாம். பணியில் ஒரு சீனியர் நீங்கள் செய்யும் வேலையை கண் கொத்தி பாம்பாக கவனித்துக் கொண்டிருப்பார். உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ என்ன பின்பற்றுங்கள்.
  ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தெளிவான கிரிஸ்டல்

  ரிஷபம்:
  சுயமரியாதைக் குறைவு உங்கள் தாழ்வாக நினைக்க வைக்கலாம். கடந்த காலத்தில் நடந்த விஷயங்களைப் பற்றி அதிக சிந்திக்க வேண்டாம். இன்று எல்லாமே ஒரே மாதிரியாக இருப்பதை உணர்வீர்கள். இதை மாற்றி, உற்சாகமாக இருக்க உங்களுடைய கம்ஃபர்ட் சோனில் இருந்து வெளிவர வேண்டும்.
  ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – அமேதிஸ்ட்

  மிதுனம்:
  முன்னேற்றம் மெதுவாக இருந்தாலும், அது நல்லது. அது எப்போது வேண்டுமானாலும் வேகம் எடுக்கலாம். குடும்பத்தினர் மூலம் நீங்கள் சில எதிர்ப்பை உணரலாம். விடுமுறைக்கு சுற்றுலா செல்ல திட்டமிருந்தால் அதைத் தள்ளிப் போடுவது நல்லது.
  ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பேட்டர்ன்

  கடகம்:
  இன்று நீங்கள் ஒரு நல்ல உணவை ருசித்து மகிழ்வீர்கள். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சுறுசுறுப்பாக உணர வைக்கும். உங்கள் கனவு உலகில் இருந்து வெளியேறி நடைமுறை வாழ்க்கை சார்ந்த விஷயங்களில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
  ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நோட்பேட்

  சிம்மம்:
  உங்களுக்காக நீங்கள் விரும்படி செலவு செய்ய வேண்டிய நாள் இது. வணிக ரீதியான ஒத்துழைப்புக்கு, உங்களின் உடன்பிறந்தவர்கள் உங்களை அணுகுவார்கள். உங்கள் சிந்தனை இன்று தெளிவாக இருக்கும், நீங்கள் முன்னோக்கி செல்லலாம்.
  ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மார்க்கர்

  கன்னி:
  மந்தமாக இருப்பதால் ஏற்படும் சில தீவிரமான பிரச்சினைகளை இப்போது கவனிக்கலாம். உங்கள் மீது யாராவது விமர்சனங்கள் வைத்தால், அதை கேட்பது நல்லது. உடல் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற உள்ளுணர்வை தவிர்க்காதீர்கள்.
  ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புதிய புத்தகம்

  துலாம்:
  இந்த நாளை நீங்கள் மிகவும் சுலபமாக எடுத்துக் கொள்ள விரும்புவீர்கள். ஆனால், பெரிய அலைகளுக்கு எதிராக வேலை செய்வது நல்லதல்ல. உங்களின் உதவியை ஒரு நண்பர் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கலாம். ஒவ்வொரு சிறிய முன்னேற்றமும் முன்னேற்றமாகவே கருதப்படும்.
  ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சர விளக்குகள்

  விருச்சிகம்:
  ஒரு மோசமான உரையாடலை இன்று நீங்கள் தொடங்கலாம். உங்கள் காதல் இணக்கமாகி அடுத்த கட்டத்துக்கு செல்ல வாய்ப்புள்ளது. மற்றவர் புரிந்துகொள்ளும் விதத்தில் உங்களை வெளிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு செப்பு டம்ளர்

  தனுசு:
  பேச்சுத் திறன்களில் பயிற்சி பெறுங்கள். ஆற்றலின் அளவு வழக்கத்திற்கு மாறாக அதிகமாகவும், மற்றவர்களுக்கு எளிதில் பரவும் படியும் இருக்கலாம். உங்களுக்கு யாரும் ஊக்கப்படுத்த வேண்டாம், நீங்கள் சுயமாக செயல்பட்டு மற்றும் நாளை வெற்றிகரமான எதிர்கொள்வீர்கள்.
  ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - முதல் கப் தேநீர்

  மகரம்:
  நீங்கள் முன்னேறிச் செல்ல, பிரபஞ்சம் ஒரு நுட்பமான குறிப்பை அளிக்கும். இதன் மூலம் நீங்கள் உள்ளுணர்வைப் பின்பற்ற வேண்டும். கூட்டாண்மை உங்களுக்கு பலன் தரும்.
  ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஆரஞ்சு

  கும்பம்:
  ஒரு முக்கியமான சந்திப்பு தள்ளிப்போடப்படலாம். உங்களிடம் இன்னும் சில முக்கியமான விவரங்கள் இல்லாமல் போகலாம். புதிதாய் சேர்ந்திருக்கும் ஊழியர் ஒருவர் உங்களுக்கு ஒரு முக்கியமான நுண்ணறிவை வழங்கலாம். குடும்ப விஷயங்களில் உங்களுக்கு முன்னுரிமை கிடைக்காது.
  ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நியான் அடையாளம்

   

   

   

   

   

   

   

  மீனம்:
  நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தியால் உங்கள் நாள் பிரகாசமாக மாறும். புதிய உறுதிமொழிகள் எதையும் மேற்கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது.
  ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு டெரகோட்டா பானை
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Rasi Palan

  அடுத்த செய்தி