ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஜூலை 09, 2022) நண்பர்கள் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும்

Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஜூலை 09, 2022) நண்பர்கள் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும்

தினசரி ராசி பலன் - 9 ஜூலை 2022!

தினசரி ராசி பலன் - 9 ஜூலை 2022!

Rasipalan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

மேஷம்:

அலுவலக வாழ்க்கையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த நினைக்கும் உங்கள் முயற்சிக்கு இப்போது வெற்றி கிடைக்கும். உங்கள் குழுவில் சேரும் மூத்த பணியாளர் ஒருவர் மூலமாக மிக தேவையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நல்ல புன்னகை

ரிஷபம்:

உங்கள் அன்றாட பணிகளை சுமூகமாக முடிப்பதற்கான ஆற்றல் கிடைக்கும். எதிர்பாராத  செய்தி ஒன்று உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும். உங்கள் ஆர்வத்திற்கு ஏற்ற புதிய விளையாட்டு போட்டி உங்களை ஈர்க்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளம்பர பதாகை

மிதுனம்:

உங்கள் குடும்ப உறுப்பினர் உங்களோடு வாக்குவாதம் செய்யத் தொடங்கினால் நீங்கள் சற்று அமைதி காக்க வேண்டும். நீண்ட விவாதங்களை காட்டிலும் எளிய விஷயங்கள் மகிழ்ச்சியை தரும். நண்பர்களை கவனமாக தேர்வு செய்வீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிலிகான் அச்சு

கடகம்:

சில விஷயங்களை செய்ய வேண்டுமா, வேண்டாமா என்ற சந்தேகம் தீர இருக்கிறது. அந்த காரியத்தை எடுத்துச் செய்து முடிக்க இருக்கிறீர்கள். எண்ணத்தில் தெளிவு தேவை. சமூக அந்தஸ்து குறித்து கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீல ரிப்பன்

சிம்மம்:

சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரையிலும் நீங்கள் புத்துணர்ச்சியாக, முழு ஆற்றலை உணருவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த நேர்மறையான செய்தி வந்து சேருவதால் இந்த நிலை ஏற்படும். பணியிடத்தில் போட்டி நிலவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழச்சாறு

கன்னி:

அன்றாட பணிகளை உரிய நேரத்தில் முடிக்க முடியாமல் நீங்கள் வெறுப்பு அடைவதால், அவற்றில் சிலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டும். சிலரிடம் உதவி கேட்பது கூட நல்ல யோசனைதான். தகவல் தொடர்பில் கவனம் தேவை.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நினைவுப்பொருள்

துலாம்:

உங்களுக்காக நீங்களே இதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதி ஒன்றை இப்போது நிறைவேற்றும் தருணம் வந்திருக்கிறது. உங்கள் உடன் பிறந்தவர்கள் மூலமாக குடும்பத்தில் சில பிரச்சினைகள் நிலவக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காப்பர் பாட்டில்

விருச்சிகம்:

உங்களின் தற்போதைய கனவு அல்லது இலக்கு நோக்கி விண்ணப்பிக்க வேண்டிய அதிர்ஷ்டகரமான நாள் இது. தகவல்களை அதிக மக்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தேவையற்ற சச்சரவுகள் உருவாகலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - டெரகோட்டா

தனுசு:

உங்களை சுற்றியுள்ள சிலர் உங்களிடம் எதிர்மறையான எண்ணங்களை விதைக்க முயற்சி செய்வார்கள். ஆனால், அவர்களை நீங்கள் ஒதுக்கி வைக்க முடியாது. பிரச்சனையை தீர்க்க புதிய உத்திகள் உதவிகரமாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிளாஸ் டாப் டேபிள்

மகரம்:

அவசரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் போதுமானதாக இருக்காது. கடைசி நேர கவலைகள் சச்சரவுகளை உருவாக்கும். ஒரு சமயத்தில் ஒரு விஷயம் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள். தியானம் கை கொடுக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரூபி கியூப்

கும்பம்:

பழைய கனவு ஒன்று உங்களை நாள் முழுவதும் தொந்தரவு செய்து கொண்ட்டே இருக்கும். புதிய திசையை நோக்கி சின்னஞ்சிறு முயற்சிகளை மேற்கொள்வது பலன் தரும். நண்பர் மூலமாக புதிய தகவல் அல்லது வேலைவாய்ப்பு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சாக்கலேட்

மீனம்:

வாழ்வில் சமநிலை பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மழை நாளை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். எதிர்வரும் விவாதம் குறித்து பதபதைப்பு இருந்தால், கவலையை விடுங்கள். அது சாதகமாகவே இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய வாகனம்

First published:

Tags: Rasi Palan