Home /News /spiritual /

Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஜூலை 10, 2022) புதிய வாய்ப்பு தேடிவரும்

Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஜூலை 10, 2022) புதிய வாய்ப்பு தேடிவரும்

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன்!

  மேஷம்

  புதிய வேலையில் சேர்வதற்கான ஒரு வாய்ப்பு உங்களுடைய நெருங்கிய நண்பரிடமிருந்து நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் முடிவு கிடைக்க வேண்டுமென்றால் உங்கள் கவனம் சிதறாமல் கொடுத்த வேலையை சரியாக செய்ய வேண்டும் ஏனென்றால், அவ்வப்போது கவனச்சிதறல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் வசிக்கும் இடத்தில் புதிதாக வந்திருப்பவர்கள் உங்களைப் பற்றி தவறாக நினைப்பது உங்களுக்கு அசௌகரியமாக இருக்கும். நீங்கள் விரும்பிய இடத்திற்கு சென்று வருவது மன நிம்மதி அளிக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கண்ணாடி தேநீர் குவளை

  ரிஷபம்

  உயர் படிப்பு படிக்க வேண்டும் என்ற உங்கள் முயற்சியில் அவ்வப்போது சில தடைகள் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் அந்த தடைகள் எல்லாம் விலகி உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. உங்கள் படிப்புக்கு நிதியுதவி மற்றும் ஸ்காலர்ஷிப் கிடைக்கும் சாத்தியமும் இருக்கின்றது. வெளியூரில் தங்கி இருப்பவர்களுக்கு வீட்டு ஞாபகம் அதிகமாக இருக்கும் ஆனால் இது தற்காலிகமானது தான். உங்களுடைய உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி செய்வது நல்லது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – நியான் ஸ்ட்ரிப்

  மிதுனம்

  நீங்கள் நீண்ட காலமாக செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்ததை நடத்த வேண்டிய நாள் இது. புதிய வியாபார யோசனைகள் நல்லபடியாக முடியும். ஒரு புதிய பார்ட்னர்ஷிப் உங்களுடைய கவலைகள் எல்லாம் நீக்கி, வேலை செய்வதற்கு வசதியாகவும் ஆதரவாகவும் இருக்கும். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு பொருத்தமான வரன் அமையும். உங்கள் மனம் தெளிவாகவும் சிந்தனைகள் சீராகவும் இருப்பதை நீங்களே உணர்வீர்கள். நண்பர்களுடன் வெளியில் செல்வது இன்னும் ஆறுதலாக இருக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஹோர்டிங்

  கடகம்

  இதற்கு முன்பு உறவுகளில் நீங்கள் செய்திருந்த சிறு முயற்சி இன்று உங்களுக்கு பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும் ஒரு பெரிய கருவியாக இருக்கும். வேலை கடினமாக இருந்தாலும் உங்களால் அதை சரியாக செய்ய முடியும். பல்வேறு வேலைகளை ஒரே நேரத்தில் இழுத்து போட்டுக்கொண்டு செய்யும் சூழல் உங்களை சோர்வாக்கிவிடும். கோர்ட் கேஸ் என்று அலைபவர்கள், உங்களுக்கு சாதகமான ஆதாரங்கள் எல்லாவற்றையும் சேகரித்து வைக்க வேண்டியது அவசியம். நீங்கள் மிகவும் நம்பும் ஒருவர் உங்களைப் பற்றிய ரகசியமான விஷயங்களை எல்லாம் மற்றவர்களுடன் பகிரவதற்கு வாய்ப்பு இருக்கிறது எனவே கவனமாக இருங்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பழங்கால மணி

  சிம்மம்

  அவசரத்தில் நீங்கள் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்பதை நீங்கள் விரைவிலேயே தெரிந்து கொள்வீர்கள். நீங்கள் எடுத்த முடிவுகள் மீது உங்களுக்கே நம்பிக்கை இருக்காது. இப்போது மற்றவர்களும் அதையே தான் நினைக்கிறார்கள். வேலை கொஞ்சம் கடினமாக இருக்கக்கூடிய காலம். எனினும் நேர்மையாக செயல்படுவது மிகவும் முக்கியம் என்பதை மறக்காதீர்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வெள்ளி கிண்ணம்

  கன்னி

  எல்லா விஷயங்களையும் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பதை நீங்கள் நிறுத்தி, உங்கள் திறனை பயன்படுத்தி வேலைகளை செய்து முடிக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்தடுத்த வாரங்களில் உங்கள் வேலைப்பளு அதிகரித்து உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். நீங்கள் சமீப காலமாக புதிய வாய்ப்புகளை தேடி அலைகிறீர்கள். அதுவே உங்களை தேடி வரும். உங்களை நீங்கள் கொஞ்சம் மாற்றிக் கொள்ளக்கூடிய சூழலும் ஏற்படுமானால், அது உங்களுக்கு நன்மையை தரும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – செம்பு தட்டு

  துலாம்

  கடந்த கால நினைவுகள் எதிர்காலத்தை நீங்கள் எப்படி திட்டமிட வேண்டும் என்பதற்கு உதவியாக இருக்கும். அதே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யக்கூடாது என்பதில் மிகவும் கவனமாகத்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் தெளிவில்லை என்றால் அதற்கு உதவி கேட்பது தவறாகாது. பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சிவப்பு ரோஜா

  விருச்சிகம்

  அடுத்தவர்களுக்கு அதிகமாக அழுத்தம் கொடுத்து வேலை வாங்குவது என்பது எல்லோரிடமும் சரியாக இருக்காது. ஒரு சிலர் உங்களை பார்த்தாலே கோபப்படும் அளவுக்கு உங்களுடைய அணுகுமுறை இருக்கும். உங்களுடைய நோக்கம் சரியாக இருந்தாலும் நீங்கள் வெளிப்படுத்தும் முறை தவறாகவே தெரியும். கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட வேலைகளில் இருப்பவர்களுக்கு இப்பொழுது நல்ல லாபத்தை பெறலாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புறா

  தனுசு

  உங்கள் முன்பு பலவிதமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஆனால் தேர்ந்தெடுப்பது கொஞ்சம் சிக்கலாகவும் இருக்கின்றன. உங்கள் துறையின் மூத்த அதிகாரியின் ஆலோசனையை கேட்பது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். உறவுகளைப் பொறுத்தவரை உங்கள் கணவன் அல்லது மனைவிக்கு போதிய நேரம் ஒதுக்க வேண்டும். உங்களை பற்றி உங்கள் வாழ்க்கைத்துணை நினைத்துக்கொண்டிருக்கும் விஷயங்களைப் பற்றி அவரிடம் தெளிவாக பேசி எது சரி எது தவறு என்று புரிய வைக்க வேண்டும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஜேடு செடி

  மகரம்

  புதிய யோசனைகளை மற்றும் திட்டங்களை நீங்கள் செயல்படுத்த வேண்டுமென்றால் நீங்கள் உண்மையாகவே அதற்காக உழைக்க வேண்டும். வரும் வாரத்தில் அதற்கு சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் உங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் மற்றும் வெகுமதியும் காத்திருக்கிறது. கடந்த சில நாட்களாக இருந்ததை விட நீங்கள் அதிகம் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்கள் பார்ட்னர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மஞ்சள் மெழுகுவர்த்தி

  கும்பம்

  இது நாள் வரை நான் பட்ட துன்பமெல்லாம் போதும் என்ற ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். உங்களுடைய உணர்ச்சிகளை நீங்கள் வெளிப்படுத்தும் விதம் பாதிக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே நீங்கள் என்ன சொல்ல விரும்பு விரும்புகிறீர்களோ அதை மிகவும் தெளிவாக கூறுவது மிகவும் அவசியம். நீங்கள் தேடும் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கிரிஸ்டல் குவார்ட்ஸ்

  மீனம்

  உங்கள் ஆற்றலும், சிந்தனையும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றது. நீங்கள் இன்று என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அதை செய்வதற்கு உங்களுடைய சிந்தனை ஒத்துழைக்காமல் போகலாம். சட்ட ரீதியான தொழில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகவும் கவனமாக பேச வேண்டும். தவறாக எந்த விஷயத்தையும் கூறக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய திறன்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பட்டு ஸ்கார்ஃப்
  Published by:Murugesh M
  First published:

  Tags: Rasi Palan

  அடுத்த செய்தி