Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும்... (மார்ச் 14 ,2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும்... (மார்ச் 14 ,2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய ராசிபலன்

  மேஷம்:

  இன்றைய பிசியான தினம் உங்களுக்கு பாசிட்டிவ் செய்திகளை கொண்டு வரும். உங்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் தேவைப்படும் போது எளிதில் அணுகும் படி இருக்க வேண்டும். வீட்டை திறம்பட நிர்வாகிக்க உங்களது சொந்த திறமைகள் கைகொடுக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளி கம்பி

  ரிஷபம்:

  உங்களது எண்ணத்தின் நோக்கம் இன்று பலருக்கும் புரிய வரும். தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு புதிய வழிகள் மற்றும் கூட்டணிகளுக்கு சிறந்த நாள் மற்றும் சிறந்த வாரமாக அமையும். எ ளிமையான அணுகுமுறை இன்று உதவக்கூடும். எந்தவொரு எதிர்கால குறிப்புக்கும் ஆவணங்களை இன்னும் ஒழுங்காக வைத்துக்கொள்ளுங்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சொலிடர்

  மிதுனம்:

  உங்களுடைய பிளான் எதுவும் இன்று ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம், விரைவில் அதில் வெற்றி கிடைக்கும். அவநம்பிக்கையான எண்ணம் நெகட்டிவான செயல்களை அழைக்க நேரிடும். உங்களுடைய முன்னாள் காதலன் அல்லது காதலி மீண்டும் உங்கள் முன்பு தோன்ற வாய்ப்புள்ளது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்த வருகை ஆதிக்கம் செலுத்தலாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இறகு

  கடகம் :

  நீங்கள் செய்யும் ஒரு சிறிய உதவி மூலமாக பெரிய மகிழ்ச்சியை இன்று அனுப்பவிப்பீர்கள். உங்களுக்கு நன்கு அறிமுகமான நபர் நம்பிக்கையை உடைக்கக்கூடும், மேலும் அதனை வெளிநபரிடம் இருந்து அறிந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். சிறு, சிறு வாதங்களை பெரிதாக எடுத்துக்கொண்டு நீட்டிக்க வேண்டாம். மாணவர்களுக்கு உண்மையான கற்றல் அனுபவம் கிடைக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சர விளக்கு

  சிம்மம்:

  இன்று செய்யும் சிறிய அளவிலான தவறுகள் பின் நாட்களில் பெரிய பிரச்சனையாக வந்து சேரும் என்பதால் கவனம் தேவை. பிறருக்கு முடிந்த அளவிற்கு விஷயங்களை தெளிவாக விளக்கி புரியவையுங்கள். உங்கள் இணையருக்கு உங்கள் மீதான பற்று அதிகரிக்கலாம். பிற்பகலில் நீங்கள் எரிச்சலை உணரலாம். உங்கள் பெற்றோருக்கு உங்களிடமிருந்து உதவியும் நேரமும் தேவைப்படலாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு குழாய்

  கன்னி:

  சமீபத்தில் நீங்கள் அடைந்த வெற்றிக்கான பாராட்டுக்கள் கிடைக்கப்பெறலாம். இன்றைய தினம் உங்களுடைய வாரம் எப்படி செல்லும் என்பதை தீர்மானிக்கும் வகையில் அமையும். உங்கள் பணியிடத்தில் உங்களுடைய டீம் மற்றும் சக பணியாளர்களுடன் புதிய வாய்ப்புகளை உருவாக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கான தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய வடிகட்டி

  துலாம்:

  உங்களுடைய எல்லா பயத்தையும் வெளிக்காட்டாதீர்கள். இன்று வெற்றிகரமான நாள், எனவே நாளைக்கான திட்டமிடல்களை தொடங்குவது சிறப்பாக அமையும். நெருங்கிய நண்பன் உங்கள் மேல் பொறாமைப்படுவதால், முக்கியமான விஷயங்களை வெளியே சொல்லாதீர்கள். இன்றைய தினம் அளவாக சாப்பிடுவது நல்லது.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காற்றில் ஆடும் மணி

  விருச்சிகம்:

  இன்று உங்களுடைய ஐடியாக்களை முன்வைக்க வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து யாராவது உங்கள் முயற்சியை அங்கீகரித்து பாராட்டலாம். ஒருவரை ஆச்சர்யப்படுத்தும் அளவிற்கு உங்களுடைய திட்டம் வெற்றிகரமாக அமையும். உங்களுடைய நெருங்கிய நண்பருக்கு உதவி தேவைப்படலாம். இன்று ஒரு அவசர சந்திப்பிற்கு வாய்ப்புள்ளது.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிட்டு குருவிகள்

  தனுசு:

  வாழ்க்கையில் உங்கள் உண்மையான பொக்கிஷம் உங்கள் குடும்பம் மற்றும் அவர்களின் ஆதரவை நீங்கள் நிபந்தனையின்றி பெறுவீர்கள். சிறுசிறு உடல்நலப் பிரச்சினைகள் வரலாம். வேலையில் குழப்பத்திலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். வங்கி வேலைகளில் கவனமாக இருங்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வளர்ப்பு முயல்கள்

  மகரம்:

  குடும்பத்தில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த சிக்கல்கள் விலகும். உங்களுடைய உணர்ச்சி மிகுதியால் ஏற்படும் பாதிப்புகள் கவலைக்கு காரணமாக அமையும். வெளியூர் செல்வதற்கான திட்டம் இருக்கலாம். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பயணத் திட்டம் உங்கள் பெற்றோர் மூலமாக நிறைவேறலாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஸ்பிரிண்ட்

  கும்பம்:

  இன்றைய தினம் இனிமையான இயற்கை சூழல்கள் அல்லது இசைக்கு மத்தியில் ஓய்வெடுங்கள். வேலை குறைவாக இருக்கும், ஆனால் உங்களை பிஸியாக வைத்திருக்கும். தலைவலி ஒரு சிலருக்கு தொந்தரவு தரலாம். திறமையான வேலையாட்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அந்துப்பூச்சி

  மீனம்:

  இன்று உங்கள் மனம் உங்களை ஏமாற்றலாம். நிதானமாக இருந்து உங்களுடைய மனம் சொல்வதை கேளுங்கள். சில நண்பர்கள் உங்களை அழைத்து விரிவாக உரையாடலாம். வெளிநாட்டில் இருந்து வரும் உறவினர்கள் சில நல்ல செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - படிக ஜாடி
  Published by:Murugesh M
  First published:

  Tags: Oracle Speaks

  அடுத்த செய்தி