Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசிக்காரர் முதலீட்டில் கவனம் செலுத்துவது நல்லது... (மார்ச் 13 ,2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசிக்காரர் முதலீட்டில் கவனம் செலுத்துவது நல்லது... (மார்ச் 13 ,2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன்

    மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 19)

    பிரச்சனையில் இருக்கும் பொழுது உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை அணுகியவர்களை நீங்கள் கண்டு கொண்டதே இல்லை. இப்பொழுது உதவியைக் கேட்காமல் இருப்பது உங்களுக்கு குற்ற உணர்வாக இருக்கலாம். கால நேரம் மாறிக்கொண்டே இருக்கும் எனவே நீங்களும் அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் கடினமாக இருக்கும் ஆனால் நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலன்களைத் தான் தரும். விலை குறையும் என்று சொத்திலும் முதலீடு செய்வது பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும். உங்களுடைய முதலீட்டுத் திட்டங்களை நன்றாக மறுபரிசீலனை செய்து மீண்டும் முடிவெடுங்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சுத்தியல்

    ரிஷபம் (ஏப்ரல் 20 – மே 20)

    சுற்றியிருக்கும் அனைத்தும் வேகமாக மாறிக் கொண்டிருந்தாலும் நீங்கள் நேரம் எடுத்து மெதுவாக செய்யவே விரும்புவீர்கள். தேவையில்லாத ஆலோசனை உங்களை வந்தடையும். அது உங்களுடைய செயல்பாட்டை தடுப்பதாகவும் இருக்கும். எனவே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். ஒரே விஷயத்தில் நீங்கள் கவனம் செலுத்துவது அவ்வளவு சாதகமாக இருக்காது. எனவே உங்கள் திட்டங்களை நன்றாக மறு பரிசீலனை செய்து முடிவெடுங்கள். ஆன்மிக சுற்றுலா செல்வது உங்களுக்கு மன அமைதியும் புத்துணர்ச்சியும் தரும்; மிகவும் தெளிவாகவும் உணர்வீர்கள். உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பாசிட்டிவிட்டியை உங்கள் நெருங்கிய நண்பர் வழங்குவார்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – டாட்டூ

    மிதுனம் (மே 21 – ஜூன் 21)

    முன்பை விட நீங்கள் மன ரீதியாக வலிமையாக உணர்வீர்கள். பல விஷயங்களை எளிதாக கையாள முடியும். உங்கள் மனதில் இருப்பதை ஒருவருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அதை செய்வதற்கான நேரம் பொழுது வந்து விட்டது. நீங்கள் நேரடியாக சென்று தனியாக அவரை சந்தித்து மனதில் இருப்பதை தெளிவாக கூறலாம். ஆனால் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பதை மிகவும் சரியான முறையில் சொல்ல வேண்டும். உங்கள் குடும்பத்தினர் உங்களுடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புகிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ரோஜா தோட்டம்

    கடகம் (ஜூன் 22 – ஜூலை 22)

    கடந்த காலத்தில் நீங்கள் மிகவும் மதித்து நேசித்த அந்த நபரும் உங்களைப் பற்றி அதேபோல சிந்தித்துக் கொண்டிருப்பார். உங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் இடைவெளி நீங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாதது மட்டும் தான். எனவே நீங்கள் மறுபடியும் அவருடன் கனெக்ட் செய்வதற்கு முயற்சி செய்யலாம். அலுவலகத்தில் சேர்ந்திருக்கும் புதிய நபர் ஒருவரால் உங்களுக்கு சில தொல்லைகள் ஏற்படலாம். நீங்கள் உங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். தற்போது உங்களுக்கான தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் உங்கள் அம்மா உங்களுக்கு துணை நிற்பார்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு பாடகர்

    சிம்மம் (ஜூலை 23 – ஆகஸ்ட் 22)

    தற்போது உங்களுக்குள் இருக்கும் படபடப்பு, பயம் மற்றும் தூக்கமின்மை ஆகியவை அனைத்துமே தற்காலிகமானவை தான். எதையுமே அதிகமாக சிந்தித்து உங்களை நீங்களே குழப்பிக் கொள்ள வேண்டாம். உங்கள் மன நிலையை தெளிவு படுத்த மற்றும் உங்களை அமைதியாக்க நீண்ட தூரம் நடைப்பயிற்சி செல்லுங்கள் அல்லது ஏதாவது தெரப்பி எடுத்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்களுக்கு உதவ நினைத்தாலும் நீங்களே உங்களுக்கு தடை விதித்து கொள்கிறீர்கள். சில நேரங்களில் தோல்வியும் வாழ்க்கையில் தோன்றும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ரோஜா செடி

    கன்னி (ஆகஸ்ட் 23 – செப்டம்பர் 22)

    தாமதமாக கிடைக்கும் நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி கிடையாது. கடந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவம் உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஆழமாக பதிந்திருக்கும் அதற்கு நியாயம் கிடைக்குமா என்று நீங்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்பொழுது நீங்கள் எதிர்பார்க்கும் நீதியும் நியாயமும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களே உங்களை பற்றி அவதூறாக பேசலாம். ஆனால் உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை நீங்கள் கவனமாக செயல்படுங்கள். மற்றவர்களின் கருத்தை உங்களை பாதிக்கவிடாமல் எச்சரிக்கையாக இருங்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு பெரிய நுழைவாயில் கதவு

    துலாம் (செப்டம்பர் 23 – அக்டோபர் 23)

    மிகவும் சிக்கலான உணர்வுகளை எளிமையான வார்த்தைகளால் பல நேரங்களில் சுலபமாக வெளிப்படுத்திவிட முடியும். நீங்கள் யாரிடமாவது உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டுமென்று முயற்சி செய்து கொண்டிருந்தாலும், அவர்களை கண்டறிந்து மனதில் இருப்பதை தைரியமாக சொல்லுங்கள். அது வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினையாகவும் இருக்கலாம் அல்லது தனிப்பட்ட நபரிடம் நீங்க பேச விரும்புவதாகவும் இருக்கலாம். கடந்த காலத்தில் உங்களுக்கு யாரை நம்புவது என்பது குறித்த பிரச்சனைகள் இருந்தால் அது இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிவிடும். நீங்கள் மற்றவர்களுடன் இருக்கும்போது சௌகரியமாக உணர்வீர்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – நீளமான வேர்கள் கொண்ட ஆலமரம்

    விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 21)

    மற்றவர்களால் முடிவு செய்யப்படாத ஒரு வாழ்க்கையை வாழ்கிறீர்கள் என்பதன் மூலம் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர வேண்டும். ஏனென்றால் அப்படியான சம்பவங்கள் உங்களை சுற்றி நடந்தால் நீங்கள் பயங்கரமாக காயப்பட்டு விடுவீர்கள். நிதி மற்றும் பொருளாதார ரீதியாக இது மிகவும் சாதகமான காலமாக இருக்கும், பல மாதங்களுக்கு இது தொடரும். உங்களுடைய சொத்துக்கு நீங்கள் வாரிசை நியமிக்க வேண்டிய காலமாக இருந்தால் அதை நீங்கள் இப்போது செய்து விடலாம். நீங்கள் உணர்வுபூர்வமாக காயப்பட்டிருந்தால் வயதில் மூத்தவர்களிடம் அதுகுறித்து ஆலோசனையை பெறுங்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கண்ணாடி செட்

    தனுசு (நவம்பர் 22 – டிசம்பர் 21)

    சில நேரங்களில் நடப்பதையெல்லாம் நீங்கள் மிகவும் சுலபமாக கண்டுபிடித்து விடுவீர்கள்; ஆனால் சில நேரங்களில் உங்களுக்கு வழக்கத்தை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு நேரம் தேவைப்படும். எனவே உங்கள் வழியில் என்ன வருகிறதோ அதை நீங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளீர்கள். உங்களுடைய திறமைகளை பற்றி கடந்த காலத்தில் யாரையும் விமர்சித்து இருந்தால் அவர்கள் உங்களுடைய மதிப்பு மற்றும் திறன் பற்றி புரிந்து கொள்வார்கள். வேலையில் உங்களுடைய உணர்வுகளை கலந்து தவறான பெயர் எடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – குருவிகள்

    மகரம் (டிசம்பர் 22 – ஜனவரி 19)

    நடைமுறை வாழ்க்கையில் உங்களுடைய அறிவு வெளிப்படும்போது யாருமே உங்களை தோற்கடிக்க முடியாது. தெளிவான மனதுடன் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு விஷயத்தை சொல்ல வரும்போது நீங்கள் மிகச் சிறந்தவர் என்பதை அனைவருக்கும் புரிய வைக்கும். உங்களுடைய இந்த குணநலன் உங்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை பெற்றுத்தரும். பலரும் உங்களுடைய ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்பை கண்டு வியப்பார்கள். உங்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்டிருக்கும் ஒரு புதிய பணி நிறுவனத்தின் உயர் மட்டத்தில் இருந்து பாராட்டைப் பெற்றுத் தரும் அளவுக்கு கவனம் ஈர்க்கும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பட்டு ஸ்கார்ஃப்

    கும்பம் (ஜனவரி 20 – பிப்ரவரி 18)

    நீங்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கும் ஒரு விஷயம் இப்பொழுது உங்களுக்கு சாதகமாக மாற இருக்கிறது. நீங்கள் அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்கள். ஸீரோவிலிருந்து ஒரு மிகப்பெரிய விஷயத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். இத்தனை நாட்களாக உங்களுடைய முயற்சியும் உழைப்பும் கண்களுக்கு தெரியாமல் போய்விட்டது, ஆனால் இனிமேல் அப்படி இருக்காது. அதே நேரத்தில் நீங்கள் முன்னேற கூடாது என்பதில் குறியாக இருக்கும் கண்களுக்கு தெரியாத எதிரியும் இருக்கிறார்கள். அதை பற்றி நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தாலும், உங்களுடைய முயற்சியில் என்றுமே பின்வாங்க வேண்டாம். உங்களுக்கான நல்ல வாய்ப்பு ஒன்று காத்திருக்கிறது.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ரூபிக் கியூப்

    மீனம் (பிப்ரவரி 19 – மார்ச் 20)

    உங்களுக்கு சாதகமாக எல்லாம் ஒரே நேர்கோட்டில் மாறுவதற்கு நீங்கள் கொஞ்சம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். வீடு சம்பந்தமாக ஒரு சில பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே நீங்கள் அதை முன்னின்று தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரச்சனையாக நீங்கள் பொறுமையுடன் எதிர்கொண்டால் எல்லாவற்றுக்கும் சுலபமாக தீர்வு கிடைக்கும். சில நேரங்களில் நீங்கள் மிகவும் பதற்றமாக எதுவுமே உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பது போல உணர்வீர்கள். ஆனால் இது நிரந்தரமானது தான். உங்களின் கடந்த கால முதலீடுகள் உங்களுக்கு இப்பொழுது கைக்கு கிடைக்கும். உங்கள் பெற்றோரின் நண்பர் ஒருவரால் உங்களுக்கு மிகவும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பண்ணை நிலம்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Oracle Speaks

    அடுத்த செய்தி