Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு நன்மைகள் நிறைந்த நாள்... (பிப்ரவரி 20, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு நன்மைகள் நிறைந்த நாள்... (பிப்ரவரி 20, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | தண்ணீர் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் ஒரு பொருளாக இருக்கலாம். தண்ணீர் அதிகப்படியான ஆற்றலையும் தந்து ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் அனைத்தையும் ஒருங்கிணைக்கலாம்.

மேஷம் :

நீங்கள் நிறைவேற்றாமல் வைத்திருக்கும் விஷயத்தை மீண்டும் தொடங்குவதற்கு மிகச் சிறந்த நாளாக இருக்கும். அடுத்தது என்ன செய்யலாம் என்று பலரும் உங்களுக்கு யோசனை கூறுவார்கள். ஆனால் உங்களுக்கு முதலில் என்ன தோன்றுகிறதோ அதையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் உங்களுடன் நீண்ட காலம் இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் பாதிப்பு இருப்பதாக அறிகுறிகள் தோன்றினால் அதை கவனிக்க வேண்டும். கவுன்சிலிங் தேவைப்படுவது போல நீங்கள் உணர்வீர்கள். உங்களுடைய உணர்வுகளை சரியாகக் கையாள்வதற்கு நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வாகனம்

ரிஷபம் :

உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கும் நபர் உங்களுடையவராகவே ஆகலாம். இன்று நீங்கள் வெளியில் செல்ல வேண்டுமென்று நினைத்தால், அதை செயல்படுத்தலாம். உடல்ரீதியாக நீங்கள் நோயில் இருந்தோ அல்லது உடலை மேம்படுத்தும் முயற்சியில் இருந்தாலோ, உங்களுக்கு நல்ல முன்னேற்றம் தெரியும். மற்றவர்களை நம்புவது உங்களை பெரிய அளவில் காயப்படுத்தும். எனவே, உங்களை சுற்றி இருக்கும் நபர்களிடமிருந்து நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் உங்களுக்கு பெரிய அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – காய்ந்த மலர்

மிதுனம் :

இப்போது எல்லாமே எளிதாக கணிக்க முடிவது போல உங்களுக்கு தோன்றினால், அதை நீங்கள் மாற்ற முயற்சிக்க வேண்டாம். எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே நீங்கள் பின்பற்றுங்கள். எதிர்க்கவும் மாற்றவும் நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். சில நேரங்களில் உடனடி திட்டங்களைப் போட்டு அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய சூழல் ஏற்படும். ஆனாலும் உங்களுக்கு நன்மையாகத் தான் முடியும். புதிதாக எதையும் முயற்சி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருக்கும். தற்போது பயணம் சம்பந்தப்பட்ட திட்டங்கள் ஏதேனும் இருந்தால் அதை செயல்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – செராமிக் கிண்ணம்

கடகம் :

உங்களுக்கு நெருக்கமாக இருக்கும் ஒரு நபர், உங்களுடைய ரகசியங்களை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தப்படுவார். எனவே உங்களுக்கு யாரையும் நம்ப முடியாது என்ற பிரச்சனை எழக்கூடும். ஆனால் இது தற்காலிகமானது தான். நீங்கள் புதிய வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தால் அது உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். உங்களை நீங்களே குறை சொல்வதை நிறுத்துங்கள். வாழ்க்கை ஒரேமாதிரியாக இருக்கக் கூடாது என்று எண்ணுபவர்கள் நீங்கள். எனவே பல புதிய விஷயங்களை தேடிச் செல்லலாம். செலவுகளை கட்டுக்குள் வைப்பது ஒரு பிரச்சனையாக அமையும். எனவே நீங்கள் என்ன செலவு செய்கிறீர்கள் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஷட்டில்

சிம்மம் :

உங்களுடைய ஆக்ரோஷமான மனநிலை தவறான நபரிடம் வெளிப்படும். அது உங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். நீங்கள் புதிய உடற்பயிற்சி பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதை செயல்படுத்துவதற்கு இது உகந்த காலமாக இருக்கும். இந்த வாரம் உங்களுக்கு நெருக்கடியான வேலைகள் எதுவும் இருக்காது. குழந்தைகள் மீது கூடுதல் கவனம் தேவை. அவர்களுக்கு நீங்கள் கூடுதல் நேரம் செலவிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சூரிய உதயம்

கன்னி :

எந்த காரணமும் இன்றி ஏதோ ஒரு விஷயத்தை தேடி அலைந்து கொண்டிருப்பது, உங்களுக்கு மிகுந்த சோர்வை உருவாக்கும். எனவே எல்லாவற்றையும் எளிமையாகவும் சுலபமாகவும், இருப்பது போல வைத்துக் கொள்ளுங்கள். மனரீதியான குழப்பம் இருந்தால் அதை தற்காலிகமாக ஒத்திவைக்கலாம். உங்கள் வேலையைப் பொறுத்தவரை உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான கமிட்மென்ட் என்று இரண்டையும் நீங்கள் பிரித்து வைத்துக் கொண்டு பணியாற்ற வேண்டும். உங்கள் பார்ட்னர் உங்களிடம் இருந்து வழக்கத்திற்கு மாறாக அதிகமாக டிமாண்ட் செய்யலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஜாதிபத்திரி

துலாம் :

கடந்த காலத்தில் உங்களை கேலி செய்த நபர் தற்பொழுது உங்களுக்கு நல்ல நண்பராக மாறும் வாய்ப்பு உள்ளது. நல்ல ஒரு பழக்கத்தை உருவாக்கிக் கொள்வதற்கான நேரம் இது. ஆனால் அது உடனடியாக செயல்படுத்த முடியாத சூழல் ஏற்படலாம். வேலையில் இருக்கும் குழப்பம் உங்கள் கவனத்தை திசை திருப்பலாம். எனவே வேலையில் இருந்து எந்த பிரச்சனையையும் வீட்டுக்குச் எடுத்துச் செல்லக் கூடாது. உங்கள் குடும்ப சூழல் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், நீங்கள் தேடும் அமைதியும் மகிழ்ச்சியும் உங்களுக்கு தருவார்கள். அது மட்டுமின்றி உங்களைவிட இளையவர்களுக்கு நீங்கள் உதாரணமாக இருப்பீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கருப்பு நிற காஃபி மக

விருச்சிகம் :

வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்து, அதை தற்போது கைவிட்டு இருந்தால், நீங்கள் முயற்சி செய்ய வேண்டிய நேரம் இது. சட்ட ரீதியான பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுக்கு குழப்பமோ அல்லது என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று உங்களுக்கு தெளிவாக இல்லாமல் இருக்கும் போது, நீங்கள் பலரிடம் இருந்து அவர்களின் கருத்துகளைக் கேட்கலாம். குறுக்கு வழிகளில் இல்லாமல் நேராக செல்ல வேண்டும். உங்களுக்கு இந்த சூழ்நிலையில் தேவைப்படும் ஒரு உண்மையான நபரின் உதவி கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பாட்டில் ஓப்பனர்

தனுசு :

நக்கல் செய்வது என்பது வேறு சூழ்நிலையை வெண்மையாக்குவது என்பது வேறு இந்த இரண்டுக்கும் இடையே நீங்கள் வித்தியாசத்தை உணர வேண்டும் ஏனென்றால் நீங்கள் பேசு வது ஒருசிலரை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது எனவே அதேபோல தன்னம்பிக்கைக்கும் அதிகமான தன்னம்பிக்கைக்கும் இடையே மெல்லிய கோடு உள்ளது அதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் ஆசிரியர் பணி அல்லது கற்றல் சம்பந்தப்பட்ட பணியில் இருந்தால் உங்களுக்கு ஏதேனும் கவனச்சிதறல் ஏற்படலாம் வரும் காலங்களில் நீங்கள் ஸ்மார்ட்டாக வேலை செய்ய வேண்டும் அது மட்டுமின்றி உங்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மண்புழு

மகரம் :

நீங்கள் எப்படிப்பட்டவர் என்பது இனி பலருக்கும் குழப்பம் இருக்காது. அதே போல, உங்களை எளிதாகப் புரிந்து கொள்ளும் நபரை நீங்கள் விரைவில் கண்டறிவீர்கள். புதிய திறன் ஒன்றை வளர்த்துக் கொள்வதில் நீங்கள் மிகப்பெரிய ஆர்வத்தை காட்டுவீர்கள். இது உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் தந்தையின் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் அவருடன் உணர்ச்சிபூர்வமாக நெருங்கி இருக்க வேண்டும். சிறு துளி பெருவெள்ளம் என்பது போல உங்களின் சீரிய முயற்சிகள் பின்னாளில் மிகப்பெரிய பலனை தரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வெல்வெட் குஷன்

கும்பம் :

தண்ணீர் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் ஒரு பொருளாக இருக்கலாம். தண்ணீர் அதிகப்படியான ஆற்றலையும் தந்து ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் அனைத்தையும் ஒருங்கிணைக்கலாம். திட்டங்களை உருவாக்கி மிகச் சரியான நோக்கத்தோடு செயல்படலாம். உறவுகளைப் பொறுத்தவரை நீங்கள் நேரம் செலவழிப்பது தான் பிரச்சனையை ஏற்படுத்தாமல் இருக்கும். உங்களுக்கு எவ்வளவு இருந்தாலும், ஏதோ ஒன்று இல்லை என்ற குறை இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த எண்ணத்தை தள்ளி வைத்து தற்போது இருக்கும் வேலைகள் மீது கவனம் செலுத்துங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மீன்

மீனம் :

உங்களுடைய நேரத்தை மீண்டும் மீண்டும் வீணடிக்க திறமைக் குறைந்த பலரும் உங்களை அணுகுவார்கள். உங்கள் வேலையில் முன்னேறிச் செல்வதற்கு பதிலாக நீங்கள் அதை அவர்களை மிகப்பெரிய பாரமாக உணர்வீர்கள். இதுவரை நீங்கள் வாழ்வில் திட்டமிடாமல் இருந்துள்ளீர்கள் என்றாலும் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொண்டிருந்தாலும் இது உங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும். உதவி தேவைப்படும் நபருக்கு நீங்கள் முடிந்த அளவுக்கு உங்கள் உதவியை செய்ய வேண்டும். உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கோ மருத்துவ உதவி தேவைப்படும் சூழல் ஏதேனும் ஏற்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – துணி
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி