Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசிக்காரர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது - பிப்ரவரி 19, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசிக்காரர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது - பிப்ரவரி 19, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்.

  மேஷம்:

  நீங்கள் ஏதேனும் ஒரு ஒப்பந்த பணியை முடிக்க இதுவரை சிரமப்பட்டிருந்தால், இப்போது அதற்கான உந்துதலைப் பெறுவீர்கள். மன அழுத்தத்திலிருந்து தற்காத்துக்கொள்ள பல செயல்களில் ஈடுபடுங்கள். உங்கள் நிதிநிலைமையால் ஓரளவு நிம்மதி கிடைக்கும்.
  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கண்ணாடி பாட்டில்

  ரிஷபம்:

  உங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவரின் உண்மை முகம் இன்று உங்களுக்கு தெரியவரும். நெருங்கிய நண்பர் உங்களுக்கு ஏதேனும் சர்பிரைஸ் கொடுக்கலாம் . பணியிடத்தில் வெளிப்படுத்தக்கூடிய கோப உணர்ச்சிகள் பின்னாளில் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அதைத் தவிர்க்கவும்.
  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தங்க நாணயம்

  மிதுனம்:

  நீண்ட காலமாக தொந்தரவாக இருந்த விஷயம் இன்று முடிவுக்கு வருகிறது. நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால், இப்போது அதில் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும். யாரோ ஒருவர் உங்களின் செயல்களையும் நீங்கள் பேசுவதை பின்னிருந்து ஒட்டுக்கேட்கலாம். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு விண்மீன்

  கடகம்:

  எந்த ஒரு பணியிலும் நீங்கள் முழு ஈடுபாட்டுடன் முயற்சி செய்தீர்கள் என்றால், கவலைப்படத் தேவையில்லை அவை வெற்றி தான். உங்கள் வேலையை மதிப்பிடும் ஒருவர் வெளிநாட்டவராக இருக்கலாம். மேலும் அவர்களுக்கு உங்களைப் பற்றி நல்ல அபிப்ராயம் இருக்கும். உங்களுக்கு நல்லது செய்யாத அனைவருக்கும் கர்மா பதிலடி கொடுக்கும்.
  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பெரிய மைதானம்

  சிம்மம்:

  கடந்த காலத்தில் நீங்க எடுத்த சிறிய நடவடிக்கைகள் இப்போது பெரிய பலனைத் தரும். இன்று உங்கள் இதயம் ஏதோவொன்றை பற்றி அதிகம் யோசிக்கும், அதைப் பற்றிய உள்ளுணர்வு மட்டுமே உங்களுக்கு இருந்தால், நம்பிக்கையை உருவாக்கிக்கொள்ள வேண்டிய நேரமிது. நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு உங்கள் குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கருவி பெட்டி

  கன்னி:

  உங்கள் அச்சங்களை அடக்கிவைப்பதை நிறுத்துங்கள். இப்போது அவற்றை எதிர்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. நீங்கள் ஏதாவது ஒன்றைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தால், அந்தத் தகவலைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இன்று அதிகம் இருக்கிறது.
  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிக்மெண்டெட் மேற்பரப்பு

  துலாம்:

  உங்கள் மனதில் தீர்க்கப்படாத பிரச்சனை இருந்தால், முயற்சி செய்து தீர்வு காண வேண்டும். ஏனெனில் அது தேவையற்ற மன அழுத்தத்தையும் கவனச்சிதறலையும் நீக்க உதவும். உங்கள் பழைய உறவுடன் இணைய வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உண்மையான உணர்வுகளை இன்று புரிந்துகொள்வீர்கள்.
  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு காபி குவளை

  விருச்சிகம்:

  கடந்த காலத்தில் நீங்கள் சாதித்த சில விஷயங்களுக்கான வெகுமதியை இன்று பெறுவீர்கள். இன்று சில ஆச்சர்யங்கள் உங்களுக்கு காத்திருக்கிறது. உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இன்று கிடைக்கும். செல்வாக்கு மிக்க நபர்களுக்கு மத்தியில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள்.
  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு இசைக்கருவி

  தனுசு:

  ஒரு புதிய உத்வேகம் அசாதாரணமான ஒன்றைச் செய்ய உங்களைத் தூண்டும். நீங்கள் சமீபத்தில் சமர்ப்பித்த ஏதேனும் ஒரு பணிக்கு கலவையான பதிலை பெறுவீர்கள். நீங்கள் அதே மீண்டும் செய்ய வேண்டியிருக்கலாம். உடல்நிலையில் கொஞ்சம் கவனம் தேவை.
  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டாசு

  மகரம்:

  பொறாமையின் அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள். உங்கள் வேலையை யாரோ ஒருவர் கண்காணிக்கலாம். நீங்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், அதை இன்னும் சிறிது காலத்திற்கு ஒத்திவைக்கவும். பூர்வீக பிரச்சினை இப்போது தீர்க்கப்படலாம்.
  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சோலார் பேனல்

  கும்பம்:

  இன்று உங்களின் ஒரு எளிய அணுகுமுறை அற்புதமான முடிவுகளைத் தரும். மறைமுகமாக யாராவது உங்களைப் பற்றி புகார் செய்தால், அதை பற்றி நீங்கள் விசாரிக்க வேண்டும். உங்கள் பொருள் எதாவது ஒன்று திருடுபோக வாய்ப்புள்ளது. நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் தாய்க்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவை.
  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பட்டு தாவணி

  மீனம்:

  இது மாற்றத்தின் பருவம், வேலை மாற்றம் அல்லது விருப்ப மாற்றம் அல்லது பழக்க மாற்றம் என எதுவாக இருந்தாலும் அது நன்மைக்காகவே இருக்கும். சுய உந்துதல் மற்றும் விடாமுயற்சியின் நல்ல ஆற்றல் இன்று உங்களுக்கு இருக்கும். இன்று பணவரவு இருக்கும்.
  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பசை
  Published by:Murugesh M
  First published:

  Tags: Astrology, Oracle Speaks

  அடுத்த செய்தி