ஹோம் /நியூஸ் /spiritual /

சனிக்கிழமை ராசிபலன்| இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 08) தொழிலில் வெற்றி இருக்கும்

சனிக்கிழமை ராசிபலன்| இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 08) தொழிலில் வெற்றி இருக்கும்

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன்

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (அக்டோபர் 07) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  பணியிடத்தில் முன்னேற உங்கள் முயற்சிகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். வியாபாரத்தில் உங்களது வணிக பணிகளுக்கு பிறரின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு நேர்மறையாக மற்றும் சுறுசுறுப்பாக செல்லும். எது  நினைத்தாலும் பெரிதாக நினையுங்கள். உங்களுக்கு இருக்கும் தடைகள் தானாக விலகும்.

  பரிகாரம் - சரஸ்வதி தேவிக்கு வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்

  ரிஷபம்:

  இன்று உங்கள் தனிப்பட்ட செயல்திறனில் கவனம் செலுத்துங்கள். நிதி நன்மைகளை இன்று பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகளுக்கிடையே வெற்றியை நிலைநாட்டுவீர்கள். முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். தொழில் சார்ந்த உங்களது நீண்ட நாள் இலக்குகள் நிறைவேறும். இதனால் உங்கள் வியாபாரம் வலுவடையும்.

  பரிகாரம் - ராமர் கோவிலில் கொடி காணிக்கை செலுத்தவும்

  மிதுனம்;

  இன்று உங்களுக்கு நேரம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் கடன் வாங்குவதை அல்லது கொடுப்பதை என இரண்டையுமே தவிர்க்கவும், இல்லை என்றால் நஷ்டம் ஏற்படும். பணியிடத்தில் மதம் சார்ந்த உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை தவிர்க்கவும். முதலீடு விஷயங்களில், தொழில் விரிவாக்கத்தில், வியாபார நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவீர்கள் மற்றும் விழிப்புடன் செயல்படுவீர்கள்.

  பரிகாரம் - அனுமன் கோவிலில் நெய் தீபம் ஏற்றவும்

  கடகம்:

  இன்று உங்களது தொழில்முறை சாதனைகளை மேம்படுத்துவீர்கள். நிதி விவகாரங்களில் இதுநாள் இருந்து வந்த சிக்கல்கள் இன்றோடு தீரும். சரியான திசையில் செல்வதால் உங்களது தைரியம் அதிகரிக்கும். இலக்கை நோக்கியே உங்களது செயல் இருக்கும், மேலும் புதிய படைப்புகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

  பரிகாரம் - சிவனுக்கு நீர் வைத்து வழிபடுங்கள்

  சிம்மம்:

  இன்று பண விவகாரங்கள் சிறப்பாக இருக்கும், உங்களது செல்வம் பெருகும். சேமிப்பு திட்டத்தை முன்னெடுப்பீர்கள். பணியிடத்தில் நேர்மறை சூழல் நிலவும் என்பதால் தயங்காமல் செயல்படுங்கள். சகஊழியர்களுடன் இணக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருப்போருக்கு இன்று லாபம் அதிகரிக்கும்.

  பரிகாரம் - பைரவர் கோவிலில் தேங்காய் கொண்டு வழிபடுங்கள்

  கன்னி:

  நீங்கள் வியாபாரி என்றால் உங்கள் தொழிலில் இன்று எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள். பொருள் மற்றும் கருத்து பரிமாற்றம் அதிகரிக்கும். தொழில் வல்லுநர்கள் பயணம் செய்யலாம். வேலையில் கவனக்குறைவாக செயல்படுவதை இன்று தவிர்க்கவும்.

  பரிகாரம் - பசு மாடுகளுக்கு பசுந்தீவனம் கொடுங்கள்

  துலாம்:

  அலுவலக வேலைகளில் தீவிரமாக செயல்படுவீர்கள், பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிக்க நெருங்கிய மற்றும் சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். தொழில் செய்வோருக்கு இன்றைய வியாபாரம் நிதி நிலையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை பெறுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

  பரிகாரம் - உண்ணக்கூடிய மஞ்சள்நிற பொருளை தானமாக கொடுங்கள்

  விருச்சிகம்:

  வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை இன்று செய்வீர்கள், உங்களது நம்பிக்கை இன்று அதிகரிக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும், நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நீங்கள் செலுத்தும் கவனம் மூலம் உங்களது லாபம் சிறப்பாக இருக்கும்.

  பரிகாரம் - கிருஷ்ணர் கோவிலுக்கு புல்லாங்குழல் கொடுங்கள்

  தனுசு:

  இன்று வெளியாட்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம், கவனமாக இருங்கள். முடிவுகளை எடுப்பதிலும் அவசரம் வேண்டாம், எச்சரிக்கையாக இருங்கள். பொறுமை மற்றும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இன்றைய நாளை இயல்பாக கடந்து செல்லலாம்.

  பரிகாரம் - ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்

  மகரம்:

  பார்ட்னர்ஷிப் வைத்துவியாபாரம் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இன்று சாதகமாக இருக்கும். தொழில் ரீதியாக சாதனைகள் அதிகரிக்கும். தலைமைத்துவ உணர்வுடன் வியாபாரத்தில் உங்களது பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். பொருளாதார பலன்கள் சிறப்பாக இருக்கும். வேலையில் ஷார்பாக இருப்பீர்கள்.

  பரிகாரம் - சிவனுக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம்

  கும்பம்:

  இன்று கடன் பரிவர்த்தனைகளை தவிர்க்கவும். பணியில் உங்களது பொறுமை அதிகரிக்கும். தொழிலில் நிதி வரவு மிதமாக இருக்கும். தேவையான விஷயங்களில் முடிவுகளை எடுப்பதில் தாமதத்தை தவிர்க்கவும். ஒரு சில விஷயங்களில் எதிர்பாராவிதமாக குழப்பங்கள் நீடிக்க வாய்ப்புள்ளது.

  பரிகாரம் - கிருஷ்ணர் கோவிலில் சென்று அர்ச்சனை செய்யுங்கள்

  மீனம்:

  பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இன்று அதிகரிக்கும். இன்று நீங்கள் தொடங்கும் புதிய வேலை வெற்றிகரமான பலன்களை தரும். போட்டியில் திறம்பட செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வேகம் கூடும்.

  பரிகாரம் - வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் பெரியவர்களின் ஆசிர்வாதம் பெறவும்

  Published by:Murugesh M
  First published:

  Tags: Rasi Palan