Home /News /spiritual /

Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஜூலை 25, 2022) உழைப்பிற்கான பலன் கிடைக்கும்

Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஜூலை 25, 2022) உழைப்பிற்கான பலன் கிடைக்கும்

ராசி பலன்

ராசி பலன்

Rasipalan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி (ஜூலை 25, 2022) ராசி பலன் இதோ...

    மேஷம்:

    அதிகப்படியான பொறுப்புகள் அணிவகுத்து நிற்பதால் உங்களுக்கு சிறு தயக்கம் இருக்கலாம். ஆனால், முழுமையான சிந்தனையோடு அணுகினால் அவற்றை எளிதில் செய்து முடிக்கலாம். எதிர்வரும் சவாலை ஏற்க தயாராக இருக்கவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்புக்கல்

    ரிஷபம்:

    எந்தவொரு சூழலையும் முன்கூட்டியே அனுமானிக்க வேண்டாம். அது உங்களுக்கு ஆச்சரியத்தை தரக் கூடும். உங்களை சுற்றி நடக்கும் விஷயங்களால் மனம் குழம்பி போய் இருக்கும். உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செராமிக் பவுல்

    மிதுனம்:

    உங்களுக்கான புதிய பொறுப்பை உருவாக்கி, அதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். உங்கள் எண்ணத்துக்கு ஏற்றபடி ஆற்றல் கூடி வர இருக்கிறது. வெளியிடத்தில் இருந்து வரும் நேர்மறையான செய்தி உங்களுக்கு புதிய சிந்தனையை கொடுக்கும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சில்வர் பை

    கடகம்:

    விவாதங்களால் குழப்பம் ஏற்படக் கூடும். உங்கள் உறவுகள் பலப்படும் என்றாலும் அதற்கு சற்று மெனக்கெட வேண்டும். தேவைப்படும் விஷயங்களில் தொழில்முறை நிபுணர்களின் ஆலோசனையை பெறவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பரிசு

    சிம்மம்:

    குடும்பத்தினருடன் குதூகலமான நேரத்தை செலவிட இருக்கிறீர்கள். உங்கள் வேலை மூலமாக சில சவால்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். நிலுவையில் உள்ள சட்ட விஷயங்கள் தீர்வுக்கு வர இருக்கின்றன.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒளியூட்டிய அறை

    கன்னி:

    பணியில் திடீரென்று தென்படும் நேர்மறையான வளர்ச்சி  இன்று உங்கள் வாழ்வில் வெளிச்சம் தரும். உடல் நலன் குறித்து அக்கறை கொள்ளுங்கள். பணியில் ஓய்வறியா உழைப்புக்கான பலன் பின்னர் கிடைக்கும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய விளக்கு

    துலாம்:

    குடும்பத்திலும், நண்பர்கள் மத்தியிலும் உங்கள் மதிப்பு உயர இருக்கிறது. ஏதேனும் ஒரு வேலையை ஒத்திவைத்து வருகிறீர்கள் என்றால் அதை இப்போது செய்து முடிக்கவும். இன்றைய நாளின் முடிவில் ரிலாக்ஸ் கிடைக்கும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தெளிவான வானம்

    விருச்சிகம்:

    உங்களுக்கு நன்றாக தெரிந்த நண்பர்களே உங்களை பற்றி கிசுகிசு பேசுவார்கள். பணிகளில் உங்களுக்கான புதிய பொறுப்பு கிடைக்க இருக்கிறது. குடும்ப நண்பர் மிகவும் உதவிகரமாக இருப்பார்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஆம்பர் கல்

    தனுசு:

    பழைய புகைப்படம் மூலமாக நீண்ட நாள் நினைவுகள் மனதில் தோன்றும். தெளிவான சிந்தனையுடன் இருப்பது பிரச்சனைகளுக்கு தீர்வை தரும். இது குறித்த செய்தி ஒன்று உங்களை வந்து சேரும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - எமரால்டு

    மகரம்:

    சிக்கல் மிகுந்த விஷயங்களில் உங்கள் அணுகுமுறையை எளிமையானதாக மாற்றுங்கள். உங்கள் முன்னால் இருக்கும் வேலையை செய்து முடிப்பதற்கான ஆற்றல் கிடைக்கும். தியானம் செய்வது நல்ல பலனை தரும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஏரி

    கும்பம்:

    நண்பர்களிடம் இருந்து சின்ன, சின்ன சந்தோஷங்கள் இன்றைய நாள் முழுவதும் இருக்கும். ஷாப்பிங் செய்வதற்கு நல்ல தருணம். இன்றைய நாளில் குதூகலமான நிகழ்வுகள் நடக்கும். வெளியிடங்களில் உணவுக் கட்டுப்பாடு அவசியம்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சைன்ஃபோர்டு

    மீனம்:

    புதிய பந்தம் வளர்ச்சி அடைவதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும். நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்கவும். உங்களால் செய்து முடிக்க இயலாத விஷயங்களுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளிக்கம்பி
    Published by:Murugesh M
    First published:

    Tags: Rasi Palan

    அடுத்த செய்தி