ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று கொண்டாட்டங்களும், ஆச்சரியங்களும் காத்திருக்கிறது... (மே 21, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று கொண்டாட்டங்களும், ஆச்சரியங்களும் காத்திருக்கிறது... (மே 21, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன்...

மேஷம்:

இந்த ராசிக்காரர்களுக்கு கொண்டாட்டங்களும், ஆச்சர்யங்களும் காத்திருக்கிறது. புதிய கூட்டணி மற்றும் முதலீடுகளை செய்வதற்கான சாதகமான சூழ்நிலை இருப்பதாக நட்சத்திரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பேச்சுவார்த்தைகளின் போது அமைதியாக இருங்கள் மற்றும் உங்கள் மீதான விமர்சன பகுப்பாய்வில் நேரத்தை செலவிடுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மேனெக்வின்

ரிஷபம் :

கடந்த காலத்தில் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய பல பிரச்னைகளை சந்தித்த நபராக இருந்தால், இப்போது உங்கள் மனம் சமநிலையை உணர ஆரம்பிக்கலாம். பழங்கால மரபுகளால் சில தடைகள் ஏற்படலாம். கடந்த காலத்தில் நீங்கள் நிறைய உணர்ச்சிகரமான பிரச்சனைகளுக்கு ஆளாகியிருந்தால், இப்போது நீங்கள் சமநிலையை உணர ஆரம்பிக்கலாம். கடந்த காலத்தின் சில மரபுகள் ஒரு தடையாக இருக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ரோல் மாடல்

மிதுனம்

ஏற்கனவே போட்டு வைக்கப்பட்ட பிளானில் ஏற்படும் திடீர் மாற்றம் உங்கள் நாளையே முற்றிலும் மாற்றலாம். இன்று ஒரு முக்கிய நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பும், அதன் மூலமாக புதிய நபர்களை சந்திக்கும் சந்தர்ப்பமும் கிடைக்கலாம். அந்த சந்திப்பு நீண்ட காலத்திற்கு தொடரலாம். இன்று வெளியில் சாப்பிடுவதை

தவிர்ப்பது நல்லது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வெள்ளி சரம்

கடகம்

புதிதாக ஒன்றைத் தொடங்குவதற்கு முன் நீங்கள் கொஞ்சம் பதட்டமாக உணரலாம், ஆனால் அதற்கான சக்திகள் அனைத்தும் உங்களிடம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட முடிவை எடுப்பதில் உங்கள் மனதில் ஒரு குழப்பம் உள்ளது. தெளிவு பெற உங்களுக்கு அதிக நேரம் ஆகலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ரோஜா பூ செடி

சிம்மம்

இன்று பிரகாசமான நாள், உங்கள் சொந்த முயற்சியால் காரியங்கள் கைகூடும். சிரமமின்றி இன்று பிறரை முந்தவும், பாராட்டுக்களை குவிக்கவும் வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அதற்கான வெகுமதிகளை விரைவில் பெறுவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சூரிய உதயம்

கன்னி

காலையில் நாள் மெதுவாக செல்வது போல் தோன்றினாலும், மறுபாதி நாள் வேகமாக நகரக்கூடும். நீங்கள் வழக்கமான அழுத்தத்தை உணரலாம். அதை தீர்க்க மனதை ரிலாக்ஸாக வைத்திருக்க கூடிய இடத்தையும், நேரத்தையும் தேர்ந்தெடுங்கள். ஒரு வேடிக்கையான மாலைப்பொழுது அமைய வாய்ப்புள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – உயரமான கட்டிடம்

துலாம்

பல ஆண்டு கால அனுபவம் உங்களை அனைத்து விஷயங்களிலும் நல்லது, கெட்டதை பகுத்து ஆராய்ந்து முடிவெடுக்கும் அளவிற்கு முதிர்ச்சியடைய வைத்துள்ளது. உங்களிடமிருந்து சிறப்பாக ஏதாவது எதிர்பார்க்கப்படுகிறது, அதை நீங்கள் சிந்திக்க வேண்டும். உங்களுக்கு நெருக்கமான ஒருவர் கஷ்டத்தில் இருப்பது தெரியவரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பழுப்பு நிற பணப்பை

விருச்சிகம்

உங்களின் முதன்மையான பணி, நீங்கள் உறுதியாக இருக்கும் ஒருவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது, ஆனால் அப்படி இல்லாததால் உங்கள் இருவருக்கும் இடையே விரக்தி உருவாகலாம். நீங்கள் சொத்து பரிவர்த்தனையில் ஈடுபட்டிருந்தால், நல்ல நேரத்திற்காக நீங்கள் காத்திருக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் –மரகதம்

தனுசு

வாய்ப்புகள் குவியக்கூடிய அதிர்ஷ்டமான நாள். அவை சிறியதாக இருந்தாலும் சுவாரஸ்யமானதாக இருக்கும். நிலுவையில் உள்ள முடிவுகளை இப்போதே நிறைவு செய்ய வேண்டும். செய்திகளையும் அழைப்புகளையும் திருப்பி அனுப்புவது நல்லது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தங்க எம்பிராய்டரி

மகரம்

ஓவராக அலட்டிக்கொள்ளாமல் நார்மலாக நாளை கழிக்க வாய்ப்பு கிடைக்கும். முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலமாக அதனை நீங்கள் அனுபவிக்கலாம். எவ்வித அறிவிப்பும் இன்றி நண்பர் ஒருவர் உங்கள் முன்னால் வந்து சர்ப்ரைஸ் கொடுக்கலாம். தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக வாய்ப்புள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தேனீ

கும்பம்

நீங்கள் மிகவும் கனவு காண்கிறீர்கள், யாரையோ தொலைத்துவிட்டதை போல் உணருகிறீர்கள். ஆனால் அதை எல்லாம் விட்டெழித்து எதிர்காலத்தை நோக்கி ஓட முயற்சிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையை திசைமாற்றக்கூடிய வாய்ப்பு காத்திருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சணல் பை

மீனம்

ஒருவரைப் பற்றி நீங்கள் மனதில் மறைத்து வைத்திருக்கும் உணர்வை எங்கே வெளியே சொன்னால் அவர் மறுத்துவிடுவாரோ? என்ற அச்சத்தில் இருக்கிறீர்கள். ஆனால் அதை நீங்கள் வெளிப்படுத்தாமல் இருப்பதும் கவலை அளித்து வருகிறது. எனவே உங்கள் மனதில் தோன்றும் எண்ணத்தை கடிதமாக எழுதி அனுப்பலாம். உங்கள் ரகசியத்தை அறிந்த மிக நெருங்கிய நண்பரின் உதவியை நாட சரியான நேரம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஏரி

Published by:Vaijayanthi S
First published:

Tags: Rasi Palan