Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (3 ஜூன் 2022) பணவரவு தாராளமாக இருக்கும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (3 ஜூன் 2022) பணவரவு தாராளமாக இருக்கும்..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

மேஷம்:

நண்பர்களுடன் ஒரு கெட்டுகெதர் உங்களுக்கு தற்போது தேவைப்படும் ஒரு பிரேக்கை கொடுக்கும் மற்றும் நீங்கள் உற்சாகமாக மாறுவதற்கு உதவும். நீண்ட நாட்களாக குழப்பத்தில் இருந்த ஒரு வேலை தற்பொழுது சரியாகப் பிடிபடத் துவங்கும். கடந்த கால ஏமாற்றம் பற்றி இனி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – அல்லிபூக்கள்

ரிஷபம்:

உடைந்த உறவை சரி செய்வதற்கு நீங்கள் ஒரு எளிமையான அணுகுமுறையை மேற்கொள்ளலாம். யாரேனும் ஒருவரை நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தால் அது இன்று நடக்கும். உங்களுக்குள்ளே ஏற்படும் மாறுதல் உங்களையே ஆச்சரியப்படுத்தும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சிவப்பு ரோஜா

மிதுனம்:

விரைவில் நீங்கள் சிக்கலில் இருந்து மீண்டு வந்து உங்கள் வழக்கமான வேலைகளை செய்யத் தொடங்குவீர்கள். உங்கள் உள்ளுணர்வு உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும். அது மட்டுமின்றி உங்களை உற்சாகப்படுத்துவதற்கு உங்கள் நெருக்கமான நண்பரும் உதவுவார்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – முத்து நெக்லஸ்

கடகம்:

நீங்கள் கடந்த காலத்தின் நினைவுகளில் மற்றும் கற்பனைகளிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதை உணரவேண்டிய காலகட்டம் இது. உங்களுடைய திறமையை அறிந்து கொண்ட ஒருவர் உங்களுக்கே போட்டியாளராக மாறலாம். நீங்கள் விரும்பியதை செய்து உங்கள் மனதையும் உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கிறிஸ்டல் தொகுப்பு

சிம்மம்:

உங்கள் அலுவலகம் மற்றும் வீட்டு பொறுப்புகள் இரண்டுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு இருப்பது போல உணர்வீர்கள். உங்களுடைய கோபத்தை எப்படியாவது கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். மேலும், பல விஷயங்களை நீங்கள் இவ்வளவு தான் என்று விட்டுவிட வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு டைல்

கன்னி:

தங்கு தடையின்றி சென்று கொண்டிருக்கும் உங்கள் அன்றாட வேலையில் சிறிய கவனக்குறைவு கூட பிரச்சனையை ஏற்படுத்தும். டைம் லிமிட் இருக்கும் எந்த ஒரு வேலையையும் ஏற்றுக் கொள்வதற்கு முன்பு நீங்கள் நன்றாக யோசிக்க வேண்டும். பண வரவு தாமதம் அல்லது பண நெருக்கடி இருந்த காலம் மாறி, பண வரவு தாராளமாக இருக்கும்

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – உங்களுக்கு பிடித்தமான பழைய விஷயம்

துலாம்:

அலுவலகத்தில் ஏதேனும் பெரிய சிக்கல் ஏற்பட்டு பாதிப்பை உண்டாக்குவதற்கு முன்பே, நீங்கள் முன்கூட்டி கணிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறீர்கள். அது மட்டுமின்றி நீங்கள் உங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களை நம்பும் ஒருவர் உங்களிடம் இருந்து கமிட்மென்ட் எதிர்பார்க்கிறார்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புதிய ட்ரைல்

விருச்சிகம்:

நீங்கள் ஒரு நேர்காணலில் கலந்து கொள்ள போகிறீர்கள் என்றால் அதற்கு நன்றாக தயார் செய்து கொள்ள வேண்டும். யாராவது எதையாவது உங்களைப் பற்றி சொல்வதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உங்கள் நம்பிக்கையை எப்போதுமே தளரவிட வேண்டாம். உங்கள் கனவுகளை அடைவதற்கு நீங்கள் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறீர்கள் எனவே நேரத்தை வீணடிக்காதீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – உள்ளரங்கு விளையாட்டு

தனுசு:

சவாலான நேரத்தை எதிர்கொள்வதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். எப்பொழுதும் போல உங்கள் அம்மா உங்களுக்கு ஆதரவாக கை குடுப்பார். அது மட்டுமின்றி நீங்கள் குருவாக நினைக்கும் நபரிடமிருந்து கிடைக்கும் ஆலோசனை தக்க சமயத்தில் உங்களுக்கு உதவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மாரிகோல்டு

மகரம்:

எது அவசியமானது எது அவசரமானது என்பதை தேர்ந்தெடுக்கும் ஒரு முக்கியமான கட்டத்தில் நீங்கள் இன்று இருக்கிறீர்கள். நீங்கள் அதிக எனர்ஜியுடன் காணப்படுவீர்கள். உணவு விஷயத்தில் இன்று கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருங்கள், அதிக இனிப்புகளைத் தவிருங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தோட்டம்

கும்பம்:

உங்களுடைய கிரியேட்டிவான பக்கம் பொதுமக்களிடையே வெளிப்பட வேண்டும் மற்றும் பாராட்டுக்கள் கிடைக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறது. ஆங்காங்கே கிடைக்கும் எந்த ஆலோசனையையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புதிய பர்ஸ்

மீனம்:

புதியதாக நீங்கள் செய்யும் எந்த ஒரு விஷயத்திலும் நன்றாக ஆலோசித்து செயல்பட வேண்டும். இன்று பண வரவு திருப்திகரமாக இருக்கும். செல்வாக்கு மிக்க மனிதர்களை சந்திப்பீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – டைசி பூக்கள்
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Oracle Speaks

அடுத்த செய்தி