ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இன்று இந்த ராசியினருக்கு பணவரவு எதிர்பார்த்தப்படி இருக்கும்... (24 ஜூன் 2022)

தெய்வீக வாக்கு: இன்று இந்த ராசியினருக்கு பணவரவு எதிர்பார்த்தப்படி இருக்கும்... (24 ஜூன் 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

மேஷம்:

ஒரே சமயத்தில் பல்வேறு பிரச்சினைகள் வந்து சேர்ந்தாலும் நீங்கள் பொறுமையை கடைப்பிடிப்பீர்கள். அலுவலக பணியில் கொஞ்சம் ரிலாக்ஸ் கிடைக்கும். உடல்நல தொந்தரவுகள் இருந்தால் மருத்துவ உதவியை நாடவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அழகான ஓவியம்

ரிஷபம்:

இதற்கு முன்பு வாய்ப்பை நீங்கள் தவற விட்டிருந்தால், அது இப்போது வேறு வடிவத்தில் வந்து சேரும். உங்களுக்கு நெருங்கிய ஒருவர் உங்களுக்கு அவப்பெயரை உண்டு செய்ய முயற்சிப்பார். அதிகமாக மனக் குழப்பம் அடைவது பலன் தராது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அணில்

மிதுனம்:

ஆழ்ந்து கவனிக்கப்படும் சில விஷயங்கள் உங்கள் நிலைமையை சீராக வைத்திருக்க உதவும். அதே சமயம், பிறர் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டாம். வழக்கமான பணிகளில் இருந்து கவனம் சிதறினால் பதற்றம் ஏற்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நைட்டிங்கேள் பறவை

கடகம்:

கொஞ்சம் வளர்ச்சிக்கான நேரம் இது. குறிப்பாக பணியிடத்தில் அதை உணர முடியும். உங்களுக்கு தற்போது பண வரவு மிக அதிகமாக இருக்கும். பெற்றோர்களின் மனநிலை கவலைக்குரிய விஷயம் ஆகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தங்கமீன்

சிம்மம்:

உங்களுக்கு இப்போது ரிலாக்ஸ் ஆன மன உணர்வு ஏற்படலாம். கொஞ்சம் ஓய்வு எடுக்க நேரம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உங்கள் மீது அதிருப்தி ஏற்படக் கூடும். பகிர்ந்து கொள்ளும் குணம் இதை சமாளிக்க உதவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - குருவி

கன்னி:

சமூகத்தோடு இணைந்து பழகவும், வெளியிடங்களுக்கு செல்லவும் இன்று அருமையான நாள். உங்கள் கைக்கு திடீரென்று வந்து சேரும் வேலையை ஒத்திவைக்க நேரும். புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஆமை

துலாம்:

இன்றைக்கு மிகவும் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். ஆனால், மாலையில் கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டிய தேவை இருக்கும். முக்கியமான விஷயம் உங்கள் நினைவில் இருந்து மறக்க வாய்ப்புள்ளது என்பதால் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மண் பானை

விருச்சிகம்:

நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ப்ராஜக்ட்டை இப்போது தொடங்க திட்டமிடலாம். அதில் கிடைக்க இருக்கும் வெற்றி உங்களுக்கு திருப்தியை தரும். நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள். நீண்ட கால முதலீடுகள் பலன் தரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மண்வெட்டி

தனுசு:

உறவினர் ஒருவர் மூலமாக உங்களுக்கு கொஞ்சம் தொல்லை ஏற்படக் கூடும். புதிய வாய்ப்புகளில் முதலீடு செய்தால் பின்னாளில் நல்ல லாபம் கிடைக்கும். உங்களுக்கு தெரியாத விஷயத்தை உடன் பிறந்தவர் உங்களிடம் பகிர்ந்து கொள்வார்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழமையான நாணயம்

மகரம்:

பயணம் மற்றும் இதர வேலைகள் அணிவகுக்க இருக்கின்றன. இந்த சமயத்தில் உங்களுக்கு ஓய்வு என்பதே கிடைக்காது. கவலை மற்றும் அவசர முடிவு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே எடுத்த முடிவை கடைபிடிக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பீங்கான்

கும்பம்:

உங்கள் எண்ணங்களுக்கும், தற்போதைய சூழலுக்கும் ஒத்து வராது. ஆனால், உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் மாற்றம் நடக்கும். உங்களைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்கள் என்பது குறித்து கவலை கொள்ள வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழமையான புகைப்படம்

மீனம்:

உங்கள் மனதுக்கு தொல்லை கொடுக்கும் ஒரு விஷயம் குறித்து பிறகு ஆய்வு செய்யவும். ஒரு சின்ன யோசனை கூட உங்களுக்கு தீர்வை தரும். சௌகரியமான வருமானத்தை மட்டுமே நம்பியிருக்க கூடாது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளித்தட்டு

First published:

Tags: Oracle Speaks