புதிதாக ஏதாவது வாய்ப்பு வந்தால், அதை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். இதை ஒரு புதிய முயற்சியாகவோ, திட்டமாகவோ அல்லது பணியாகவோ செய்யலாம். ஆனால் அதை முயற்சிக்கும் முன் அது குறித்து நன்றாகச் யோசித்து கொள்ளுங்கள். இன்று வீட்டில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க முயற்சிக்கவும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கண்ணாடி
ரிஷபம்
அடிப்படையான விஷயங்களை கற்று கொள்வது பெரும் உதவியாக
இருக்கும். நீங்கள் பயிற்சி செய்து வரும் விஷயங்களை நீங்கள் முயற்சி செய்து கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் அதில் முன்னேற்றம் அடைய முடியும். மேலும் மனதில் தெளிவு பெறவும் முடியும். முக்கியமான விஷயங்களில் முடிவெடுப்பதை சிறிது காலத்திற்கு ஒத்திவைப்பது நல்லது. இன்று உங்களுக்கு சில வாய்ப்புகள் வரக்கூடும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மெழுகுவர்த்தி
மிதுனம்
நீங்கள் ஒருவருடன் பார்ட்னர்ஷிப் போட்டு இணைய நினைத்தால், அதற்கான சரியான நேரம் இது. ஆனால் நீங்கள் முன்கூட்டியே இது குறித்து மதிப்பாய்வு செய்ய வேண்டி இருக்கும். மேலும் இன்று தற்செயலாக எதையும் யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்களுக்கு நீங்கள் தேவையில்லாமல் அதிக அழுத்தம் கொடுக்காதீர்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ரத்தினக்கல்
கடகம்
உங்களின் மறைக்கப்பட்ட உணர்ச்சிகள் உங்களின் நலன் விரும்பிகள் மூலம் இப்போது தெரிய வரும். நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு வேறொருவரைச் சார்ந்து இருக்கிறீர்கள், இது உங்களை பிரச்சனையில் கொண்டு சேர்க்கும். நீங்கள் உங்களை சுதந்திரமாக வைத்து கொள்ள வேண்டும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மஞ்சள் கல்
சிம்மம்
சில காலமாக நீங்கள் சந்திக்காத ஒருவரால் நீங்கள் அன்பான வரவேற்பைப் பெறுவீர்கள். இன்று ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள். இன்று எதிர்கால பயணத்திற்கான திட்டங்களை வகுக்க முயற்சிக்கலாம். நல்லதே நடக்கும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மெழுகுவர்த்தி
கன்னி
விலகிச் செல்லும் ஒருவருடன் நீங்கள் உறவில் இருந்தால், நீங்கள் எந்த நேரத்திலும் உணர்ச்சிகளில் இருந்து விடுபட முடியாமல் போகலாம். எனவே எப்போதும் கவனமாக இருங்கள். இன்று வெளியூருக்கு பயணம் செய்யும்போது ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். உங்களுக்கான சில நேரத்தை இன்று ஒதுக்குங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு புத்தர் சிலை
துலாம்
உங்கள் தலைமைப் பண்பு அதிகரித்து வருகிறது, அதை சரியான நேரத்தில் வெளிப்படுத்தியதற்காக நீங்கள் பாராட்டுக்களையும் பெறலாம். உங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளையும் பயன்படுத்தி வாழ்வில் சிறப்பாக இருங்கள். உங்கள் வீட்டிலிருந்து வர கூடிய ஒரு நல்ல செய்தி உங்களை உற்சாகப்படுத்தும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வீட்டு தாவரம்
விருச்சிகம்
பணியிடத்தில் உங்களின் செயல்பாடுகளை எதிர்க்கும் நபர்கள் உங்களை சுற்றிலும் இருக்கலாம். எனவே எப்போதும் கவனமாக இருங்கள். உங்களுக்குள் உருவாகும் மோசமான உணர்வைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மற்றவர்களை எல்லா நேரங்களிலும் நம்பாதீர்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நாற்காலி
தனுசு
மிக குறைந்த காலத்தில் நீங்கள் அடைந்த வெற்றி மிக சிறப்பானது. நீங்கள் ஒரு புதிய வணிக யோசனையை வைத்திருந்தால், அது உங்களுக்கு சாதகமாக விரைவில் செயல்படும். உங்களுக்கு ஏற்ற பார்ட்னரை தேர்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கிளிம்பர்
மகரம்
இந்த நாள் பலவித மாற்றங்களை கொண்டுள்ளது. எனவே எல்லா வித சவால்களையும் தைரியமாக எதிர்கொள்ள பழகுங்கள். நீங்கள் மிகவும் நெருக்கமாக நம்பும் ஒருவரை எப்போதும் சார்ந்திருப்பதைக் குறைக்க முயற்சி செய்யலாம்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பட்டாம்பூச்சி
கும்பம்
இன்று, உங்கள் வேலையை முடிக்க விரிவான திட்டங்களை நீங்கள் வகுத்து கொள்வீர்கள். இருப்பினும் சில சமயங்களில் அது தள்ளி போகலாம். குடும்பம் அல்லது மனைவியிடமிருந்து வரும் எந்த ஆலோசனையும் இப்போது உங்களுக்கு பொருத்தமானதாக இருக்காது. உங்கள் மனம் சொல்வதை கேளுங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கேன்வாஸ்
மீனம்
மற்றவர்களுக்கு பதிலளிப்பது உங்களுக்கு கடினமான பணியாக இருக்கலாம். உங்கள் கடந்தகால செயல்கள் குறித்து தற்போது உங்களுக்கு நிறைய குற்ற உணர்வு ஏற்படலாம். காலம் விரைவில் உங்களுக்கு இன்னொரு வாய்ப்பை வழங்கும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு இறகு
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.