Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசிக்காரர்கள் நிதி முதலீட்டை விற்பதில் கவனம் தேவை... (06.03.2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசிக்காரர்கள் நிதி முதலீட்டை விற்பதில் கவனம் தேவை... (06.03.2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

எதிர்பாரா விதமாக உங்களது முன்னாள் காதலர் இன்று உங்களை தொடர்பு கொண்டு இயல்பாக பேசி கொண்டிருக்கலாம். உங்களது இன்றைய வேலை அனைத்துமே சிறப்பாக முடிவதை நீங்கள் பார்க்கலாம்.

  மேஷம்:

  நீங்கள் அடிக்கடி ஒரு சலிப்பான வாழ்க்கையை வாழ்வதாக உணர்ந்தால் உற்சாகத்தை நோக்கி நகர இன்றி அடியெடுத்து வைக்கலாம். துன்பமான நேரம் தொடரும் பட்சத்தில் நீங்கள் நன்றாக உணர இன்று புதிய உறவுகள் மற்றும் புதிய தொடர்புகளை உருவாக்க முயற்சி செய்யலாம். இது உங்களது வாழ்க்கையை இயல்பாக மாற்ற உதவும். பணவிஷயத்தில் இருக்கும் சிக்கல்கள் விரைவில் சரியாகும். மனதை அமைதியாக வைக்க சில வீட்டு தாவரங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சீசா

  ரிஷபம்:

  நீண்ட நாட்களாக உங்களை தொந்தரவு செய்த விஷயங்களை தீர்க்க இன்று சிறப்பான நாள். குறிப்பாக குடும்பத்தினர் சம்பந்தப்பட்டிருக்கும் விஷயத்தை இழுத்தடிக்காமல் உடனடியாக இன்று தீர்க்கலாம். உங்கள் வீடு தேடி உங்களுக்கான ஒரு நல்ல வாய்ப்பு வரலாம். இன்றைய நாளின் போது சில சமயத்தில் நீங்கள் கோபம் மற்றும் எரிச்சல்படலாம். நிதானம் தவற வேண்டாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பெட்டிக்குள் இருக்கும் ஸ்பிரிங்

  மிதுனம்:

  எந்தவொரு கலந்துரையாடலின் போதும் கூர்ந்து கவனிப்பது உங்கள் இயல்பு. ஆனால் இப்போது உங்கள் எண்ணங்களை முன்வைக்க வேண்டிய நேரம் இது. அதே போல கடந்த கால சம்பவம் மீண்டும் நினைவுக்கு வரலாம். எதிர்பாரா விதமாக உங்களது முன்னாள் காதலர் இன்று உங்களை தொடர்பு கொண்டு இயல்பாக பேசி கொண்டிருக்கலாம்.  உங்களது இன்றைய வேலை அனைத்துமே சிறப்பாக முடிவதை நீங்கள் பார்க்கலாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மூங்கில் செடி

  கடகம்:

  வேலை சம்பந்தமான திடீர் பயணம் இன்று வர வாய்ப்புள்ளது. நீங்கள் நீண்ட காலமாக காத்துகொண்டிருந்த ஒரு ப்ராஜக்டிற்கு இன்று ஒப்புதல் கிடைக்க கூடும். இன்று நீங்கள் உணர்ச்சிவசப்பட வாய்ப்பு அதிகம் என்பதால் மனைவியிடம் பேசும்போது ஜாக்கிரதையாக இருங்கள். வீட்டிற்கு ஒரு புதிய செல்லப்பிராணியை வாங்க நினைத்திருந்தால் இன்று தாராளமாக வாங்கலாம். இன்று புதிய முயற்சியைத் தொடங்க மேற்கு திசை சாதகமாக இருக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அருவ அதாவது கருத்தியல் கலை

  சிம்மம்:

  பல புதிய விஷயங்கள் மீது உங்களுக்கு ஆர்வம் பிறக்கும். நாள் முழுவதும் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். எந்தவொரு சீரற்ற பழக்கமும் உங்கள் வழக்கத்தை சீர்குலைக்கலாம் என்பதால் இன்றைய தினம் அவற்றை நிராகரிக்க முயற்சி செய்யுங்கள். இன்று கிடைக்கும் ஒரு புதிய அறிமுகம் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறத் தொடங்கலாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரோஜா செடி

  கன்னி:

  விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உங்களது நீண்ட கால எண்ணத்திற்கு ஏற்ப புதிய தொழில் தொடங்குவது பற்றிய சில யோசனைகள் உங்களுக்கு இன்று தோன்ற கூடும். பிஸியான வேலைக்கு நடுவே பழைய நண்பர்களை சந்திக்க கூடும். வேலை தொடர்பான இன்றைய பயணம் நன்மை பயக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சைகை மொழி

  துலாம்:

  வாழ்க்கையில் ஸ்மார்ட் ஆப்ஷன்கள் பலனளிக்கும் ஆனால் நீண்ட காலம் நீடிக்காது என்பதை உணர்ந்தவர்கள் நீங்கள். எனவே சில புதிய விதிகளை சுற்றி உங்கள் வாழ்க்கையை உருவாக்க நினைத்தால் அதற்கு இன்றைய தினம் சிறப்பான நாள். தவிர பழைய விஷயங்களை புதிய முறையில் செய்வதில் இன்று நீங்கள் அதிக மும்முரம் காட்டுவீர்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - முழுவதும் பொருட்கள் நிறைந்த ஒரு தட்டு

  விருச்சிகம்:

  உங்கள் உடனடி ஆசைகளை நிறைவேற்ற உங்களை நீங்கள் முதலில் நம்ப வேண்டும். நீண்ட நாளாக உங்கள் மனதில் இருக்கும் சில விஷயங்கள் நிறைவேறுவதை இன்று நீங்கள் காணலாம். அதே போல நிதி முதலீடுகளை விற்பது பற்றி சிந்திக்க இன்று நல்ல நாள் இல்லை.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கருப்பு கண்ணாடி

  தனுசு:

  குடும்பம் மற்றும் வேலை என பல விஷயங்களை ஒரே நேரத்தில் கையாள முயற்சிப்பீர்கள். ஆனால் இதை நீங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டியிருக்கலாம். பணியிடத்தில் உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுடன் தெளிவாக பேச வேண்டும், அனுமான அடிப்படையில் எதையும் சொல்லாதீர்கள். உங்கள் மூத்தவர் சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புவார். புதிய பார்ட்னர்ஷிப்பிற்கு இன்று உகந்த நாள் அல்ல.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அணில்கள்

  மகரம்:

  உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இன்று உணரலாம். உங்களது பழைய நண்பர்கள் சிறந்த நம்பிக்கைக்குரியவர்கள் என்பதை தெரிந்து கொள்வீர்கள். கண்ணில் பார்வை குறைபாடு ஏற்படலாம். எனவே கண் ஆரோக்கியத்தில் இன்று கவனம் செலுத்துங்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புறா

  கும்பம்:

  உங்களைச் சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். ஆன்மீக நடைமுறைகளில் ஈடுபட இன்று உங்களுக்கு சிறந்த நாள். சில செல்வாக்கு மிக்கவர்களை இன்று நீங்கள் சந்திக்க வாய்ப்பு உள்ளது. வீட்டில் நேரத்தை செலவிட விரும்புவீர்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உயரமான கண்ணாடி

  மீனம்:

  உங்களது பழைய நண்பர்களை இன்று திடீரென சந்திக்கலாம். உங்கள் ஆழ் மனதில் பதிந்திருக்கும் சில விஷயங்கள் உங்களுக்கு கனவாக வந்து யோசிக்க வைக்கும்.குழந்தைகளுக்கு ஒரு நல்ல உரையாடலும் ஈடுபாடும் இன்றைய தினம் தேவைப்படலாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இறகு
  Published by:Murugesh M
  First published:

  Tags: Oracle Speaks

  அடுத்த செய்தி