Home /News /spiritual /

அடுத்தடுத்து விடுமுறை.. பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முக்கிய கோரிக்கை

அடுத்தடுத்து விடுமுறை.. பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முக்கிய கோரிக்கை

திருப்பதி

திருப்பதி

Tirumala Tirupati Devasthanams : தொடர் விடுமுறைக்கு ஏற்ப பக்தர்கள் தங்கள் பயண திட்டத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tirupati, India
    வரிசையாக வர இருக்கும் விடுமுறை நாட்கள் மற்றும் புரட்டாசி மாதத்தை கருத்தில் கொண்டு வர இருக்கும் நாட்களில் பக்தர்கள் அதிக பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

    அடுத்து வர இருக்கும் நாட்களில் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு மண்டபம் மற்றும் சுவாமி தரிசன வரிசைகள் ஆகியவற்றில் மிகவும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டி நிலை ஏற்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள்,ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் ஆகியோர் தங்கள் திருமலை பயண திட்டத்தை அதற்கு தகுந்தாற்போல் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டு கொண்டுள்ளது.

    இது தவிர இம்மாதம் 11-ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தொடர் விடுமுறை நாட்கள் ஏற்பட உள்ளன. அதனை தொடர்ந்தும் 19ஆம் தேதி வரை சில விடுமுறை நாட்கள் உள்ளன. இது தவிர செப்டம்பர் 18-ம் தேதி முதல் அக்டோபர் 17-ம் தேதி வரை பெருமாளுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படும் புரட்டாசி மாதம் வர உள்ளது.
    எனவே அக்டோபர் மாதம் 17-ம் தேதி வரை பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும். எனவே திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் இந்த சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சரியாக தங்கள் பயணத்தை திட்டமிட்டு வரவேண்டும்.

    ALSO READ | வரலட்சுமி பூஜை செய்வது எப்படி? அம்பாளை அழைப்பது முதல் நோன்பு கயிறு கட்டுவது வரை.!

    மேலும் சாமி தரிசன வரிசைகள், வைகுண்டம் காத்திருப்பு மண்டம் ஆகியவற்றில் மிகவும் பொறுமையாக காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டு செல்ல வேண்டும் என்று தேவஸ்தான நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து விட்ட நிலையில் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் இன்னும் சுமார் ஒரு மாத காலம் வரை மற்ற நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று தேவஸ்தான நிர்வாகம் கருதுகிறது.

    செய்தியாளர்: புஷ்பராஜ்- திருப்பதி
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupathi

    அடுத்த செய்தி