திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். கொரோனா தொற்று அச்சம் காரணமாக திருமலைக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை தேவஸ்தானம் முன்னெடுத்து வருகிறது. கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் கருத்தில் கொள்ளப்பட்டது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் என்று கூறப்படும் பரமபத வாசல் திறந்திருக்கும். எனவே அடுத்த மாதம் 13 ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் என்ற எண்ணிக்கையிலும், ஜனவரி மாதத்தின் மற்ற நாட்களில் தினமும் 10,000 என்று எண்ணிக்கையிலும் இலவச தரிசன டோக்கன் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதியில் ஏழுமலையானை வழிபட வரும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. இதன்படி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் மற்றும் இதர வேலையாக திருமலைக்கு வருவோர் அலிபிரி சோதனைச்சாவடியை கடக்கும் முன், 48 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா தொற்று பரிசோதனை செய்ததற்கான ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ், கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் ஆகியவற்றை உடன் கொண்டு வந்து அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும். மேற்கண்ட சான்றிதழ்களை காண்பித்தவர்கள் மட்டுமே திருமலைக்கு செல்லவும், ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.