Home /News /spiritual /

தொடர் விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. இலவச தரிசனத்திற்கு 48 மணி நேரம்..

தொடர் விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. இலவச தரிசனத்திற்கு 48 மணி நேரம்..

திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான்

இலவச தரிசனத்திற்காக திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் இருக்கும் 62 அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், இலவச தரிசனத்திற்கு 48 மணி நேரம் ஆவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தொடர் விடுமுறை காரணமாக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தொடர்ந்து, நாளை ஞாயிறுக்கிழமை என்பதால் திருப்பதி மலைக்கு ஏராளமான அளவில் பக்தர்கள் வந்து குவிந்துள்ளனர்.

    இதனால் திருப்பதி மலையில் திரும்பிய பக்கமெல்லாம் மனித தலைகளாகவே காணப்படுகின்றன. பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதை முன்னிட்டு 21ஆம் தேதி வரை விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல், இலவச தரிசனத்திற்காக திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் இருக்கும் 62 அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி உள்ளனர். அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் ஐந்து கிலோ மீட்டர் நீள வரிசையில் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே சாமி தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.

    இதனால், இலவச தரிசனத்திற்காக இரண்டு நாட்கள் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Tirumala, Tirupathi

    அடுத்த செய்தி