முகப்பு /செய்தி /ஆன்மிகம் / WATCH LIVE | ஈஷா மகா சிவராத்திரி 2023 : ஈசனுடன் ஓர் இரவு நிகழ்ச்சி.. நேரலை இதோ!

WATCH LIVE | ஈஷா மகா சிவராத்திரி 2023 : ஈசனுடன் ஓர் இரவு நிகழ்ச்சி.. நேரலை இதோ!

ஈசனுடன் ஓர் இரவு

ஈசனுடன் ஓர் இரவு

கோவையில் உள்ள ஈஷா மையத்திலும் மகா சிவராத்திரியை கொண்டாடும் விதமாக ஈசனுடன் ஓர் இரவு என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை ஈஷா மையத்தில் நடைபெறும் ஈசனுடன் ஓர் இரவு சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் கோவையில் உள்ள ஈஷா மையத்திலும் மகா சிவராத்திரியை கொண்டாடும் விதமாக ஈசனுடன் ஓர் இரவு என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஈஷா மஹாசிவராத்திரி தியானலிங்கத்தில் பஞ்ச பூத ஆராதனையுடன் தொடங்கும். தொடர்ந்து லிங்க பைரவி மகா யாத்திரை நடைபெறும். அதற்குப் பின் சத்குருவின் சொற்பொழிவு, நள்ளிரவு தியானங்கள் ஆகியவை நடக்கும். பின் கண்கவர் 3D ப்ரொஜெக்ஷன் வீடியோ மூலம் ஆதியோகி திவ்ய தரிசனம் அரங்கேறும்.

First published:

Tags: Isha yoga centre, Jaggi vasudev, Maha Shivaratri, Sadhguru