தீபாவளிக்கான திருவிழாக்கள் ஐந்து நாட்கள் நீடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தீபாவளிக்கான திருவிழாக்கள் ஐந்து நாட்கள் நீடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கோப்புப்படம்.

தீபாவளிக்கான திருவிழாக்கள் ஐந்து நாட்கள் நீடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது தந்தேராஸ் கொண்டாட்டத்துடன் தொடங்குகிறது.

  • Share this:
தீபாவளியை ஒரு நாள் பண்டிகையாக நாம் அறிவோம். ஆனால் தீபாவளிக்கான திருவிழாக்கள் ஐந்து நாட்கள் நீடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது தந்தேராஸ் கொண்டாட்டத்துடன் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து நரக சதுர்தாஷி (சோதி தீபாவளி), தீபாவளி, பத்வா (கோவர்தன் பூஜை) மற்றும் பாய் தூஜ் ஆகிய பண்டிகைகளாக கொண்டாடப்படுகிறது.

நரக சதுர்தாஷி அல்லது சோதி தீபாவளி பண்டிகை முக்கியமான ஒன்றாகும். ரூப் சதுர்தாஷி என்றும் அழைக்கப்படும் சோதி தீபாவளியானது தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக கொண்டாடப்படுகிறது. நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளிலும், மக்கள் தங்கள் வீடுகளை விளக்குகள், மெழுகுவர்த்திகளையும் அலங்கரிக்கின்றனர். இது பொதுவாக தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக கொண்டாடப்பட்டாலும், இந்த ஆண்டு, சதுர்தாஷி மற்றும் அமாவாசை இரண்டும் ஒரே நாளில் வருகிறது.

சோதி தீபாவளி 2020 கொண்டாடும் தேதி மற்றும் நேரம்

தீபாவளி அல்லது சோதி தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் 14 சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. சதுர்தாஷி திதி நவம்பர் 13 மாலை 5:59 மணிக்கு தொடங்கி நவம்பர் 14 மதியம் 2:17 மணிக்கு முடிவடையும். தீபாவளி நவம்பர் 14ம் தேதி அதிகாலை 5:23 மணி முதல் காலை 6:43 மணி வரை நீடிக்கும்.

தீபாவளி 2020: முக்கியத்துவம் மற்றும் வரலாறு

சோதி தீபாவளி கொண்டாட்டத்துடன் தொடர்புடைய பல கதைகள் உள்ளன. இது திருவிழாவின் முக்கியத்துவத்தை ஆழமாக உணர்த்துகிறது. பிராக்யோதிஷ்பூர் மாகாணத்தின் (நேபாளத்தின் தெற்கே உள்ள மாகாணம்) அரக்க மன்னரான நரகாசுரன், தனது குடிமக்களையும் பெண்களையும் தொந்தரவு செய்தார். பல்வேறு கடவுள்களின் 16,000 மகள்களை சிறையில் அடைத்தார்.



அதிதி தெய்வத்தின் அற்புதமான காதணிகளையும் பறித்தார். அனைத்து தெய்வங்களுக்கும் ஒரு தாயாகக் கருதப்பட்டார் அதிதி. இந்தச் சம்பவம் கிருஷ்ணரின் மனைவி சத்தியபாமாவின் காதுகளை எட்டியபோது, அவர் கோபமடைந்து தீமையை முடிவுக்குக் கொண்டுவர எண்ணி கிருஷ்ணரை அணுகினார். பகவான் கிருஷ்ணர் அரக்கனை தோற்கடித்து சிறையில் அடைத்து அனைத்து மகள்களையும் விடுவித்தார்.

மேலும் அதிதி தெய்வத்தின் விலைமதிப்பற்ற காதணிகளையும் மீட்டெடுத்தார். இந்த நாள் சோதி தீபாவளி என்று குறிக்கப்பட்டுள்ளது. பின்னர் நரகாசுரனும் கொல்லப்பட்டார். நரகாசுரன் தாய் பூதேவி தனது மகனின் மரணம் துக்கத்திற்குப் பதிலாக கொண்டாடப்பட வேண்டும் என்று அறிவித்ததாக மேலும் சில தகவல்கள் கூறுகின்றன. எனவே நரகாசுரனைக் கொன்ற நாள் வருடந்தோறும் தீபாவளி திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
Published by:Rizwan
First published: