நீங்கள் ஒரு திரைப்படம் அல்லது தொலைக்காட்சி நட்சத்திரமாக விரும்பினால் உங்கள் பிறந்த தேதியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 6, 3, 1 மற்றும் 2 ஆகிய எண்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
பெரும்பாலான ஆளுமை நிறைந்தவர்களாக இருப்பவர்கள் தங்கள் பிறந்த தேதியில் எண் 6ஐ பெற்றுள்ளனர்.
இவர்கள் மற்றவர்களால் போற்றப்படுகிறார்கள், நேசிக்கப்படுகிறார்கள் மற்றும் வணங்கப்படுகிறார்கள். ஒருவருக்கு அபாரமான திறமை இருந்தும், மறைந்திருக்கும் திறமையை வெளிக்காட்ட வாழ்க்கையில் ஒரு தருணம் கிடைக்காவிட்டால், அதனால் எந்த பயனும் இல்லை. ஆனால் எண் 6ஐ பெற்றிருப்பவர்களுக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும்.
இது அவரை பொறுப்பாகவும், வெற்றியை அடைவதில் உறுதியாகவும் ஆக்குகிறது. மற்றவர்களை ஈர்க்கும் குணமும் மற்றும் சுற்றியுள்ள அனைவரையும் மகிழ்விக்கும் இயல்பான குணமும் இவர்களுக்கு உள்ளது.
இலட்சியம் இல்லாமல் உலகில் உயர்வது கடினம். கனவு காண துணிந்தவர்கள்தான் வானத்தை தொடுவார்கள். எண் 3ஐ பெற்றிருப்பவர்கள் எப்போதும் லட்சியவாதிகளாக இருப்பார்கள். இவர்களுக்கு மற்றவர்களை கட்டுப்படுத்தும் சக்தியும், சிறந்த நினைவாற்றலும் உள்ளது.
இது அவரை வெற்றி பெறும் நபராக மாற்றுகிறது. மேலும் சிறந்த படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், ஒரு நல்ல திட்டமிடுபவராகவும் ஆக்குகிறது. இதன் விளைவாக அவரது சமூக வட்டமும் அதிகரித்து திரைப்படத்துறையில் அவரால் ஜொலிக்க முடியும்.
உங்கள் பிறந்த தேதியில் எண் 1 இருப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் எண் 1ஐ பெற்றிருப்பவர்கள் தங்கள் திறமையை எளிதாக வெளிக்காட்ட கூடிய நபராக இருப்பார்கள். மிகவும் தன்னம்பிக்கையுடன் தான் எடுக்கும் காரியங்களை செய்தும் முடிப்பார்கள்.
எண் 2 என்பது சுறுசுறுப்புத் தன்மையை குறிக்கும். ஒருவருடைய பிறந்த தேதியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எண் 2 இருந்தால் அவரால் சிறிது நேரம் ஓரிடத்தில் நிலையாக உட்கார்ந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு சுறுசுறுப்பானவராக இருப்பார்கள். மேலும் மற்றவர்களுடன் மிக விரைவாக நட்பை ஏற்படுத்தி பழகும் தன்மையுடையவராக இவர்கள் விளங்குவதால் திரைப்படம் அல்லது தொலைக்காட்சி துறையில் இது இவர்களுக்கு நன்றாக கைகொடுக்கும்.
எனவே, நீங்கள் நடிகராக ஆசைப்பட்டால் உங்கள் பிறந்த தேதியில் 6, 3, 1 மற்றும் 2 எண்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறங்கள் : நீலம் மற்றும் வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
நன்கொடைகள்: லட்சுமி நாராயண பூஜை மற்றும் லட்சுமி தேவி சடங்குகளை செய்யுங்கள். உங்கள் அலுவலக மேஜையில் அல்லது வீட்டில் படிகாரத்தை வைப்பது நலம் தரும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Tamil News