Home /News /spiritual /

குற்றாலநாதர் கோவிலில் சித்திரை விஷு திருவிழா... திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்...

குற்றாலநாதர் கோவிலில் சித்திரை விஷு திருவிழா... திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்...

குற்றாலநாதர் கோவிலில் சித்திரை விஷு திருவிழா

குற்றாலநாதர் கோவிலில் சித்திரை விஷு திருவிழா

Chithirai Vishu Festival at Courtallam Nadar Temple | தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சித்திரை விசு திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் பிரசித்திபெற்ற சிவ தலமான  திருகுற்றாலநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. திரிகூட இராசப்ப கவிராயர் பாடிய குற்றால குறவஞ்சியில் கோயிலின் சிறப்பு பற்றி எழுதப்பட்டுள்ளது. இந்த திருக்கோவில் 3ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என திருஞானசம்பந்தர் தனது தேவாரத்தில் எழுதியுள்ளார். இந்த திருக்கோவில் சந்தனாதி தைல காப்பு பிரசித்தி பெற்றதாகும். சுவாமி தலையைத் தொட்டு அகத்தியர் அழுத்தியதால் ஈசனுக்கு இங்கு தினமும் காலையில் தைல அபிஷேகம் நடைபெறுகிறது.

    பசும் பால், இளநீர், சந்தனம் மற்றும் 42 வகையான மூலிகைகளை 90 நாட்கள் கழித்து , அந்தச் சாற்றில் நல்லெண்ணெய் சேர்த்து தைலம் தயாரிக்கிறார்கள். இந்த அபிஷேக தைலம் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. வாதநோய், வாத வலி, உடல் வலி, முதுகு வலி, தீராத தலைவலி, வயிற்று வலி, கண் வலி உள்ளவர்கள், இதனை தடவி வந்தால் சுகம் பெறலாம்.

    தினமும் அர்த்த ஜாம பூஜையில் குற்றால நாதருக்கு ‘குடிநீர் நைவேத்தியம்’ செய்யப்படுகிறது. அதாவது சுக்கு, மிளகு, கடுக்காய் மற்றும் சில மூலிகைகளைக் கொண்டு கசாயம் தயாரித்து நைவேத்தியம் செய்கிறார்கள். அர்த்த ஜாம பூஜைக்கு பிறகு வழங்கப்படும் இந்த கசாயத்தை வாங்கிக் குடித்தால் நீரிழிவு, புற்று நோய், அல்சர், சளி, இருமல், வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    குற்றாலநாதர் கோவிலில் சித்திரை விஷு திருவிழா தேரோட்டம் இன்று


    சிவபெருமானின் பஞ்ச சபைகளில் சித்திர சபையாக திருக்குற்றால நாதர் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த 5ஆம் தேதி சித்திரை விசுத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
    விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. முதலில் விநாயகர் தேர் இழுக்கப்பட தொடர்ந்து முருகரன் தேரும் அதனை தொடர்ந்து இத்திரு தலத்தின் அம்மையான குழல்வாய் மொழியம்மை தேரும் தொடர்ந்து சுவாமி திருக்குற்றாலநாதர் அலங்கரிக்கப்பட்ட நான்கு தேரில் எழுந்தருளி திருத்தேரோட்டம் நடைபெற்றது.

    மேலும் படிக்க... சித்திரைப் பெருவிழா நான்காம் நாள் வீதி உலா... தங்கப்பல்லக்கில் மீனாட்சியும் சொக்கரும்...

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகள் வழியாக சுவாமி அம்பாள் மற்றும் வினாயகர் முருகர் தேர் இழுக்கப்பட்டு மீண்டும் நிலையம் வந்தடைந்தது இதில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Hindu Temple, Tenkasi

    அடுத்த செய்தி