Home /News /spiritual /

சித்திரையில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாதா? உண்மை என்ன?

சித்திரையில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாதா? உண்மை என்ன?

பிறந்த குழந்தை

பிறந்த குழந்தை

சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் அதிகபட்ச வெயில் காலம் ஆகையால் குழந்தைக்கும் தாய்க்கும் உடல் உஷ்ணத்தினால் பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் தான் சித்திரை மாதப் பிறப்பை தள்ளி வைத்தார்கள் நம் முன்னோர்கள்...

சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு ஆகாது என்று பலரும் சொல்லிக் கேட்டு இருப்பீர்கள். உண்மையில் ஏன் சித்திரை மாதம் குழந்தை பிறக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்? குழந்தை பிறந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு திருமதி.தேச மங்கையர்க்கரசி அவர்கள் ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில்  விளக்கமாக பதில் அளித்துள்ளார்.

சித்திரை மாதம் குழந்தை பிறந்தால் தகப்பனுக்கு ஆகாது என்று கூறுகிறார்கள். இது உண்மையா? 

கண்டிப்பாக உண்மையில்லை. சித்திரை மாதம் கடுமையான வெயில் காலம். அக்னி நட்சத்திரம் வரக்கூடிய காலம். அந்த நேரத்தில் பிரசவிப்பது என்பது ரொம்ப கொடுமையாக இருக்கும். அத்துடன் தாய், குழந்தை இரண்டு பேருக்கும் புழுக்கமாக இருக்கும், அதனால்தான் நம் முன்னோர்கள் அப்படி சொல்லி வைத்தார்கள். அந்த காலத்தில் ஏசி போன்ற வசதிகள் கிடையாது.  இப்போது வீட்டுக்கு வீடு ஏசி வந்து விட்டது. அதுமட்டுமின்றி  உஷ்ணத்தினால் ஏற்படும் நோய் நொடிகள் தாயை பாதிக்கும் அதனால் குழந்தைக்கும் முடியாமல் போகக்கூடும் என்பதனாலேயே இப்படி சொல்லி வைத்துள்ளார்கள்..

சரி அப்படி சித்திரையில் பிறந்த குழந்தை எப்படி இருக்கும்? ஜாதகத்தில் ஏதும் பிரச்சனை இருக்குமா? ஜோதிட ரீதியாக சொல்ல முடியுமா?

சித்திரையில் ஒரு குழந்தை பிறந்தால் அது அந்த ராம பிரானை போலவே இருக்கும்... அழகிலும், வீரத்திலும், குணத்திலும், திறமையிலும் சிறந்து விளங்குவார்கள்.

அது எப்படி அவ்வளவு உறுதியாக சொல்ல முடியும்? காரணம்? 

சித்திரையில்தான் சூரியன் மேஷ ராசியிலே பிரவேசிக்கிறார். அதனால் அந்த காலத்தில் சூரியன் உச்சத்தில் இருப்பார். அப்படி மேஷத்தில் உச்சத்தில் இருக்கும்போது குழந்தை  பிறந்தால் ஜாதகப்படி, அதிகாரம் மிக்கவர்களாகவும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்களாகவும் செல்வாக்கும் மிக்கவர்களாகவும் பலருக்கும் எஜமானராகவும் இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் நல்ல யோகத்தையும் கொடுத்துவிடும்.

பெண் குழந்தை பிறக்கவே கூடாதாம் ஏன்? 

சித்திரையில் பிறக்கும் ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி வீரத்திலும் நியாயம், தர்மம் எதுவாக இருந்தாலும் இதுதான் சரி இதுதான் தவறு என்று நேரிடையாக சொல்லும் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள். அதனால் பிறக்கும் குழந்தை பெண்ணாக இருக்கக்கூடாது என்று நினைத்தனர். ஏனென்றால் அந்த காலத்தில் பெண் என்பவள் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற கட்டுபாடுகள் அதிகமாக இருந்தது. அதனால் சித்திரையில் பிறந்த பெண்ணை திருமணம் செய்ய முன் வரமாட்டார்கள். அவள் உண்மையை உரக்க சொல்லும் ஆற்றல் உடையவளாக இருப்பாள். அது புகுந்த வீட்டிற்கு ஏற்புடையதாக இருக்காது என்றே அவ்வாறு சொல்லியுள்ளனர். ஆக சித்திரையில் பெண் குழந்தை பிறந்தால் தகப்பனுக்கு ஏதும் ஆகாது.

Also see... குழந்தை வரம் அருளும் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை கோவிலின் சிறப்புகள்!

ஆனால் இதுநாள்வரை சித்திரையில் என் குழந்தை பிறந்ததால்தான் என் குடும்பத்தில் பிரச்னைகள் என்று அனைவரும் நினைத்துவிட்டோம்.. இதனை எப்படி மாற்றுவது? பரிகாரம் உண்டா?

பரிகாரம் உண்டு... திருச்செந்தூர் சென்று முருகனை பார்த்து மனதார என் குழந்தையை உனக்கு தத்து கொடுக்கிறேன் முருகா என்று சொல்லி, இனி இந்த குழந்தைக்கு வரும் நன்மை, தீமை அனைத்தையும் நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டிகொண்டு வாருங்கள். அப்படி நேரில் போக முடியாதவர்கள் செவ்வாய்க்கிழமையில் வீட்டிலேயே முருகன் படத்தின் மு நின்று வேண்டி கொண்டால் நல்லது. பிறகு அந்த குழந்தைக்கு திருமணம் காலம் வரும் போது முருகனிடம் இருந்து குழந்தையை எடுத்துக்கொள்கிறேன் என்று சொல்லி விட்டு திருமணம் செய்து வைக்கலாம்.


Also see...  குழந்தை வரம் அருளும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை 108 போற்றி!

சித்திரையில் பிறந்தால் மட்டும்தானா பிரச்சனைகள் வரும். மற்ற மாதங்களில் பிறந்தவர்களுக்கு துன்பம் வராமல் இருக்கிறதா என்ன? எந்த மாதத்தில் குழந்தை பெற்றாலும் பெற்றவர்களுக்கு வரும் துன்பம் வந்துதான் ஆகும்... அதனால் சித்திரையில் பிறந்த குழந்தைகளை இனி குறையாக நினைக்காதீர்கள்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Child, New born baby

அடுத்த செய்தி