சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் இன்றி ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றம்

பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடந்தது

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் இன்றி ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றம்
கோவில் கொடியேற்றம்
  • News18
  • Last Updated: June 19, 2020, 4:14 PM IST
  • Share this:
உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆரூத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவால் ஆனி திருமஞ்சன திருவிழா எளிமையான முறையில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.

இன்று காலை கொடியேற்றத்துக்கு வந்த தீட்சிதர்களுக்கு முகக் கவசம் அணிவித்து காவல்துறையினர் உள்ளே அனுப்பி வைத்தனர். கோவிலின் உள்ளே சென்ற தீட்சிதர்கள் நடராஜர் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தனர். பின்னர் சிறப்பு ஆராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தது.

முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருகை புரிந்த விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார் மற்றும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் குமார் உள்ளிட்டோர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.


வருடா, வருடம் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வில் பொதுமக்கள் யாருக்கும் அனுமதி இல்லாததால் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது

கோவிலின் நான்கு வீதிகளில் கீழ வீதி தவிர மற்ற மூன்று வீதியின் வாயில்கள் வழியே பொதுமக்கள்  செல்ல முடியாதவாறு தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டுள்ளன. கீழ வீதி வழியாக கொடி ஏற்றுவதற்கு தேவையான தீட்சிதர்கள் மட்டுமே  உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
First published: June 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading