ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சிதம்பரம் கோவிலில் முதல் முறையாக பக்தர்கள் இன்றி ஆனி திருமஞ்சன திருவிழா

சிதம்பரம் கோவிலில் முதல் முறையாக பக்தர்கள் இன்றி ஆனி திருமஞ்சன திருவிழா

சிதம்பரம் கோவில்

சிதம்பரம் கோவில்

லட்சக்கணக்கான பேர் பங்கேற்கும் ஆனி திருமஞ்சன தரிசன விழா முதல்முறையாக பக்தர்கள் இன்றி கோயில் வளாகத்திலேயே நடைபெறுகிறது

  • News18
  • 2 minute read
  • Last Updated :

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன விழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை.

இந்நிலையில் தீட்சிதர்கள் மட்டுமே பங்கேற்று தேரோட்டம், தரிசனம் அனைத்தையும் கோவில் உள்ளேயே நடத்த வருவாய் துறையினர் காவல் துறையினர் அனுமதி வழங்கியிருந்தனர். திருவிழாவை நடத்த 150 தீட்சிதர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 2 தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தீட்சிதர்கள் எண்ணிக்கை 25 ஆக குறைக்கப்பட்டது. மேலும், 5 இதர பணியாளர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

அவர்கள் மட்டும் கோவிலுக்குள் சென்று நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு அபிஷேக ஆராதனை உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்தி, கோவிலுக்கு உள்ளே உள்ள தேவ சபையில் சுவாமியின் சிலை வைக்கப்பட்டது.

பின்னர் நேற்று மதியத்துக்கு மேல் வருவாய்த்துறையினர் திருவிழாவில் நடத்துவதற்காக கூடுதல் தீட்சிதர்களை கோவிலுக்குள் அனுமதித்தனர். இதையடுத்து கோவிலின் உள்ளே உள்ள தேவ சபையில் இருந்து ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் சிவகாமசுந்தரி கொண்டு செல்லப்பட்டனர். அங்கு நேற்று இரவு லட்சார்ச்சனை நடந்தது.  இதில் அனுமதிக்கப்பட்ட தீட்சிதர்கள் மட்டுமே பங்கேற்றனர்.


படிக்க: தமிழகத்தில் கொரோனா பரவல் விகிதம் - அதிகம்... குறைவு... எங்கெங்கே..?

படிக்க: சாத்தான்குளம் தந்தை, மகனுக்கு கடைசி நேரத்தில் நடந்தது என்ன? - News 18க்கு கிடைத்த பிரத்யேக காட்சிகள்


இந்நிலையில் இன்று நடைபெறும் தரிசன விழாவில் 300 தீட்சிதர்கள் சுழற்சி முறையில் அனுமதிக்கப்படுகின்றனர். அதிகாலை மகா அபிஷேகமும் அதைத்தொடர்ந்து திருவாபரண அலங்காரமும் சித்சபையில் ரகசிய பூஜை சிறப்பு ஆராதனை உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறும்.

இந்த சிறப்பு பூஜைகளுக்கு 150 தீட்சிதர்களும் 2 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ நடராஜர் சிவகாமி சுந்தரி  ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து கருவறைக்கு கொண்டுசெல்லப்படுகிறது இதற்கு 150 தீட்சதர்கள் சுழற்சி முறையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் லட்சக்கணக்கான பேர் பங்கேற்கும் ஆனி திருமஞ்சன தரிசன விழா முதல்முறையாக பக்தர்கள் இன்றி கோயில் வளாகத்திலேயே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாதுகாப்பு பணிக்காக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் மற்றும் சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

First published:

Tags: Chidambaram