ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

குருவுடன் இணைந்த செவ்வாய்: குரு மங்கள யோகத்தால் நன்மைகள் பெறும் ராசியினர் (விருச்சகம் முதல் மீனம் வரை)

குருவுடன் இணைந்த செவ்வாய்: குரு மங்கள யோகத்தால் நன்மைகள் பெறும் ராசியினர் (விருச்சகம் முதல் மீனம் வரை)

செவ்வாய் பகவான்

செவ்வாய் பகவான்

இயற்கையான சுப கிரகமான குருவுடன் செவ்வாய் இணைவது இயற்கையான பாவ கிரகமான செவ்வாயின் கெடுபலன்களைக் குறைக்கும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நாட்கள் அல்லது காலம் வரை ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும். ஒரு ஆண்டுக்கு மேலாக ஒரே ராசியில் இருக்கும் குரு, ராகு, கேது போல, 1 – 2 மாதங்களுக்கு குறுகிய கால பெயர்ச்சியாக செவ்வாய், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் உள்ளன. செவ்வாய் ஒரு ராசியில் 30 – 50 நாட்களுக்கு சஞ்சரிக்கும் குறுகிய கால பெயர்ச்சி என்பதால் செவ்வாய் பெயர்ச்சியின் நன்மைகளும் தாக்கமும் பெரிதாக கண்டுகொள்ளப்படுவதில்லை. மே மாதம் 17 ஆம் தேதி மீனத்துக்கு பெயர்ச்சி ஆன செவ்வாய், ஜூன் 27 அன்று மேஷத்துக்கு பெயர்ச்சி ஆகும். தற்போது செவ்வாய் மீனத்தில் சஞ்சரிக்கிறது. மீனத்தில் குருவுடன் இணைந்திருப்பது எத்தகைய பலன்களை கொடுக்கிறது என்று பார்க்கலாம்.

குருவுடன் இணைந்த செவ்வாய்:

தற்போது மீனத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் குருவுடன் செவ்வாய் இணைந்திருப்பது குரு மங்கள யோகத்தை உண்டாகியிருக்கிறது.

ஆண்டுக்கு ஒரு முறை குருவுடன் இணையும் செவ்வாய் இந்த முறை இணைந்திருப்பது மிகவும் சிறப்பான காலமாக கருதப்படுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

1. குருவின் ராசிகளில் ஒன்றான மீன ராசியிலேயே கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு குருவுடன் இணைந்து சுப பலன்களை வழங்கும்.

2. ஆட்சி பெற்ற குருவுடன் செவ்வாய் இணைவது சாதகமான பெயர்ச்சியாகும். வேத ஜோடித்தில் இயற்கையான சுப கிரகமான குருவுடன் செவ்வாய் இணைவது இயற்கையான பாவ கிரகமான செவ்வாயின் கெடுபலன்களைக் குறைக்கும்.

விருச்சிக ராசிக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும்

வேலை மற்றும் வணிகத்தில் வெற்றி கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உறவுகளில் கருத்துவேறுபாடுகள் இருப்பது நீங்க மனதில் இருப்பதை வெளிப்படையாக பேச வேண்டும்.

தனுசு ராசிக்கு சொத்து சிக்கல்கள் தீரும்

வீடு மற்றும் நிலத்துக்கு அதிபதியான செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காம் குருவுடன் இணைந்திருப்பது சொத்து, வீடு, நிலம் சம்மந்தமான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும். கோபத்தை மட்டும் கொஞ்சம் குறைக்க வேண்டும்.

மகர ராசி புதிய முயற்சிகள் கைகூடும்

புதிய முயற்சிகள் கைகூடும் என்பதால், நீண்ட காலமாக பின்தங்கியிருந்த எல்லாவற்றிலும் தைரியமாக நீங்கள் அடுத்தடுத்த படிகளை நோக்கி செல்லலாம். எதிரிகளால் உங்களிடம் வெற்றி பெற முடியாது. வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் இருக்கும்.

கும்ப ராசிக்கு வார்த்தைகளில் கவனம் தேவை.

ஏற்கனவே உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் குரு ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது மிகவும் சாதகமான அமைப்பு என்று கூறலாம். ஆனால், செவ்வாய் இணைவதால், பேசும் போது கவனமும், நிதானமும் தேவை. பணம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

Also see... குருவுடன் இணைந்த செவ்வாய்: குரு மங்கள யோகத்தால் நன்மைகள் பெறும் ராசியினர் (மேஷம் முதல் துலாம் வரை)

மீன ராசியினர் கோவத்தை கட்டுப்படுத்த வேண்டும்

ஆட்சி பெற்ற ஜென்ம குருவுடன் செவ்வாய் இணைவது உங்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருந்தாலும், வேலை பளு அதிகரிக்கும். ஓய்வே இல்லாமல் வேலை செய்ய வேண்டியிருக்கும். இதனால் டென்ஷனும் கோபமும் அதிகரிக்கும். எனவே, கோபத்தை கட்டுப்படுத்தும் வழிகளை பின்பற்ற வேண்டும்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Gurupeyarchi, MARS