ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நாட்கள் அல்லது காலம் வரை ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும். ஒரு ஆண்டுக்கு மேலாக ஒரே ராசியில் இருக்கும் குரு, ராகு, கேது போல, 1 – 2 மாதங்களுக்கு குறுகிய கால பெயர்ச்சியாக செவ்வாய், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் உள்ளன. செவ்வாய் ஒரு ராசியில் 30 – 50 நாட்களுக்கு சஞ்சரிக்கும் குறுகிய கால பெயர்ச்சி என்பதால் செவ்வாய் பெயர்ச்சியின் நன்மைகளும் தாக்கமும் பெரிதாக கண்டுகொள்ளப்படுவதில்லை. மே மாதம் 17 ஆம் தேதி மீனத்துக்கு பெயர்ச்சி ஆன செவ்வாய், ஜூன் 27 அன்று மேஷத்துக்கு பெயர்ச்சி ஆகும். தற்போது செவ்வாய் மீனத்தில் சஞ்சரிக்கிறது. மீனத்தில் குருவுடன் இணைந்திருப்பது எத்தகைய பலன்களை கொடுக்கிறது என்று பார்க்கலாம்.
குருவுடன் இணைந்த செவ்வாய்:
தற்போது மீனத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் குருவுடன் செவ்வாய் இணைந்திருப்பது குரு மங்கள யோகத்தை உண்டாகியிருக்கிறது.
ஆண்டுக்கு ஒரு முறை குருவுடன் இணையும் செவ்வாய் இந்த முறை இணைந்திருப்பது மிகவும் சிறப்பான காலமாக கருதப்படுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
1. குருவின் ராசிகளில் ஒன்றான மீன ராசியிலேயே கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு குருவுடன் இணைந்து சுப பலன்களை வழங்கும்.
2. ஆட்சி பெற்ற குருவுடன் செவ்வாய் இணைவது சாதகமான பெயர்ச்சியாகும். வேத ஜோதிடத்தில் இயற்கையான சுப கிரகமான குருவுடன் செவ்வாய் இணைவது இயற்கையான பாவ கிரகமான செவ்வாயின் கெடுபலன்களைக் குறைக்கும்.
குரு மங்கள யோகம் எந்த ராசிகளுக்கு அதிக பலன்களைத் தரும்:
மேஷ ராசிக்கு விபரீத ராஜ யோகம்
மேஷ ராசிக்கு அதிபதியான செவ்வாய் குருவுடன் ஆட்சி பெற்று அமர்ந்திருந்தாலும் பன்னிரண்டாம் வீட்டில் மறைவது என்பது மறைமுக செலவுகளை உண்டாக்கும். அதே போல மேஷத்திற்கு எட்டாம் வீட்டு அதிபதியான விருச்சிகத்தின் அதிபதியும் செவ்வாய் என்பதால் 8 ஆம் அதிபதி 12 ல் மறைவது விபரீத ராஜயோகத்தை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் பணம் வரவு, லாபம், அதிர்ஷ்டம் நீண்ட காலமாக தடைபட்டுக் கொண்டிருந்த செயல்கள் ஆகியவை கைகூடும்.
ரிஷப ராசிக்கு பண வரவு
உங்கள் 7 ம் மற்றும் 12 ம் அதிபதி குருவுடன் இணைந்திருப்பது, திருமண உறவில் நெருக்கத்தை அதிகரிக்கும், தம்பதிகள் இடையே இருந்த கருத்து வேறுபாடு விலகும், பண வரவு மற்றும் தன லாபம் அதிகரிக்கும்.
மிதுன ராசிக்கு அலுவலகத்தில் நல்ல பெயர், பதவி உயர்வு
மீன ராசியில் செவ்வாய் அமர்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில், உங்கள் அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்க உதவும். உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு காத்திருக்கிறது.
கடக ராசிக்கு குடும்பத்தில் அமைதி நிலவும்
கடந்த சில வாரங்களாக இருந்து வந்த குழப்பமான நிலை மற்றும் வீட்டில் அமைதியற்ற சூழல் மாறி நிம்மதியாக உணர்வீர்கள். ஆன்மீக சம்மந்தமான பயணம் செல்லலாம்.
சிம்ம ராசிக்கு எதிலும் கொஞ்சம் கவனம் தேவை
உடல் நலம் முதல் சாப்பிடும் உணவுகள் வரை, வணிகம், முதலீடு என்று எல்லாவற்றிலும் கொஞ்சம் கவனமாக இருக்கவும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டும்.
Also see... செவ்வாய் எம்மாதிரியான யோக பலனை அளிப்பார் தெரியுமா?
கன்னி ராசிக்கு காதல் கைகூடும்
குடும்பம், உறவுகள், பிசினஸ் பார்ட்னர்கள், என்று எல்லா விதமான உறவுகளும் கைகூடும். குறிப்பாக, காதல் கைகூடும் காலம் இது. தடைபட்டிருக்கும் வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும். பண விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.
துலாம் ராசி உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை வேண்டும்
துலாம் ராசிக்கு குரு பகை கிரகம். எனவே, குருவுடன் செவ்வாய் இணைந்திருப்பது நல்ல பலன்களை வழங்காது. உடல் நலத்தின் மீது, கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gurupeyarchi, MARS