ஜாதகத்தில் செவ்வாய் உச்சமாகவோ அல்லது 1,4,9,10ஆம் வீடுகளில் அமர்ந்திருந்து தனது சுய வர்க்கத்திலும் 8 பரல்களைப் பெற்றிருந்தால் ஜாதகன் கோடீஸ்வரனாக உயர்வான். தன் திறமை மற்றும் செயல் ஆற்றும் தன்மையால் பெரும் செல்வம் ஈட்டுவான் என்று ஜோதிடர்கள் கூறுவர்.ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருக்கு நல்ல நிர்வாகத் திறனை தரக்கூடிய கிரகம் செவ்வாய் ஆவார். இந்த செவ்வாய் உடலில் ரத்தத்தை குறிப்பவர். நெருப்பின் சுவரூபம். சிலர் முருகப் பெருமானின் ஸ்வரூபம் என்றும் இவரை சொல்கின்றனர். இவரது நிறம் நல்ல சிவப்பு. இன்று விஞ்ஞானிகள் ராக்கெட் அனுப்பி செவ்வாயின் நிறம் சிவப்பு என்று கண்டு பிடித்து உள்ளனர். எனினும், நமது சித்தர்கள் இதனை அக்காலத்திலேயே சொல்லி விட்டனர்.
மற்றபடி, லக்கினத்திற்கு எந்த பாவங்களில் செவ்வாய் இருந்தால் எந்த மாதிரியான பலனை தருவார் என்பதை இந்த பதிவில் தெரிந்திக் கொள்ளலாம்...
1. லக்கினத்தில் செவ்வாய் இருந்தால்: ஜாதகன் கோபக்காரன். எடுத்தற்கெல்லாம் சட்டென்று கோபம் வரும்! உக்கிரமானவன். சிலருக்கு அடிக்கடி உடற் காயங்கள் ஏற்படும். சிலருக்கு குறைந்த ஆயுளிலேயே போர்டிங் பாஸ் கொடுக்கப்பட்டுவிடும். ஒரு வியாதி போனால் இன்னொரு வியாதி கதைவைத் திறந்து கொண்டு உடனே வரும்! ஜாதகன் சலனபுத்திக் காரணாக இருப்பான். தீரனாகவுன் இருப்பான் சிலர் வன்கன்மையாளராகவும் இருப்பார்கள்.
2. இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: குறைந்த அளவு செல்வம் இருக்கும். கல்வியும் குறைந்த அளவே இருக்கும். சிலர் தீயவர்களுக்கு சேவை செய்வார்கள். வாக்குவாதம் செய்பவர்கள் (argumentative) செவ்வாயின் இந்த அமைப்பு, கல்விக்கும், செல்வத்திற்கும் ஏற்றதல்ல! இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால் அது செல்வத்திற்குக் கேடானது. செல்வம் இருக்காது. அப்படியே தேடிப் பிடித்தாலும் தங்காது அல்லது நிலைக்காது!
3. மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: ஜாதகன் பிடிவாதக்காரன். சாதனையாளன்.செல்வச்சூழல்களை அனுபவிக்கக்கூடியவன். புகழ் பெறுவான். எல்லா வசதிகளும் வந்து சேரும். தனித்தன்மை வாய்ந்தவன்.நீண்ட ஆயுளை உடையவன். தர்ம, நியாயங்கள், நன் நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டுச் சிலர் வாழ்வார்கள்.
4. நான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: உறவுகள், வீடு வாசல், சொத்துக்கள், தாய்ப் பாசம், வாகன வசதி போன்றவைகள் இல்லாத அல்லது கிடைக்காத அல்லது மறுக்கப்பட்டவனாக ஜாதகன் இருப்பான். இது அத்தனையும் எனக்கு இருக்கிறது என்று ஒருவர் சொன்னால் இந்த அமைப்பின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை பட்டுக் கொண்டிருக்கும் ஜாதகன் பெண்களின் மேல் அதீதமான ஈர்ப்பு உள்ளவன். சிலர் பெண்களுக்காக உருகி கோதாவரி ஆறு போல ஓடக்கூடியவர்களாக இருப்பார்கள். மனப் போராட்டங்கள் மிகுந்த ஜாதகம்.
5. ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும். வாழ்க்கை வசதிகள், சொத்துக்களில் குறைபாடுகள் இருக்கும். அல்லது சொத்து, சுகம் இல்லாமல் இருக்கும். சிலர் மனம் வெறுக்கும் சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். தர்ம, நியாயங்கள், நன்நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டு வாழ நேரிடும். சிலர் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர் எடுத்ததெற்கெல்லாம் கோபம் கொள்ளுகின்ற குணத்தை உடையவர்களாக இருப்பார்கள்.
6. ஆறாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: நல்ல கட்டுமஸ்தான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பு இருக்கும். ஜாதகன் ஊராக இருந்தாலும் சரி, போராக இருந்தாலும் சரி, எதிரிகளை துவம்சம் செய்யக்கூடியவனாக இருப்பான். மனதில் பயமே இருக்காது. சிலருக்கு அதீத பெண் ஆசை இருக்கும் அதாவது அதிகமான காம உணர்வுகள் இருக்கும். எப்போதும் காம சிந்தனைகள் மேலோங்கி இருக்கும். சிலர் தங்கள் முயற்சியால் மேன்மை அடைவார்கள். புகழ்பெறுவார்கள்.
7. ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: தர்ம நியாயம் இல்லாத காரியங்களைச் செய்பவான ஜாதகர் இருக்கலாம். சுபக்கிரகங்களின் பார்வை இருந்தால் மேற்கண்ட தீய பலன்கள் குறையும். சிலருக்கு மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் போகலாம். சண்டைபிடிக்கும், அல்லது சண்டை போட்டு சட்டையைப் பிடிக்கும் மனப்பான்மை இருக்கும் அநேக நோய்கள் ஒவ்வொன்றாகத் தேடிவரும். மனையாளும் அதனால் பாதிக்கப்படுவாள். சிலர் கல்மனதுக்காரர்களாக இருப்பார்கள்.
8. எட்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: உடலும், உள்ளமும் அவ்வளவு நலமாக இருக்க வாய்ப்பு இல்லை. சொத்து சேர்க்க அதிகம் போராட வேண்டி இருக்கும். சிலருக்கு விபத்துக்கள் கூட ஏற்படலாம். தர்ம, நியாயங்களைப் பற்றிக் கவலைப்படாத மனதைக் கொண்டிருப்பான்.
9. ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் : தந்தையோடு நல்ல உறவு இருக்காது. தந்தை மேல் அன்பு பாசம் இருக்காது. ஜாதகன் அதிரடியான ஆளாக இருக்கலாம். ஜாதகர் கண்களுக்குப் புலப்படாத கலைகளில் ஆர்வம் கொண்டு இருக்கலாம். அதில் தேர்ச்சியும் பெற்று காணப்படலாம்.
10. பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் : பொதுவாகப் 10 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பது என்பது அதிகமான நன்மைகளைத் தான் செய்யும். அதிலும், குரு போன்ற சுப கிரக பார்வை பெற்று இருந்தால்... ஜாதகர் மிக்க கடமை உணர்ச்சியைக் கொண்டு இருப்பார். சொத்து, சுகம், புகழ் என அனைத்துமே ஜாதகருக்கு கிடைக்கப்பெறும்.
Also see...செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தடையாகுமா?
11. பதினொன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் : அவ்வப்போது திடீர் லாபங்கள் கூட மகிழ்ச்சி தரும். எனினும் கடகம், சிம்மம் ஆகிய லக்கினத்தில் பிறந்து 11 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பது என்பது மிகவும் சிறப்பை தரக்கூடியது. சமூகத்தில் அந்தஸ்தை தரும்.
12. பன்னிரெண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் : சிலருக்கு கண் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். பிரயாணங்கள் கூட அதிக அளவில் அலைச்சலைத் தரும். சின்னச் - சின்ன பொருளாதார இழப்புகள் கூட ஏற்படலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu Temple, MARS, Temple