உண்மையில் செவ்வாய் கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது. செவ்வாய்க்கு மங்களன், பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். ஒருவர் வீடு கட்ட வேண்டுமென்றால் செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் இருக்க வேண்டும்.
ஆடை உடுத்துவதில் இருந்து, புதிய பொருள்கள் வாங்கும் வரை நாள், கிழமை என்று பார்ப்பவர்களும் உண்டு... எடுத்ததெற்கெல்லாம் இப்படி நாளுங்கிழமையும் பார்க்கலாமா என்று நினைத்ததை, நினைத்தப்படி நடத்திக்கொள்கிறவர்களும் உண்டு. ஜோதிடங்களை முழுமையாக நம்பவில்லையென்றாலும் அவையெல்லாம் விஞ்ஞானத்துடன் தொடர்பு கொண்டவை என்பது மறுக்க முடியாத உண்மை...
தமிழ்க்கடவுளான முருகப் பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. கேரள மக்கள் செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர். செவ்வாயையும், முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப்பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வரும்.
வாழ்க்கையில் முழுபலனை அடைய செவ்வாய் கிழமையில் எதையும் ஆரம்பிக்கலாம்... எந்த நாளாக இருந்தாலும் சரி நல்லநாளாக இருக்க வேண்டும்... அன்றைய தினம் பிரதமை, அஷ்டமி, நவமி, திதிகள் வரும் நாள்களைத் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் செவ்வாய்கிழமையும் உகந்த நாள்தான். நவக்கிரகங்களுள் மிகச்சிறந்தது செவ்வாய் கிரகம்.செவ்வாய் என்றாலே மங்களகரமான வார்த்தை என்று முன்னோர்கள் சொல்வார்கள். செவ்வாய்க்கிழமையன்று எதையும் செய்ய விரும்பாதவர்கள் வாழ்க்கையில் முழுபலனை அனுபவிக்கவே முடியாது என்றும் சொல்வதுண்டு.
மேலும் படிக்க... செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தடையாகுமா?
மெளன விரதம்
மெளன அங்காரக விரதம் ஒன்று உண்டு. தர்மசாஸ்திரத்தில் இதைப் பற்றி மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று மெளனவிரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்தபலனை ஒருவர் அடையலாம் என்கிறது. அதாவது செவ்வாய்க்கிழமையன்று எந்த ஒரு தர்க்கத்திலும் ஈடுபடக்கூடாது. அப்படி விவாதம் செய்தால் அது நிச்சயம் தீமையில் சென்று முடியும். அதனால் தான் செவ்வாய் தினம் வாதம் செய்யாமல் மெளன விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளனர் நம் முன்னோர்கள்...
மேலும் படிக்க... பொங்கல் எப்போது கொண்டாடப்படுகிறது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்
இயற்கையிலேயே செவ்வாய் விசுவாசம் நிறைந்த பணியாளாக இருந்தாலும் மூர்க்க குணம் நிறைந்தவர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதையும் யோசிக்காமல் வேகமாக செயல்படக்கூடியவர். அன்றைய தினம் நாம் செய்யும் செயல்கள் தொடரும் என்பதால்தான் கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பித் தரும் போது செவ்வாய்க்கிழமை தந்தால் வெகு சீக்கிரமே கடன் அடையும் என்பார்கள். மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படாது என்றும் கூறுவதுண்டு.
மேலும் படிக்க... செவ்வாய் எம்மாதிரியான யோக பலனை அளிப்பார் தெரியுமா?
பரிகாரங்கள்
இந்தநாளில் செவ்வாய் தோஷத்திற்கான பரிகார சாந்தி, துர்கா ஹோமம், ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் செய்யும் ஆயுஷ்ய ஹோமம் , சஷ்டி அப்த பூர்த்தி போன்றவற்றைச் செய்யலாம். மனையடி சாஸ்திரம் செவ்வாயன்று பூமி பூஜை செய்வது நல்லது என்றே கூறுகிறது. பயணங்களில் கிழக்கு திசை நோக்கிய பயணம், செவ்வாயன்று இருந்தால் உறுதியான வெற்றியைத் தரும் என்பது ஐதீகம்...
மேலும் படிக்க... இந்த கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் தரக்கூடாது.. காராணம் தெரியுமா?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.