• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • செவ்வாய் தோஷத்துக்கு விதிவிலக்கு உண்டு!

செவ்வாய் தோஷத்துக்கு விதிவிலக்கு உண்டு!

செவ்வாய்

செவ்வாய்

செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்து ஒருவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம்.

  • Share this:
    திருமண வாழ்க்கையில் செவ்வாய் பகவானுக்கு முக்கிய பங்கு உண்டு. திருமணத்துக்கு வரன் பார்க்கும்போது, பிள்ளைக்கோ அல்லது பெண்ணுக்கோ செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்றுதான் முதலில் கேட்கிறார்கள். அந்த அளவுக்குச் செவ்வாய் தோஷம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    ஒருவரின் ஜனன ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியோருக்கும், செவ்வாய் இருக்கும் இடத்துக்கும் உள்ள தொடர்பைக் கொண்டுதான் செவ்வாய் தோஷம் ஒருவரின் ஜாதகத்தில் எந்த அளவுக்கு வலிமையாக இருக்கிறது என்பதைக் கணிக்கமுடியும்.

    லக்னம், ராசியில் சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இருக்கும் இடத்துக்கு, 2-ம் இடம், 4-ம் இடம், 7-ம் இடம்,  8-ம் இடம், 12-ம் இடம் ஆகிய இடங்களில் ஒன்றில் செவ்வாய் இருந்தால், செவ்வாய் தோஷம் ஆகும். ஆனால், மேற்கண்ட இடங்களில் செவ்வாய் இருந்து, குரு, சனி, சூரியன் ஆகியோரின் சேர்க்கை பெற்றிருந்தாலும், பார்வை பெற்றிருந்தாலும் தோஷம் இல்லை.

    அதுபோல செவ்வாய் மேஷம், விருச்சிகம், மகர ராசிகளில் இருந்தாலும் தோஷம் இல்லை. கடகம், சிம்மம் லக்னத்துக்குச் செவ்வாய் தோஷம் இல்லை. செவ்வாய் இருக்கும் இடம் 2-ம் வீடாக இருந்து, அந்த வீடு மிதுனம் அல்லது கன்னியாக இருந்தாலும் தோஷம் இல்லை.

    செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்திருந்தாலும் தோஷம் இல்லை. செவ்வாய் இருக்கும் இடத்தின் ராசி அதிபதி கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும் தோஷம் இல்லை. இப்படி செவ்வாய் தோஷத்துக்கு பல விதி விலக்குகள் உள்ளன.

    மேலும் படிக்க...ஏழரைச் சனி என்றால் என்ன? யாருக்கு பாதிப்பு வரும்?

    ஆனால் துல்லியமாகக் கணித்து செவ்வாய் தோஷம் இருக்கிறது என்றால், நம்பிக்கையோடு மிக எளிய பரிகாரங்களைச் செய்வதன்மூலம் தோஷ நிவர்த்தி பெறலாம். செவ்வாய் தோஷம் என்பது திருமணத் தடையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், மேலும் பல இடையூறுகளையும் ஏற்படுத்தும். எனவே, செவ்வாய் பகவானை செவ்வாய்தோறும் செவ்வாய் ஹோரையில் வழிபடுவதும், செவ்வாய்க்குரிய கடவுளான முருகப் பெருமானை ஒன்பது நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய அசுப பலன்களின் தாக்கத்தைப் பெரிதும் குறைக்கும் என்பது நம்பிக்கை.

    முருகன்- இன்று கார்த்திகை விரதம்


    செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்து ஒருவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம். இருவருக்கும் இந்த தோஷம் இருந்தால் திருமணம் செய்து வைக்கலாம் என்றும் சொல்வார்கள். ஆனால், பொதுவாக தோஷம் ஒருவருக்கு இருந்தாலும் சரி அல்லது இருவருக்குமே இருந்தாலும் சரி தக்க ஜோதிடர்களை ஆலோசித்து, முறைப்படி பரிகாரங்கள் செய்வதுதான் சரி.

    பரிகாரம்

    செவ்வாய் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து அரசமரத்தடி விநாயகர், ஆதி வைத்தியநாதரை வழிபட்டு ஆலமரத்தை சுற்றி வரவேண்டும். வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், செவ்வாய்க்கு அதி தேவதையான முருகப்பெருமானை வழிபடவேண்டும். அங்காரகன் சன்னதியில் உள்ள அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து, பரிகாரம் செய்ய தடைகள் நீங்கும்.

    மேலும் படிக்க... அதிசார குரு பெயர்ச்சி காலம் எவ்வளவு? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்

    செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பவர்களின் கவனத்திற்கு...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: