திருமண வாழ்க்கையில் செவ்வாய் பகவானுக்கு முக்கிய பங்கு உண்டு. திருமணத்துக்கு வரன் பார்க்கும்போது, பிள்ளைக்கோ அல்லது பெண்ணுக்கோ செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்றுதான் முதலில் கேட்கிறார்கள். அந்த அளவுக்குச் செவ்வாய் தோஷம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஜாதகத்தில் உள்ள ராசி கட்டத்தில் லக்கனத்தில் இருந்து செவ்வாய் 1, 2, 4, 7, 8 மற்றும் 12ம் இடத்தில் இருந்தால், செவ்வாய் தோஷம். இதுபடி பார்த்தால், உலகத்தில் 50 சதவீதம் பேருக்கு செவ்வாய் தோஷம் இருக்க வேண்டும். ஆனால் இதில் சில விதி விலக்கு உண்டு. ஜாதகத்தில், செவ்வாய் 1, 2, 4, 7, 8 மற்றும் 12ம் இடத்தில் இருந்தாலும் கீழே சொல்லப்பட்ட கிரக நிலை அமைந்தால் அந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இல்லை என்று எடுத்து கொள்ள வேண்டும்.
1. செவ்வாய் தனது சொந்த வீடான மேஷம் மற்றும் விருச்சிகத்தில் இருந்தால் செவ்வாய் தோஷம் கிடையாது.
2. செவ்வாய் தனது உச்ச வீடான மகரத்தில் இருந்தால் செவ்வாய் தோஷம் கிடையாது.
3. செவ்வாய் தனது நீச்ச வீடான கடகத்தில் இருந்தால் செவ்வாய் தோஷம் கிடையாது.
4. செவ்வாய் சூரியன், தேய்பிறை சந்திரன், சனி, ராகு மற்றும் கேதுவுடன் சேர்ந்து இருந்தாலோ (அல்லது) பார்வை பட்டாலோ (அல்லது) அந்த கிரகங்களை பார்த்தாலோ செவ்வாய் தோஷம் கிடையாது.
5. செவ்வாய் தீய ஸ்தான அதிபதியாக இருக்கும் கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலோ பார்வை பட்டாலோ அந்த கிரகங்களை பார்த்தாலோ செவ்வாய் தோஷம் கிடையாது.
6. அதாவது மேலே குறிப்பிட்ட கிரக நிலைப்படி ஜாதகத்தில் செவ்வாய் 1, 2, 4, 7, 8 மற்றும் 12ம் இடத்தில் இருந்தாலும், அந்த ஜாதகம் செவ்வாய் தோஷம் இல்லாத ஜாதகமே. இதன் படி, ஆயிரம் ஜாதகத்தில் ஒருவருக்கே முழுமையான செவ்வாய் தோஷம் அமையும். ஆக, செவ்வாய் 1, 2, 4, 7, 8 மற்றும் 12ம் இடத்தில் இருந்தாலே அந்த ஜாதகத்தை செவ்வாய் தோஷம் என்று கூறுவது ஜோதிட அறிவு இல்லாதவர்கள் கூறும் செயலாகும். எனவே செவ்வாய் தோஷமானது நூறு சதவிகிதமானது யாருக்கும் இல்லை என்பதே நிதர்சனம்.
7. அதே சமயத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் எங்கு இருந்தாலும் அந்த ஜாதகம் செவ்வாய் தோஷ ஜாதகம் ஆகும். மேலும் லக்னத்தைப் பொறுத்தவரை கடக லக்னம், சிம்ம லக்னம் ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கே இருந்தாலும் இந்த தோஷம் இல்லை என்று சொல்லலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dhosham | தோஷம்