ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

J என்பதை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள் !

J என்பதை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள் !

J என்பதை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள் !

J என்பதை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள் !

சில நேரங்களில் இவர்களுடைய பலமே பலவீனமாகவும், பலவீனம் பலமாகவும் மாறி விடுகிறது.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ஒவ்வொரு ராசிக்கு அதற்குரிய எழுத்துக்கள் இருக்கின்றன. அந்த எழுத்துக்களை, முதலெழுத்தாக ஓசையாக வருமாறு பெயர் வைப்பது பழக்கம். அதேபோல பிறந்த தேதியின் அடிப்படையில் நியூமராலஜிக்கு ஏற்றார்போல பெயர் சூட்டும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு எழுத்துக்கும், ஒவ்வொரு எண்ணும், அதன் தன்மைகளும் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு, அதற்கு சார்ந்த எழுத்தை முதல் எழுத்தாக வருமாறு பெயர் வைத்தால் அதிர்ஷ்டமாக இருக்கும் என்று குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் பல விஷயங்கள் இருக்கின்றன. J என்ற எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு என்று தனிப்பட்ட சில குணங்கள் இருக்கும். அதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

J என்ற எழுத்தை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்களின் குணாதிசியங்கள் மற்றும் பலம்

இவர்களுக்கு கெளரவம், புகழ், மரியாதை ஆகியவை இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இவர்களுக்கு தேவையான மரியாதையை மிகவும் எதிர்பார்ப்பார்கள். சுய மரியாதையை அதிகமாக விரும்பக்கூடியவராக இருப்பார்கள். இவர்களுக்கு நண்பர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு பெரிய கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள். இருந்தாலும் இவர்களுக்கு நெருங்கிய ஒன்று அல்லது இரு நண்பர்களை மட்டுமே இவர்கள் பக்கத்தில் வைத்துக்கொள்வார்கள். இவர்களைப் பற்றிய ரகசியங்களையும் இவர்களுடன் மட்டுமே பகிர்ந்துகொள்வார்கள். இவர்களுக்கு பிடித்தவர்களுக்காக வாழ்க்கையில் பல இக்கட்டான சூழ்நிலையைக் கூட சமாளித்து அவர்களுக்கு உதவுவார்கள். இவர்கள் அதி புத்திசாலி என்று சொல்லலாம். எந்தவொரு விஷயத்தையும் எல்லைகளை கடந்து சிந்தித்து அந்த விஷயத்தைப் பற்றி யோசித்து முடிவு எடுப்பார்கள். இவர்களுக்கு முடிவு எடுக்கும் திறன் மிகவும் சரியாக இருக்கும்.

* கௌரவம்,புகழ்,மரியாதை படிக்கும்.

* சுயமரியாதை அதிகம்

* நண்பர்கள் அதிகம்.

* நெருக்கமாக ஒரு சிலர் மட்டுமே இருப்பார்கள்.

* புத்திசாலித்தனம்

* முடிவு எடுக்கும் திறன் அதிகம்.

படிக்கும் திறன் அதிகமாக இருக்கும். பழைய விஷயங்களாக இருந்தாலும் சரி புதிய விஷயமாக இருந்தாலும் சரி படிக்கும் திறன் அதிகமாக இருக்கும். காலத்துக்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை இவர்களுக்கு உண்டு. நியாபக சக்தி அபாரமாக இருக்கும். தன்னை சுற்றி என்ன இருக்குது, நாம் என்ன செய்யப் போறோம்? என்று எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது உட்பட சிந்தித்து யோசித்து செய்யக்கூடிய மன வலிமையையும் நியாபக சக்தியும் அபாரமாக இருக்கும். எந்த இடத்துக்கு சென்றாலும் தன்னை முதன்மை படுத்திக்கொண்டு தன்னை முதன்மைப் படுத்தும் தன்மையை உருவாக்கி கொள்ளும் தன்மை இவர்களிடம் அதிகமாக உள்ளது.

தலைமைப் பண்பு ஒரு கூட்டத்தையும், ஒரு குடுபத்தையும் ஒரு நிர்வாகத்தையும் வழி நடத்தக்கூடிய வல்லமை இவர்களுக்கு உண்டு. உங்களுக்கு மிகசிறந்த தலைமைப்பண்பு உங்களிடம் இருக்கிறது என்று அர்த்தம். ஒரு கூட்டத்தையும் ஒரு மிகப்பெரிய உங்கள் வசம் செய்யக்கூடிய பண்பு உங்களிடம் இருக்கிறது என்று அர்த்தம். ஒரு நிறுவனத்தின் மிகப்பெரிய இடத்திற்கு செல்லும் மிகப்பெரிய சக்தி உங்களிடம் இருக்கும். காலத்திற்கேற்ப உங்களை மேம்படுத்திக்கொள்ளும் பக்குவம், வல்லமை உங்களிடம் இருக்கும். இவர்களுக்கு அதிகமாக நியாபக சக்தி அதிகமாக இருக்கும்.

அனைவரையும் கவர்ந்திழுக்கும் சக்தி உங்களுக்கு இருக்கும். கவர்ச்சி உங்களை சுற்றி இருக்கும் அனைவரையும் உங்கள் பக்கம் இழுக்கும் வல்லமை உங்களுக்கு இருக்கும். தைரியம் அதாவது பெண்ணாக இருந்தால் ஆயிரம் பெண்களுக்கு உண்டான தைரியமும் ஆணாக இருந்தால் ஆயிரம் ஆண்களுக்கு உண்டான தைரியமும் உங்களுக்கு இருக்கும். வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கணும் என்றால் சாதாரணமாக ரிஸ்க் எடுத்தும் காட்டுவீர்கள்.

* படிக்கும் திறன் அதிகம்

* புதுமையை ஏற்றுக்கொள்வார்கள்

* தலைமைப்பண்பு

* நியாபக சக்தி, தைரியம் ஆகியவை அதிகம்.

* எதையும் சாதிக்கும் குணம்.

இவர்களது மனமும் சரி, குணமும் சரி மிகவும் மென்மையானது. கஷ்டபடர குடும்பமாக இருந்தாலும் நீங்கள் சந்தோஷமாகவும், சொகுசாகவும் இருப்பீர்கள். அதிர்ஷ்டம் என்பது உங்களுக்கு திருமணத்திற்கு பிறகோ அல்லது குழந்தை பிறந்த பின்னாடியோ அதிர்ஷ்டம் உங்களுக்கு ஏற்படும். ஒரு விஷயத்தை சுலபமாக கற்றுக்கொள்ளும் வல்லமை உங்களுக்கு இருக்கும். வாழ்க்கையில் மேன்மேலும் உயர்ந்துக்கொண்டே இருப்பீர்கள். நேர்மறை சக்தி அதிகமாக இருக்கும். நீங்கள் ஒரு செய்முறையை பின்பற்றும்போது அதை மீறும் பட்சத்தில் உங்களுக்கு கோவம் அதிகமாக வரும்.

கோவம் அதிகமாக வந்தாலும் உங்களது முடிவு எடுக்கும் திறன் மிகவும் துல்லியமாக இருக்கும். மற்றவர்களுக்கு புரியும் வகையில் சொல்வது என்பது உங்களுக்கு கை வந்த கலையாக இருக்கும். குரு ஸ்நானத்தில் இருந்து சொல்லிக்கொடுப்பது போல அனைவருக்கும் புரியும் வகையில் நீங்கள் சொல்லிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் தலை சிறந்த தலைவியாகவோ அல்லது தலைவனாகவோ நீங்கள் இருப்பீர்கள். குடும்பமோ அல்லது ஒரு குழுவாக இருந்தாலும் சரி அதில் நீங்கள் மிகச்சிறந்த வளர்ச்சியை நீங்கள் அடைவீர்கள்.

* மென்மையான மனம்

* திருமணத்திற்கு பின்பு அதிர்ஷ்டம் வர வாய்ப்பு இருக்கிறது.

* சுலபமாக கற்றுக்கொள்ளும் திறன்

* நேர்மறை சக்தி அதிகம்

* கோவம் அதிகம்

* அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லிக்கொடுப்பீர்கள்.

J எழுத்தை முதலெழுத்தாகக் கொண்டவர்களின் பலவீனம்

விருப்பு வெறுப்பு என்பதில் மிகவும் தெளிவாகவும் தன்னுடைய கண்ணோட்டத்தில் இருந்து எந்த விஷயத்திலுமே மாறாமல் இருப்பார்கள். இதுவே இவர்களுக்கு மிகப்பெரிய பலவீனமாகவும் இருக்கிறது.

சூழ்நிலைக்கேற்றவாறு புரிந்து கொண்டு கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும் ஆனால் இவர்கள் இவர்களிடம் அந்த அளவுக்கு நெகிழ்வுத்தன்மை கிடையாது.

சில நேரங்களில் இவர்களுடைய பலமே பலவீனமாகவும், பலவீனம் பலமாகவும் மாறி விடுகிறது. உதாரணமாக இவர்கள் சுயநலவாதிகள் மற்றவர்கள் சொல்வதை இவர்கள் பெரும்பாலும் காது கொடுத்து கேட்க மாட்டார்கள். இது சில நேரங்களில் இவர்களுக்கு பாதகமாக இருந்தாலும் சுயநலத்தன்மை இவர்களை தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்க வைக்கிறது.

* சுயநலவாதிகள்

* அனைவரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்

* நெகிழ்வுத்தன்மை இல்லாதவர்கள்

* தான் நினைத்தது தான் சரி என்ற பிடிவாதம் இருக்கும்

* மாற்றத்தை எதிர்கொள்வது கடினம்

* கொஞ்சம் சரிவு/தோல்வி ஏற்பட்டாலும் தாங்கிக் கொள்ள மாட்டார்கள்

எண் கணிதம் மற்றும் வேத ஜோதிடத்தில் J என்ற எழுத்து – சூரியனின் காரகம்

J என்ற எழுத்து, எண் கணிதத்தில் எண் ஒன்றை குறிக்கிறது. எண் ஒன்று என்பது சூரியனைக் குறிக்கும் கிரகம், சூரியனின் காரகத்துவம் அனைத்துமே பொருந்தும். J என்ற எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு ஆளுமை திறன், தலைமைத்துவப் பண்பு, அதிகாரம், அரசியல் செல்வாக்கு ஆகிய அனைத்துமே நிறைந்து காணப்படும்.

Also Read : E என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!

Also Read : G என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படி தான் இருப்பார்கள்!

Also Read : K என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்!

First published:

Tags: Astrology, Numerology