ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

L என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்

L என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்

L என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்!

L என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்!

Alphabet L - Characteristics | L என்ற எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு என்று தனிப்பட்ட சில குணங்கள் இருக்கும். அதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ஒவ்வொரு ராசிக்கும் அதற்குரிய எழுத்துக்கள் இருக்கின்றன. அந்த எழுத்துக்களை, முதலெழுத்தாக ஓசையாக வருமாறு பெயர் வைப்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கங்களில் ஒன்று. அதேபோல பிறந்த தேதியின் அடிப்படையில் நியூமராலஜிக்கு ஏற்றார்போல பெயர் சூட்டும் பழக்கமும் அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு எழுத்துக்கும், ஒவ்வொரு எண்ணும், அதற்குரிய தன்மைகளும் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு, அதைச் சார்ந்த எழுத்தை முதல் எழுத்தாக வருமாறு பெயர் வைத்தால் அதிர்ஷ்டமாக இருக்கும் என்று குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் பல விஷயங்கள் இருக்கின்றன. L என்ற எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு என்று தனிப்பட்ட சில குணங்கள் இருக்கும். அதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

L என்ற எழுத்தை முதல் எழுத்தாக கொண்டவர்களின் குணாதிசியங்கள் மற்றும் பலம்

L என்ற முதல் எழுத்து உள்ளவர்கள் தலைசிறந்த மனிதர்களாக இருப்பார்கள். அடக்கம், பொறுமை, நிதானம், பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க கூடியவர்களாகவும் இருப்பார்கள். எந்த வேலையை செய்தாலும் நிதானமாக நடந்துக் கொள்வார்கள். இது இவர்களுடைய அடிப்படையான குணம் என்று சொல்லலாம். தாம் எப்படி பெரியவர்களுக்கு அடங்கி நடப்பது போல் இவர்களுக்கு கீழ் உள்ளவர்கள் இவருக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

இவர்கள் அதிகமான உழைப்பாளியாக இருப்பார்கள். இவர்களுக்கு கீழ் வேலை செய்பவரை அதிகாரத்துடனும், தைரியாமாகவும் வேலை வாங்கும் திறமை இவர்களுக்கு உண்டு. எந்த வேலையை செய்தாலும் நியாமாக தான் செய்து முடிப்பார்கள். இவர்களிடம் நிறையப்பேர் உதவிக்கேட்டு வாங்குவார்கள். இவர்கள் பெருந்தன்மை உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் சொந்த வேலையை விட பொது வேலையை அதிகமாக செய்வார்கள். யார் உதவிக் கேட்டாலும் இல்லை என்ற வார்த்தை சொல்ல மாட்டார்கள். யாருடைய உதவியில்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியில் உயர்ந்த நிலையில் நிற்பார்கள். இவர்கள் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.

ஒருபொழுதும் சக்திக்கு மீறி ஆசைப்பட மாட்டார்கள். எந்த நிலையில் இருந்தாலும் திருப்தியுடன் வாழ்வார்கள். எந்த வேலை செய்தாலும் பின்வாங்கவும் மாட்டார்கள். துணிச்சலுடன் எதையும் செய்பவர்களாக இருப்பார்கள். எந்த எதிர்ப்பு வந்தாலும் நான் பார்த்துக்கொள்வேன் என்று சொல்வார்கள். விரோதிகளிடமிருந்து தனித்து போராடுவார்கள். மனதில் எதையாவது சாதிக்க நினைத்தால் அதை சாதிக்கும் வரை விடாமல் போராடுவார்கள். நண்பர்களுக்கு நிறைய பணவிஷயத்தில் உதவி செய்வார்கள். நிறைய செலவும் செய்வார்கள். வெளிநாட்டிற்கு போக வேண்டுமென்று மிகவும் ஆசைப் படுவார்கள். அரசியல் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

 • அடக்கம், பொறுமை, நிதானம் கொண்டவர்கள்.
 • பெரியவர்களிடம் மரியாதை.
 • கடின உழைப்பாளி.
 • மற்றவர்களுக்கு உதவும் குணம்.
 • துணிச்சல் மிக்கவர்கள்.
 • போராடும் குணம்.
 • பொது வேலையில் ஆர்வம்.
 • அரசியல் மிகவும் பிடிக்கும்.

L என்ற எழுத்தை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்களின் பலவீனங்கள்:

பழமையில் இருந்து புதுமைக்கு எளிதில் மாற மாட்டார்கள். முன்னோர்களை பின்பற்றி தான் நடப்பார்கள். இவர்களுக்காக எதையும் தனித்து செய்ய மாட்டார்கள். இவர்கள் யாரிடமும் உதவி என்று கேட்கமாட்டார்கள். கௌரவத்தை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இவர்களுடைய கஷ்டத்தையும் யாரிடமும் சொல்ல மாட்டார்கள். யாரிடமும் எந்த யோசனையும் கேட்கமாட்டார்கள்.

அவர்களுடைய தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவம் தான் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது. எளிதில தோல்வியை இவர்கள் எதிர்கொண்டாலும், அடுத்ததாக முயற்சி செய்ய வேண்டும் என்ற உத்வேகம் இருக்காது. ஒரு விஷயம் தனக்கு எதிர்பார்த்தது போல நடக்க வில்லை என்பதால் வருத்தப்படும் இவர்கள் அதனை ஏற்றுக்கொண்டு விடுவார்கள்.

Also Read : J என்பதை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள் !

 • பழமைவாதி.
 • முன்னோர்களை பின்பற்றுதல்.
 • யாரிடமும் உதவி கேட்கமாட்டார்கள்.
 • யாருடைய யோசனையும் இவர்கள் கேட்கமாட்டார்கள்.

எண் கணித ஜோதிடத்தில் குருவின் ஆதிக்கம் பெற்ற L எழுத்து

எண் கணித ஜோதிடத்தில், L என்ற எழுத்து எண் மூன்றை குறிக்கிறது. 3 என்பது ஒன்பது கிரகங்களில் குருவை குறிக்கும் கிரகமாகும். இதற்கு ஏற்றார் போல, இவர்கள் மற்றவர்களுக்கு மிக சிறப்பான பயிற்சியாளராக ஆசானாக இருப்பார்கள். குரு கிரகத்திற்கு உரிய பொறுமை, கற்றுக் கொள்ளும் திறன், கற்பித்தல், மற்றும் குரு கிரகத்திற்கு உரிய காரணங்கள் அனைத்துமே L என்ற எழுத்தில் பெயர் வைத்தவர்களுக்கு பொருந்தும்.

First published:

Tags: Astrology, Tamil News