ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ஒவ்வொரு ராசிக்கும் அதற்குரிய எழுத்துக்கள் இருக்கின்றன. அந்த எழுத்துக்களை, முதலெழுத்தாக ஓசையாக வருமாறு பெயர் வைப்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கங்களில் ஒன்று. அதேபோல பிறந்த தேதியின் அடிப்படையில் நியூமராலஜிக்கு ஏற்றார்போல பெயர் சூட்டும் பழக்கமும் அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு எழுத்துக்கும், ஒவ்வொரு எண்ணும், அதற்குரிய தன்மைகளும் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு, அதைச் சார்ந்த எழுத்தை முதல் எழுத்தாக வருமாறு பெயர் வைத்தால் அதிர்ஷ்டமாக இருக்கும் என்று குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் பல விஷயங்கள் இருக்கின்றன.
F என்ற எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு என்று தனிப்பட்ட சில குணங்கள் இருக்கும். அதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
F என்ற எழுத்தை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்களின் குணாதிசியங்கள் மற்றும் பலம்.
எந்தவொரு விஷயத்தையுமே ரொம்ப புத்திசாலித்தனமா திட்டமிட்டு செய்வார்கள். இது இவர்களுடைய சிறப்பு அம்சமாகும். இவர்கள் எந்த விஷயம் செய்தாலும் சரியாகவே இருக்கும். முன்கூட்டியே எந்த விஷயம் நடக்கும் நடக்காது என்று சொல்லும் திறமை இவர்களிடம் அதிகமாக இருக்கும். இவர்களை சுற்றி நிறையப்பேர் இருப்பார்கள். ரொம்ப நம்பிக்கையான நபராகத் திகழ்வார். இவரைப் பற்றி இவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கேட்டால் இவர் ரொம்ப நேர்மையான நபர், ரொம்ப நம்பிக்கையுடையவர் இவரை நம்பி எந்த வேலை வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று சொல்வார்கள்.
நண்பர்களையும், உறவுகளையும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். நகைச்சுவை உணர்வு அதிகமாக இருக்கும். யாராவது ஏதாவது கேட்டால் நகைச்சுவையாக பதில் சொல்வார்கள். சீரியஸா எதையும் எடுத்துக்க மாட்டார்கள். கோவப்பட்டால்க்கூட கொஞ்சம் நகைச்சுவையாக தான் கோவத்தை வெளிப்படுத்துவார்கள். பொதுவாழ்க்கை, அரசியலில் இருந்தார்கள் என்றால் ரொம்ப டென்ஷன் ஆகமாட்டார்கள். நிதானமா யோசித்து செய்வார்கள்.
* திட்டமிடுதல்
* முன்கூட்டியே கணித்தல்
*நம்பிக்கையானவர்
* நேர்மையானவர்
* நகைச்சுவை உணர்வு அதிகம்
* நிதானமாக யோசனை செய்யும் திறன்
* பொறுமையானவர்
* அதிக இடங்களை சுற்றி பார்க்க ஆசை
* இயற்கையை ரசிப்பார்கள்
* குழந்தைகளின் ரசனை
* பணம் எப்பொழுதும் புழங்கும்
* நண்பர்களுக்கு உதவும் குணம்
* வியாபாரம் செய்ய பிடிக்காது
* சரியான நேரத்தில் வேலையை செய்து முடிக்கும் திறன்
* நேர்மையானவர்
அதிகாரமாக எந்தவொரு வேலையும் வாங்க மாட்டார்கள். பொறுமையா எடுத்துக் கூறி, தன்னுடைய காரியத்தை சாதிப்பார்கள். வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். சுற்றி இருக்கும் இடத்தில் சுற்றிப் பார்க்கணும், நிறைய இடத்துக்கு போகணும், வெளிநாட்டுக்கு போகணும் என்று ரொம்ப எதிர்பார்ப்பாகள். இயற்கை ரசனை அதிகமாக இருக்கும். குழந்தைகளைப் போலவே மழை நீரில் விளையாட ஆசை இருக்கும். பணம் எப்பொழுதாவது எந்த வழியிலாவது வந்து கொண்டே இருக்கும். பணம் இல்லை என்ற நிலை இல்லை, சொல்லவும் மாட்டார்கள். வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டுப் போகக்கூடிய திறமை இவர்களிடம் இருக்கும்.
எந்த விஷயத்தையும் தைரியமாக செய்வார்கள். நண்பர்களுக்கு நிறைய உதவுவார்கள். வியாபாரத்தை விட வேலைக்கு போகணும் என்று தான் ஆசை. ஏனென்றால் வியாபாரம் செய்தால் நேரம் இருக்காது, பதற்றமாக இருக்கும் என்று நினைப்பார்கள்.
F என்ற எழுத்து முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்களின் பலவீனங்கள்
வாழ்க்கையை சந்தோஷமா இருக்க நேரத்தை ஒதுக்க முடியாது என்று நினைப்பார்கள். இவர்களிடம் எந்த வேலையை கொடுத்தாலும் சரியான நேரத்திற்கு செய்து முடிப்பதில் கொஞ்சம் திணறுவார்கள். எந்தவொரு தவறான விஷயத்துக்கும் துணைப்போக மாட்டார்கள். நேர்மையாக வாழ விரும்புவார்கள். இதுவே இவர்களுக்கு பலவீனமாக அமையும். நடைமுறையில் மற்றவர்களோடு இணைந்து செயல்பட முடியாது கொஞ்சம் சிரமப்படுவார்கள்.
எண் கணித ஜோதிடத்தில் சுக்ரனின் ஆதிக்கம் பெற்ற F எழுத்து
எண் கணித ஜோதிடத்தில் ஜாதகத்தில் F என்ற எழுத்து 6 ஆம் எண்ணைக் குறிக்கும். இது ஆடம்பரம், நட்புணர்வு, வசதியான வாழ்க்கை, மற்றும் சுகமாக வாழ்வது ஆகியவற்றை குறிக்கும் எண் ஆகும். அதே போல், எண் ஆறு என்பது சுக்ரனை குறிக்கும் கிரகமாகும். எனவே சுக்கிரன் சார்ந்த குணங்களும் இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.
Also Read : A என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!
Also Read : B என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!
Also Read : C என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!
Also Read : D என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!
Also Read : E என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!
Also Read : G என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படி தான் இருப்பார்கள்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Tamil News