ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

C என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!

C என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!

C முதல் எழுத்து

C முதல் எழுத்து

Alphabet C - Characteristics | C என்ற எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு என்று தனிப்பட்ட சில குணங்கள் இருக்கும். அதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ஒவ்வொரு ராசிக்கும் அதற்குரிய எழுத்துக்கள் இருக்கின்றன. அந்த எழுத்துக்களை, முதலெழுத்தாக ஓசையாக வருமாறு பெயர் வைப்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கங்களில் ஒன்று. அதேபோல பிறந்த தேதியின் அடிப்படையில் நியூமராலஜிக்கு ஏற்றார்போல பெயர் சூட்டும் பழக்கமும் அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு எழுத்துக்கும், ஒவ்வொரு எண்ணும், அதற்குரிய தன்மைகளும் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு, அதைச் சார்ந்த எழுத்தை முதல் எழுத்தாக வருமாறு பெயர் வைத்தால் அதிர்ஷ்டமாக இருக்கும் என்று குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் பல விஷயங்கள் இருக்கின்றன.

C என்ற எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு என்று தனிப்பட்ட சில குணங்கள் இருக்கும். அதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பிறை நிலா வடிவில் இருக்கும் C என்ற எழுத்து:

C என்ற எழுத்து கற்பனை சக்தி மற்றும் படைப்பாற்றல் ஆகிய இரண்டையும் குறிக்கிறது. இவர்கள் அதிக கற்பனை சக்தி கொண்டிருப்பார்கள், கனவுலகில் சஞ்சரிப்பார்கள், நிஜம் தெரிந்தாலும், தனக்கென்று ஒரு உலகை உருவாக்கி அதில் பயணிக்க விரும்புவார்கள். மிகவும் உணர்ச்சிவசப்படுபவர்கள். குடும்பத்தினர் மீது அதிக அன்பும் பாசமும் கொண்டுள்ளவர்கள். யாரையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள், பழகியவர்களுக்காக உயிரையே கொடுக்கும் அளவுக்கு கனிவான மனம் கொண்டவர்கள். நெருக்கமாக பழகியவர்களிடம் ஏற்படும் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள்.

C என்ற எழுத்து முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்களின் குணாதிசியங்கள் மற்றும் பலம் :

எந்த விஷயத்தை எடுத்தாலும், சரி அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பெரிய குறிக்கோளை வைத்திருப்பார்கள். பலரையும் போல, ரொம்ப மரியாதை எதிர்பார்ப்பார்கள். ஆனால், கிடைக்கவில்லை என்றால் அதை பெரிதாக மாற்றி சண்டையிட மாட்டார்கள். அந்த இடத்திலிருந்து விலகி விடுவார்கள்.

பொதுவாகவே இந்த எழுத்தில் பெயர் கொண்டவர்களின் வாழ்க்கை 35 வயதுக்கு மேல் தான் நல்ல நிலைமைக்கு வரும்.

உணர்ச்சிப்பூர்வமான நபர்களாக இருந்தாலுமே, திறமைக்குக் குறைவில்லை. பல துறைகளிலும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள். படைப்பாற்றல் திறமை உள்ளதால், தனது துறை சார்ந்த வேலைகளில் பலருக்கும் பயன் அளிக்கும் வகையில் புதிதாக கண்டுபிடிப்பார்கள்.

* உடல் ஆரோக்கியத்தின் மீது தீவிரமான கவனம் செலுத்துவார்கள்

* ஃபிட் ஆக இருப்பார்கள்

* ஆரோக்கியமான, சுவையான உணவு சாப்பிட  முக்கியத்துவம் கொடுப்பார்கள்

* நேர மேலாண்மையை கடைபிடிப்பார்கள்

* மற்றவர்கள் நேரம் தவறுவதை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்

* மிகச் சிறந்த நிர்வாகிகளாக இருப்பார்கள்

* அட்டவணை போட்டு ஒரு விஷயத்தை செய்வதில் கை தேர்ந்தவர்கள்

* குடும்பத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருப்பார்கள்

* வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவர்கள்

* தோல்வியை எளிதில் எதிர்கொள்ளும் பக்குவம் கொண்டவர்கள்

* அர்பணிப்புடன் வேலை செய்வார்கள்

மற்றவர்களுக்கு ஏணியாக இருப்பவர்கள் :

C என்ற எழுத்து முதலெழுத்தாகக் கொண்டவர்கள் பெரிய அளவுக்கு வர முடியவில்லை என்றாலும், இவர்களின் ஆதரவு பெற்றவர்கள் பெரிய நிலைக்கு, பிரபலமாகும் அளவுக்கு வளர்ச்சி பெறுவார்கள். விளையாட்டு பயிற்சியாளர்கள் போல, மற்றவர்களின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் பின்னே முக்கிய நபராக இவர்கள் இருப்பார்கள்.

பணம் சம்பாதிப்பதிலும் சரி செலவழிப்பதிலும் சரி அவர்கள் மற்றவர்களை விட கொஞ்சம் வித்தியாசமாக சிந்திப்பார்கள். எனவே பிறரின் பார்வையில் கொஞ்சம் வித்தியாசமான பேர்வழி போல காணப்படுவார்கள். சோகமாக இருந்தாலுமே, அதை வெளிக்காட்டாமல் பெரும்பாலும் உற்சாகத்தையே வெளிப்படுத்துவார்கள். எல்லா விஷயமும் மிகவும் சரியாக இருக்க வேண்டும் என்று தீவிரமாக நினைப்பார்கள். பொது இடங்களில் பேசுவதை மிகவும் விரும்புவார்கள்.

C என்ற எழுத்து முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்களின் பலவீனங்கள் :

வாழ்வின் முதல் பாதி கடினமாக அல்லது சாதாரணமாக இருக்கலாம். ஒவ்வொரு எழுத்தில் பெயர் கொண்டவர்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட தன்மையே அவர்களது பலமாகவும் பலவீனமாகவும் அமையும். C என்ற எழுத்தில் பெயர் கொண்டவர்களுக்கு அவர்களுடைய தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவம் தான் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது. எளிதில தோல்வியை இவர்கள் எதிர்கொண்டாலும், அடுத்ததாக முயற்சி செய்ய வேண்டும் என்ற உத்வேகம் இருக்காது. ஒரு விஷயம் தனக்கு எதிர்பார்த்தது போல நடக்கவில்லை என்பதால் வருத்தப்படும் இவர்கள் அதனை ஏற்றுக்கொண்டு விடுவார்கள். ஆனால், அதை அமைதியாக கடந்து விடுவார்கள். எனவே மீண்டும் முயற்சி செய்ய வேண்டுமா என்று மிகவும் யோசிப்பார்கள்.

இதனாலேயே இந்த விஷயமில்லை என்றால் இன்னொன்று, அது இல்லை என்றால் இன்னொன்று என்று இவர்களது மனம் மாறிக்கொண்டே இருக்கும். ஒரு விஷயத்தை தீவிரமாக முயற்சி செய்யும் பழக்கம் இவர்களுக்கு இல்லை என்பது மிகப்பெரிய குறையாகும்.

* சோம்பேறித்தனம் உண்டு

* இது இல்லையென்றால் வேறு வேலை என்ற மனப்போக்கு அதிகம் உண்டு

* பணம் இருந்தால் நிறைய செலவு செய்வார்கள்

* அடிக்கடி கோபம் வரும்

* மனம் விரக்தி அடைவார்கள்

* பிரிவை தாங்கிக் கொள்ள முடியாது

* மனதுக்குள்ளேயே வைத்து புழங்குவார்கள்

* எதிலும் பெரிதாக ஆர்வம் இருக்காது அல்லது அவ்வாறு வெளிப்படுவார்கள்

* தன்னை முன்னிலைப்படுத்தாமல் மற்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்

தனித்திறமைகள் இருந்தும், தாமதமாகவே வெளிப்பட்டு பாராட்டுக்களும், அங்கீகாரமும் கிடைக்கும்.

எண் கணித ஜோதிடத்தில் குருவின் ஆதிக்கம் பெற்ற C எழுத்து :

எண் கணித ஜோதிடத்தில், C என்ற எழுத்து எண் மூன்றை குறிக்கிறது. 3 என்பது ஒன்பது கிரகங்களில் குருவை குறிக்கும் கிரகமாகும். இதற்கு ஏற்றார் போல, இவர்கள் மற்றவர்களுக்கு மிக சிறப்பான பயிற்சியாளராக ஆசானாக இருப்பார்கள். குரு கிரகத்திற்கு உரிய பொறுமை, கற்றுக் கொள்ளும் திறன், கற்பித்தல், மற்றும் குரு கிரகத்திற்கு உரிய காரணங்கள் அனைத்துமே C என்ற எழுத்தில் பெயர் வைத்தவர்களுக்கு பொருந்தும்.

Also Read : A என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!

Also Read : B என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!

Published by:Selvi M
First published:

Tags: Numerology, Tamil News