முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி மலையில் ஓடி கொண்டிருக்கும் இலவச பேருந்துகளில் மாற்றம்.. முழு விவரம்..!

திருப்பதி மலையில் ஓடி கொண்டிருக்கும் இலவச பேருந்துகளில் மாற்றம்.. முழு விவரம்..!

திருப்பதி

திருப்பதி

Tirupati | திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒலக்ட்ரா என்ற பெயரில் மின்சார பேருந்துகளை தயாரிக்கும் மெகா இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் 10 பேருந்துகளை நன்கொடையாக வழங்க உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதி மலையில் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் 11 இலவச பேருந்துகளை 24 மணி நேரமும் இயக்கி வருகிறது. இந்த பேருந்துகளில் பக்தர்கள் திருப்பதி மலையில் இலவசமாக பயணிக்கலாம். அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை தவிர்ப்பதற்காக திருப்பதி மலை முழுவதும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தேவஸ்தான நிர்வாகத்தின் முடிவுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் திருப்பதி திருமலை இடையே தற்போது மின்சார பேருந்துகளை

இயக்க துவங்கி உள்ளது. தற்போது திருமலை திருப்பதி இடையே 50 மின்சார பேருந்து இயக்கி வரும் அரசு போக்குவரத்து கழகம் முழு அளவில் மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.

மேலும் திருப்பதி மலையில் தேவஸ்தானத்தின் பயன்பாட்டிற்காக மின்சார கார்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த நிலையில் திருப்பதி மலையில் பக்தர்களின் இலவச போக்குவரத்து வசதிக்காக ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற தேவஸ்தான நிர்வாக முடிவு செய்தது.

Also see... திருப்பதியில் இன்று முதல் ஏழுமலையானின் தெப்ப உற்சவம் ஆரம்பம்...

தேவஸ்தான நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் மின்சார பேருந்துகளை தயாரித்து விற்பனை செய்யும் ஹைதராபாத்தை சேர்ந்த மெகா இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் நிர்வாகம் பத்து மின்சார பேருந்துகளை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்க முன் வந்துள்ளது.

அவற்றில் ஒரு பேருந்து திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்தில் பஸ் டிப்போவுக்கு வந்து விட்ட நிலையில் அந்த பேருந்தை தேவஸ்தானத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தேவஸ்தான போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று அந்த பேருந்தில் சற்று தூரம் பயணித்து அதன் செயல்பாட்டிற்கு திருப்தி தெரிவித்தனர். எனவே இன்னும் ஓரிரு மாதங்களில் திருப்பதி மலையில் பக்தர்களின் இலவச போக்குவரத்துக்காக முழு அளவில் மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

சுற்றுசூழலை பாதுகாக்கும் தேவஸ்தானத்தின் முடிவிற்கு முத்தாய்ப்பாக திருப்பதி மலையில் இயங்கும் தனியார் டாக்சிகளையும் மின்சார டாக்ஸிகள் ஆக மாற்ற தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

இதற்காக தேவஸ்தான நிர்வாகம் வங்கிகளுக்கு ஜாமீன் அளித்து தனியார் டாக்ஸிகளை மின்சார டாக்சிகளாக மாற்ற டாக்ஸி உரிமையாளர்களுக்கு கடன் வாங்கி கொடுக்கவும் முடிவு செய்துள்ளது.

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati