முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி கோயிலுக்கு வரும் சூப்பர் டெக்னாலஜி.. லட்டு, அறை மோசடிக்கு தேவஸ்தானம் வைத்த முற்றுப்புள்ளி!

திருப்பதி கோயிலுக்கு வரும் சூப்பர் டெக்னாலஜி.. லட்டு, அறை மோசடிக்கு தேவஸ்தானம் வைத்த முற்றுப்புள்ளி!

திருப்பதி லட்டு

திருப்பதி லட்டு

Tirupati | திருப்பதி மலையில் இடைத்தரகர்களின் கொட்டத்தை அடக்க அதிநவீன தொழில்நுட்பத்தை அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களில் சிலர் இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகள், லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்குவது தொடர்கதையாக உள்ளது. இந்த தொடர் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க தேவஸ்தான நிர்வாகம் எத்தனையோ முயற்சிகளை எடுத்து விட்டது. ஆனால் முற்றுப்புள்ளி வைக்க இயலவில்லை.

அதேபோல் தேவஸ்தான ஊழியர்கள், திருப்பதி மலையில் வசிப்பவர்கள் ஆகியோர் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் வரும்போது அவர்களுக்கு தங்குவதற்கு தேவையான அறைகள் வாங்குவது, லட்டு பிரசாதம் வாங்குவது ஆகியவற்றில் உதவி செய்வது வழக்கம்.

ஒரு சிலர் தொடர்ந்து தங்கும் அறைகள்,லட்டு பிரசாதம் ஆகிவற்றை வாங்குவதை தேவஸ்தான நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளது. எனவே இதற்கு அதிநவீன தொழில் நுட்ப ரீதியில் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் முற்றுப்புள்ளி வைக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக பேஸ் ஐடென்டிஃபிகேஷன் டெக்னாலஜி என்று கூறப்படும் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஒன்றாம் தேதி முதல் லட்டு பிரசாதம் வாங்குவது, தங்குவதற்காக அறைகளை பெறுவது, அறைகளை பெற்று கொண்டபோது செலுத்தப்பட்ட டெபாசிட் பணத்தை திரும்ப பெறுவது ஆகியவை போன்ற பணிகளுக்காக யாராவது தொடர்ந்து கவுண்டர்களுக்கு சென்றால், அங்கிருக்கும் கேமராவில் பொருத்தப்பட்டிருக்கும் பேஸ் ஐடென்டிஃபிகேஷன் சாப்ட்வேர் இந்த மனிதர் இந்த வாரத்தில் இத்தனை நாள் வந்திருக்கிறார் என்று அங்கிருக்கும் கம்ப்யூட்டர் மூலம் காட்டி கொடுத்து விடும்.

இதன் மூலம் இடைத்தரகர்கள் செயல்பாட்டிற்கு செக் வைக்கவும், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்காக லட்டு பிரசாதம், தங்கும் அறைகள் ஆகிவற்றை வாங்குவதற்காக செல்பவர்களின் செயல்பாட்டை குறைக்கவும் தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் பரிசோதனை அடிப்படையில் இந்த முயற்சியை தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலையில் மேற்கொள்ள உள்ளது. அப்போது கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் தேவையான மாற்றங்களை செய்து தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலையில் தொடர்ந்து இந்த நடைமுறையை அமல்படுத்த உள்ளது.

First published:

Tags: Laddu, Tirumala Tirupati, Tirupathi, Tirupati laddu