சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைக்குரிய சந்திரன் ஸ்லோகம்

சந்திரன்

ஜாதகத்தில் தாய் ஸ்தானத்திற்குரியவர் சந்திரன். எனவே தாயின் சாபம் பெற்றவர்கள், தாயை நல்ல முறையில் பேணி பாதுகாக்காதவர்கள், அவசியம் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் விரதம் இருத்தல் நல்லது.

 • Share this:
  சந்திரன் ஸ்லோகம்

  ’பத்ம த்வாஜய வித்மஹே
  ஹேம ரூபாய தீமஹி
  ஸ்ரீ வேங்கடலாசலபதி தந்நஸ் ஸோம ப்ரசோதயாத்’

  இந்த சந்திரனுக்குரிய மந்திரத்தை, ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை நேரத்தில் தீபம் ஏற்றும் வேளையில் உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரிக்கும் முன்பாக அகல் விளக்கில் தீபம் ஏற்றி, அந்த தீபத்தை நெல் பரப்பி அதன்மீது வைக்க வேண்டும். பின்னர் வெண் பொங்கல் நைவேத்தியம் படைத்து, 108 எண்ணிக்கையில் மல்லிகை பூவைக் கொண்டு வடமேற்கு திசை நோக்கி அமர்ந்து, சந்திரனுக்குரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். இதனால் அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

  இந்த மந்திரத்தை தினமும் 11 முறை ஜெபித்து வந்தாலும் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும். சந்திரனுக்குரிய தோஷங்கள் விலகி ஓடும். ஜாதகத்தில் தாய் ஸ்தானத்திற்குரியவர் சந்திரன். எனவே தாயின் சாபம் பெற்றவர்கள், தாயை நல்ல முறையில் பேணி பாதுகாக்காதவர்கள், அவசியம் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் விரதம் இருந்து சந்திரனை வழிபடுவது நல்ல பலன்களை அள்ளித்தரும்.

  மேலும் படிக்க... தடைகள் நீங்கி அனைத்து காரியங்களும் சித்தி பெற இந்த ஸ்லோகம் சொல்லுங்கள்

  சந்திரனுடைய திருத்தலங்கள்

  சந்திரன் ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதியாகி பலவீனம் அடைந்திருந்தாலோ, நன்மை தரும் பாவங்களுக்கு அதிபதியாகி பலவீனம் அடைந்திருந்தாலோ, அவருக்குரிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் சந்திர வலுவைக் கூட்டிக் கொள்ள முடியும்.

  கும்பகோணம் அருகில் உள்ள திங்களூர் என்ற ஊரில் இருக்கும் திருக்கோவில் சந்திர ஸ்தலம் எனப் புகழ் பெற்றது. இந்த ஸ்தலத்தில் சந்திரனை லக்னாதிபதியாகவோ, யோகாதிபதியாகவோ கொண்டவர் தன்னுடைய ஜென்ம நட்சத்திரம் அன்று வழிபட்டு குறைந்தது ஒரு ஜாமநேரம் கோவிலுக்குள் இருப்பது சந்திர வலுவைக் கூட்டும்.

  சென்னையில் இருப்பவர்கள் குன்றத்தூரில் இருந்து ஶ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் உள்ள சோமங்கலம் என்ற ஊரில் அருள் பாலிக்கும் சோமநாதீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபடலாம். திங்கள்கிழமைதோறும் செல்வது சிறப்பு. குறைந்தது ஒரு நாழிகை எனப்படும் இருபத்தி நான்கு நிமிடம் உள்ளே இருக்க வேண்டும். சேக்கிழார் பெருமானால் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இத்திருத்தலம் வடதிங்களூர் என்று புகழ்பெற்றது.

  தென்மாவட்டங்களில் இருப்பவர்கள் மதுரை திருப்பரங்குன்றத்தில் ஜீவசமாதியாகி அருள் புரிந்து வரும் சோமப்பா சாமிகளின் திருவிடத்தில் திங்கட்கிழமையோ அல்லது பவுர்ணமி தினமன்றோ சென்று வழிபடலாம். திருவண்ணாமலையில் பவுர்ணமியன்று கிரிவலம் செல்வதும் சந்திர பரிகாரம்தான்.

  எல்லாம் வல்ல இறைவன், ஏழுமலைகளும் குனிந்து நிற்க தானுயர்ந்து நிற்கும் பெருமாள், என்னைத் தரிசிக்க உனக்கு ஒரு நொடி போதும் என சிக்கனம் காட்டி குபேர சம்பத்தை வள்ளலாக அள்ளித் தரும் அய்யன், அலர்மேல்மங்கைத் தாயாரை மார்மீது கொண்ட எம்பெருமான், வேங்கடமுடையான் வீற்றிருக்கும் புனிதத் தலமான திருப்பதியும் சந்திரனின் வலுவைக் கூட்டும் திருவிடம்தான்.

  follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: