சைத்ரா நவராத்திரியின் போது துர்கையை வழிபட்டால் இந்த 5 ராசியினருக்கு நன்மை நடக்கும்...
சைத்ரா நவராத்திரியின் போது துர்கையை வழிபட்டால் இந்த 5 ராசியினருக்கு நன்மை நடக்கும்...
துர்க்கை அம்மன்
துர்கா சப்தசதியை பாராயணம் செய்வதன் மூலம் சகல நன்மைகளையும் அடைய முடியும். மேலும் 9 நாட்கள் தொடர்ந்து விரதம் இருக்க முடியாவிட்டால் 1, 3, 5 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் விரதம் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சைத்ரா நவராத்திரி ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 11 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நவராத்திரியில் செய்யப்படும் தேவி வழிபாடு பலன் தரும். சைத்ரா நவராத்திரியின் போது துர்க்கையை வழிபடுவது சனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. சைத்ரா நவராத்திரி ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 11 ஆம் தேதி முடிவடைகிறது. நவராத்திரியின் 9 நாட்களும் பக்தர்களுக்கு விசேஷமானது. இந்த நவராத்திரியில் செய்யப்படும் துர்கா தேவியின் வழிபாடு பலன் தரும். சைத்ரா நவராத்திரியின் போது துர்க்கையை வழிபடுவது சனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சனி தசை மற்றும் எழரை நாட்டு சனியால் பாதிக்கப்பட்டவர்கள் தேவியை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் நவராத்திரியின் போது அம்மனை வழிபடலாம்.
அதிலும் ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த நேரத்தில் மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் சனியின் தசையால் சிரமப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்களுக்கு நவராத்திரியில் தேவியை வழிபடுவது பலனளிக்கும்.
மேலும் ரிஷபம், மிதுனம், கன்னி, மகரம், துலாம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கும் நவராத்திரியில் அம்மன் வழிபாடு நன்மை தரும். இதனுடன் அவர்களின் சிறப்பு விருப்பங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
அத்துடன் துர்கா சப்தசதியை பாராயணம் செய்வதன் மூலம் சகல நன்மைகளையும் அடைய முடியும். மேலும் 9 நாட்கள் தொடர்ந்து விரதம் இருக்க முடியாவிட்டால் 1, 3, 5 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் விரதம் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.