• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் நாம் பயன்படுத்தலாமா?

இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் நாம் பயன்படுத்தலாமா?

இறந்தவர்களுடைய பொருட்களை நாம் பயன்படுத்தும் பொழுது நமக்கு என்ன நடக்கும்? என்பதைப் பொறுத்துதான் அதனை பயன்படுத்தலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டும்.

  • Share this:
    இறந்தவர்கள் பொருட்களை வீட்டில் வைக்கலாமா கூடாதா? பெரும்பாலும் இது ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. மேலும் இது பற்றி பலரும் அறியாத சில விசயங்கள் உள்ளன. 

    பெரும்பாலும் இறந்தவரின் ஜாதகத்தை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. இயற்கை முறையில் மரணமடைந்த 45 வயதிற்கு மேட்பட்டவர் ஜாதகத்தை மட்டுமே வீட்டில் வைத்திருக்க வேண்டும். அகால மரணமடைந்தவர்கள் அதாவது விபத்து அல்லது அதிக ஆசைகளுடன் துடிதுடித்து இறந்தவர்கள் போன்றோரின் ஜாதகங்களை வீட்டில் வைக்கவே கூடாது. அதனை ஆறு அல்லது ஓடும் நீரில் போட்டு விடுங்கள். இதனை வீட்டில் வைப்பது தவறான விசயமாகும்.

    அதே போல் இறந்தவர்களின் உடைகளை வீட்டில் வைக்கலாமா என்ற கேள்வி உண்டு. அதுவும் அப்படிதான் இரத்த கறை இருந்தால் வீட்டில் வைக்க வேண்டாம். குறிப்பாக இறந்தவர்களின் உள்ளாடைகளை வீட்டில் வைக்க வேண்டாம்.  இறந்தவர் அன்புக்குறியவர் என்பதால் அவரது ஜாதகம், துணிகளை நீங்கள் சேர்த்து வைப்பீர்கள். அதனை தூக்கிப் போடுவது கஷ்டம் தான். ஆனால் அவரின் ஆன்மாவிற்கு அமைதி தேவை என்பது போல் உங்களுக்கும் ஆபத்து அதிகம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    தங்க நகை


    இறந்தவர்களுடைய எந்த விதமான பொருட்களையும் கூடுமானவரை நாம் பயன்படுத்தாமல் இருப்பது தான் நல்லது. அது நகையாக இருப்பின் அவற்றை கடைகளில் கொடுத்து மாற்று நகையாக புதியதாக வாங்கிக் கொள்ளலாம். அதே நகையை நாம் பயன்படுத்துவது கூடாது.

    மேலும் படிக்க... நாளை ஐப்பசி மாத பிரதோஷ விரதம்!

    இறந்தவர்கள் வயதானவர்கள், வாழ்ந்து அனுபவித்து முடித்தவர்கள் என்றால் அவர்களுடைய நகைகளை பரம்பரை சொத்தாக பாதுகாத்து வருவது வழக்கம். அத்தகைய பரம்பரை சொத்துகளை நாம் தாராளமாக அனுபவிக்கலாம்.

    மேலும் படிக்க... ஐப்பசி மாதம் 2021 - விசேஷங்கள், விரதங்கள் குறித்த தகவல்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: