Buddha Purnima 2021: புத்த புர்ணிமா சிறப்புகள் & புத்தரின் வரலாறு

புத்தர்

புத்த பூர்ணிமா ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, சீன, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, தைவான், கம்போடியா, திபெத், லாவோஸ் போன்ற நாடுகளில் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது.

 • Share this:
  புத்தரை இந்து மதத்தில் மகா விஷ்ணுவின் அவதாரமாக கருதுகின்றனர். அவரை துதிக்க மறுப்பதில்லை.. புத்த மதத்தில் மூன்று முக்கிய பிரிவுகள் இருப்பினும் கொள்கைகள் அனைத்தும் புத்தருடையதே ஆகும். அது வாழ்வை நெறிபடுத்தும் என்பது உண்மை. இந்த ஆண்டு இன்று (மே 26) பூர்ண முழுமதி நாளான இன்று புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.

  புத்த பூர்ணிமா சிறப்புகள்

  புத்த பூர்ணிமா மூன்று வகைகளில் சிறப்பு மிக்கதாக கூறப்படுகிறது.

  1. புத்தர் பிறந்த தினம்
  2. புத்தர் ஞானம் பெற்ற தினம்
  3. புத்தர் இறையான தினம்

  என்ற மூன்றுமே மே மாதத்தில் வரும் பூர்ணை நாளில் நடந்ததாக வரலாறு உள்ளது.

  எனவே தான் புத்த பூர்ணிமா உலகம் முழுதும் பௌத்தர்களால் கொண்டாடப்படுகிறது.

  புத்த பூர்ணிமா ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, சீன, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, தைவான், கம்போடியா, திபெத், லாவோஸ் போன்ற நாடுகளில் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது.

  புத்தர் வரலாறு

  கபிலவஸ்து என்ற நாட்டில் மன்னனின் மகனான லும்பினி என்ற இடத்தில் பிறந்தார். சித்தார்த்தர் பிறந்தது முழு நிலவு நாளான வைசாகா ஆகும். புத்தர் பிறந்த போது அவரது வளமான எதிர்காலத்தை சுட்டிக்காட்டும் விதமாக அவரது உடலில் முப்பத்திரண்டு புனிதமான பிறவி அடையாளங்கள் இருந்தன. ஒரே மகன் என்பதால் உலகத் துன்பங்கள், கவலைகள் என எதுவும் தெரியாதவராக வளர்க்கப்பட்டார்.

  தந்தையான அரசர் சுத்தோதனர், சித்தார்த்தர் அவர்களுக்குப் பதினாறு வயதிருக்கும் போது, யசோதரா என்ற பெண்ணை மணமுடித்து வைத்தார். அவர்கள் இருவருக்கும் ராகுலா என்றொரு மகனும் பிறந்தான். அவர் வாழ்ந்து வந்த ஆடம்பர, அரச வாழ்வின் மீது பற்றற்றவராக இருந்தார், சித்தார்த்தர். அரண்மனையை விட்டு வெளியே சென்றார். தனது 29 வது வயதில் வெளி உலகைக் காண கிளம்பியவர் துன்பம் நிறைந்த உலக மக்களின் வாழ்க்கையைக் கண்டு அதிர்ந்து, துன்பங்களுக்கு காரணம் தேடி அலைந்தார்.

  ஆசைக்குக் காரணம் துன்பம் என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர். மேலும், நல்ல நம்பிக்கை, நல்லெண்ணம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை,நன்முயற்சி, நற்சாட்சி, நல்ல தியானம் போன்ற எண்வகை வழிகளையும் போதித்தவர். கயா என்னும் காட்டுப்பகுதியில் போதி மரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டுகள் தவம் செய்த சித்தார்த்தன், முடிவில் தனது பிறந்த நாளான அதே வைசாகா முழு நிலவு நாளில் ஞான ஒளியைப் பெற்று தனது கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடித்தார். அது முதல் அவர் கௌதம புத்தர் என அழைக்கப்பட்டார்.

  புத்தரின் நான்கு முக்கிய போதனைகள்:

  • துன்பத்தை மக்கள் எவராலும் தடுக்க முடியாது பிறப்பு, நோய், முதுமை, இறப்பு, ஆசை, பசி, வெகுளி, பகை, மயக்கம் அனைத்தும் துன்பத்தை தருபவை.

  • உலகில் மக்களின் துக்கத்திற்கு காரணம் ஆசை/பற்று ஆகும்.

  • ஆசையை துறப்பது துன்பத்தை தடுக்கும்.

  • நற்காட்சி, நல்லெண்ணம், நன்மொழி, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைபிடி, நற்தியானம் இவை எட்டும் துக்கத்தை போக்கும் வழிமுறைகள் ஆகும்.
  Published by:Vijay R
  First published: