Home /News /spiritual /

Tirupati | திருப்பதி மலைப்பாதையில் இன்று ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு...

Tirupati | திருப்பதி மலைப்பாதையில் இன்று ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு...

திருப்பதி மலைப்பாதையில் இன்று காலை ஏற்பட்ட பாறை சரிவில் 10 அடி தொலைவில் பயணிகள் உயிர் தப்பினர்.

திருப்பதி மலைப்பாதையில் இன்று காலை ஏற்பட்ட பாறை சரிவில் 10 அடி தொலைவில் பயணிகள் உயிர் தப்பினர்.

திருப்பதி மலைப்பாதையில் இன்று காலை ஏற்பட்ட பாறை சரிவில் 10 அடி தொலைவில் பயணிகள் உயிர் தப்பினர்.

    திருப்பதி மலைப்பாதையில் இன்று காலை 6 மணி அளவில் பெரும் பாறை சரிவு ஏற்பட்டது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் சாலையில் திருமலைக்கு அருகில் உள்ள வளைவு ஒன்றின் மேற்பகுதியில் இருந்து சுமார் 5 டன் எடையுள்ள பெரிய பாறை திடீரென்று சரிந்து விழுந்தது.

    அங்கிருந்து சரிந்த பாறை மலைப்பாதையில் அடுக்கடுக்காக உள்ள மூன்று இடங்களை தாண்டி சென்று நின்றது. இதனால் மலைப்பாதையில் மூன்று இடங்களில் கடுமையான மண்சரிவு ஏற்பட்டு மரங்கள் சரிந்து விழுந்துள்ளன. மேலும் சாலையில் உள்ள பல்வேறு இடங்களில் நீளமான பிளவுகள் ஏற்பட்டுள்ளன.

    இந்தநிலையில் இன்று காலை தேவஸ்தான ஊழியர்கள், பக்தர்கள் ஆகியோரை ஏற்றி கொண்டு திருமலைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் ஓட்டுநர் பாறை சரிவு ஏற்பட்ட இடத்திற்கு பத்தடி தொலைவில் பேருந்து இருந்த போதே சரிவு ஏற்படுத்துவதை கவனித்து உடனடியாக பின்னோக்கி நகர்த்தினார்.

    அவர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படாமல் இருந்திருந்தால் பேருந்து முழுவதுமாக பாறை சரிவில் சிக்கி பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்ட பேருந்து ஓட்டுனரை பயணிகள் பாராட்டினர். இந்நிலையில் இதுபற்றி கூறிய பேருந்து ஓட்டுனர் காலை நேரத்தில் திருப்பதி மலை முழுவதும் மேகமூட்டம் காணப்பட்டது. இதனால் எதிரில் இருப்பவர்களை கூட காண இயலாத நிலை நிலவியது.



    மேலும் படிக்க..திருப்பதி இலவச தரிசன டிக்கெட்டுகள் என்ன ஆனது தெரியுமா?

    அந்த இடத்தில் சென்று கொண்டிருந்த போது மலைப் பகுதியிலிருந்து பெரிய சத்தம் கேட்டது. எனவே ஏதோ சரிந்து விழுகிறது என்பதை புரிந்து உணர்ந்து கொண்ட நான் உடனடியாக பேருந்தை பின்னால் இயக்கி நிறுத்தினேன் என்று கூறினார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Tirupati

    அடுத்த செய்தி