• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • உங்கள் கடன் தீர வேண்டுமா? அப்போ உடனே இந்த பரிகாரத்தை பைரவருக்கு செய்யுங்கள்...

உங்கள் கடன் தீர வேண்டுமா? அப்போ உடனே இந்த பரிகாரத்தை பைரவருக்கு செய்யுங்கள்...

கால பைரவர்

கால பைரவர்

பைரவருக்கான இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை தோறும் செய்து வர வேண்டும்.

  • Share this:
    நாம் ஒவ்வொருவருக்கும் கடன் பிரச்சனைதான் பெரிய பிரச்னையாக இருக்கும். ஒருவரிடம் கடன் வாங்கி விட்டால் போதும். அவர்கள் எப்போது வீட்டிற்கு வந்து என்ன சொல்லித் திட்டி கடனை திருப்பி கேட்பார்கள் என்று மனது எப்பொழுதும் கவலையுடனும், படபடப்புடனுமே இருக்கும். இவ்வாறான கடன் பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபட பைரவருக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

    எவரும் மகிழ்ச்சியாக விருப்பத்துடன் கடன் வாங்குவதில்லை. ஆனால் சில நேரங்களில் தாங்கள் சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இந்தக் கடனை உடனே திருப்பி செலுத்த முடியாமல் நிறைய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள்.

    இவ்வாறான கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட பைரவருக்கு மிளகு பரிகாரம் செய்தல் வேண்டும். 27 மிளகுகளை ஒரு சிறிய வெள்ளை துணியில் வைத்து மூட்டையாகக் கட்டிக் கொள்ள வேண்டும். அதனை நீங்கள் தூங்கும் முன் உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும். பின்னர் காலை எழுந்தவுடன் குளித்து விட்டு, இந்த மிளகு மூட்டையுடன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

    கருப்பு மிளகு


    அங்கு பைரவர் முன் நின்று ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த மிளகு மூட்டையை அதில் நனைத்து வைத்து தீபம் ஏற்றவேண்டும். தீபம் ஏற்றும் பொழுது உங்கள் மனதில் எவரிடம் நீங்கள் கடன் வாங்கி உள்ளீர்களோ அவரின் பெயரை உச்சரித்து, இவரிடம் நான் வாங்கிய கடன் விரைவில் அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பைரவருக்கான இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை தோறும் செய்து வர வேண்டும். தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த மிளகு பரிகாரத்தை செய்து வந்தால் உங்களுக்கு தொல்லை கொடுக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர்ந்து மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும்.

    மேலும் படிக்க... தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன் தெரியுமா?

    அதேபோல் வாரம் ஒரு முறையாவது மிளகுடன் சிறிதளவு கல்லுப்பு சேர்த்து உங்களையும், உங்கள் வீட்டையும் சுற்றி விட்டு அதனை எரியும் நெருப்பில் போட்டு விட்டால் அந்த நெருப்பில் எப்படி மிளகு பொரிகிறதோ அதே போல் உங்களுக்கு இருக்கும் அனைத்து கண் திருஷ்டிகளும் பொரிந்து விடும். பிறகு உங்கள் வீட்டில் பணத்திற்கான வரவு நீங்கள் எதிர்பார்க்காத வகையில் உங்களை வந்தடையும் என்பது ஐதீகம்.

    மேலும் படிக்க... ஜோதிடத்தில் எட்டு ஏன் மோசமாக சொல்லப்படுகிறது?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: