கஷ்டங்களை தீர்க்கும் வெற்றிலை... 12 ராசிக்கான பரிகாரங்கள் என்னென்ன?

கஷ்டங்களை தீர்க்கும் வெற்றிலை

கல்யாண வீட்டில் ஆரம்பத்தில் இருந்து கடைசியாக கல்யாண‌ சாப்பாடு சாப்பிட்ட பிறகு சாப்பிடும் பொருள் வெற்றிலையாகத்தான் இருக்கும். ஏனெனில் மருத்துவ குணம் நிறைந்த பொருளாக வெற்றிலை விளங்குகின்றது. அதனால் நம் முன்னோர்கள் அதனை எல்லா இடங்களிலும் பயன்படுத்தியுள்ளனர்.

  • Share this:
    வீட்டில் எந்த விஷேசமாக இருந்தாலும் சரி.. சாமிக்கு படையல் வைத்து கும்பிடும் பண்டிகையாக இருந்தாலும் சரி... அனைத்து விஷேச வீடுகளிலும் தாம்பூலத் தட்டில் வெற்றிலை கண்டிப்பாக இருக்கும்... அதிலும் கல்யாண வீட்டில் ஆரம்பத்தில் இருந்து கடைசியாக கல்யாண‌ சாப்பாடு சாப்பிட்ட பிறகு சாப்பிடும் பொருள் வெற்றிலையாகத்தான் இருக்கும். ஏனெனில் மருத்துவ குணம் நிறைந்த பொருளாக வெற்றிலை விளங்குகின்றது. அதனால் நம் முன்னோர்கள் அதனை எல்லா இடங்களிலும் பயன்படுத்தியுள்ளனர்.

    அதுமட்டுமல்லாமல் வெற்றிலை காம்பில் பார்வதிதேவியும், வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும் வாசம் செய்வதாக‌ ஐதீகம். ஆக‌, அனைத்து சுபகாரியங்களிலும் முக்கிய பங்கு வகிக்கும் வெற்றிலையை எந்த ராசிக்காரர்கள் என்ன செய்தால் அவர்களின் கஷ்டங்கள் தீரும் என்பதப் பற்றிதெரிந்து கொள்ளலாம் வாங்க...

    துன்பங்களைப் போக்கும் வெற்றிலை 12 இராசிக்காரர்களுக்கான‌ பரிகாரம் 

    மேஷம்

    வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துன்பங்கள் அகலும்.

    ரிஷபம்

    வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.

    மிதுனம்

    வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.

    கடகம்

    வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக் கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷ்டங்கள் விலகும்.

    சிம்மம்

    வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷ்டம் விலகும்.

    கன்னி

    வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.

    துலாம்

    வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.

    விருச்சிகம்

    வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.

    தனுசு

    வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

    மகரம்

    வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

    கும்பம்

    வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

    மீனம்

    வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் நோய் தீரும்..

    மேலும் படிக்க... சித்தர்கள் வணங்கும் நவபாஷாண பைரவர்...     

    தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன் தெரியுமா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

     
    Published by:Vaijayanthi S
    First published: