அனைத்து நலன்களையும் பெறும் பல வழிகளில் ருத்ராட்சமும் ஒன்று. இது குறித்த இரகசியங்களை தெரிந்துக் கொள்வது வளமான வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகும். இது இறையருள் பெற ஏற்றது, சகல தோஷங்களையும் போக்க வல்லது, பெரும் செல்வம் சேர்க்கச் செய்வது, ஆரோக்கியத்தையும் நல்ல புத்தியையும் அருள்வது, சிறந்த ஞானம் ஏற்பட வழி வகுப்பது, நவ சக்திகள் நம்மிடம் உருவாக வைப்பது, சுப காரியங்களைத் தடையின்றி நிறைவேற்றி வைப்பது, காம தேவனின் அருள் சித்திப்பது என இப்படி மனித வாழ்வில் ஒருவன் எதை எதைப் பெற விரும்புகிறானோ அதைப் பெற வைப்பது ருத்ராட்சமே. இதை அணிவது என்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு பழக்கம் என்பது குறிப்பிடத் தகுந்தது.
இன்று உலகில் 38 வகை ருத்ராட்சங்களில் 21 வகைகள் கிடைக்கின்றன. ருத்ராட்ச வகைகளும், அவை தரும் பலன்களும் குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...
ருத்ராட்ச பழங்கள் அல்லது விதைகள் சுத்தப்படுத்தப்பட்டு நடுவில் உள்ள துவாரம் வழியே நூலால் இணைக்கப்பட்டு மாலையாக்கி அணிவது சாதாரணமாக நடைமுறையில் உள்ள ஒரு மரபாகும். ருத்ராட்சங்களின் பகுதிகளை முகம் என்று அழைக்கிறோம். ஒரு முகத்திலிருந்து 21 முகம் வரை உள்ள ருத்ராட்சங்கள் கிடைக்கின்றன என்ற போதிலும் சில வகைகள் கிடைப்பது அரிது.
ஒரு முகம் : சிவ சொரூபம் உடையது
இரண்டு முகம் : அர்த்த நாரீஸ்வர சொரூபம். இதை அணிபவரிடம் அர்த்த நாரீஸ்வரரின் அருள் இருக்கும்.
மூன்று முகம் : மூன்று அக்னிகளின் சொரூபம். இதை அணிந்தால் அக்னி தேவனின் அருள் கிடைக்கும். ஸ்த்ரீ ஹத்தியை ஒரு நொடியில் போக்கும்.
நான்கு முகம் : பிரம்மாவின் வடிவம். இதை அணிவதால் பிரம்ம பிரீதி ஏற்படும். நரனைக் கொன்ற பாவம் போக்கும்.
ஐந்து முகம் : பஞ்ச பிரம்ம சொரூபம். பிரம்மஹத்தி பாவத்தையும் போக்க வல்லது.
ஆறு முகம் : முருகனை அதி தேவதையாகக் கொண்டது. இதை அணிவதால் பெரும் செல்வமும், சிறந்த ஆரோக்கியமும் ஏற்படும். நல்ல புத்தி, ஞானம், தூய்மை ஆகியவை கிடைக்கும். புத்திமான் இதை அணிய வேண்டும். விநாயகர் முதலிய தெய்வங்களும் அருள் புரிவர் என அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஏழு முகம் : சப்த மாதாக்களை அதி தெய்வமாகக் கொண்டது. இதைத் தரிப்பதால் செல்வ வளம், உடல் நலம் சிறந்த ஞானம் ஏற்படும்.
Also see... ருத்ராட்சம் உருவான கதை!
எட்டு முகம் : எட்டு மாத்ருகா தேவிகளின் உறைவிடம். இதை அணிபவர்கள் ஸத்தியவாதிகளாவர். அஷ்ட மாதாக்களின் அருளையும் அஷ்ட வசுக்களின் பிரியத்தையும் கங்காதேவியின் அருளையும் பெறுவர்.
நவ முகம் : நவ சக்திகளின் உறைவிடம். இதை அணிவதால் நவ சக்திகளின் அருள் ஏற்படும்.
தச முகம் : யமனை அதி தேவதையாகக் கொண்டது. இதை அணிவதால் நவ கிரக தசைகளின் சாந்தி ஏற்படும்.
பதினொரு முகம் : ஏகாதச ருத்ரர்களை அதி தேவதையாகக் கொண்டது. எப்போதும் சௌபாக்கியத்தை வளர்க்கும்.
பன்னிரெண்டு முகம் : மஹா விஷ்ணு சொரூபம். 12 ஆதித்யர்களையும் தன்னுள் கொண்டது.
பதிமூன்று முகம் : விரும்பிய சுப சித்திகளை அருள்வது. இதை அணிவதால் காம தேவனின் அருள் ஏற்படும்.
பதினான்கு முகம் : ருத்ர நேத்திரத்திலிருந்து தோன்றியது. எல்லா வியாதிகளையும் போக்கி எப்போதும் ஆரோக்கியத்தை நிலை நிறுத்தும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.