ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

நன்மைகள் பல தரும் துளசி விரத வழிபாடு!

நன்மைகள் பல தரும் துளசி விரத வழிபாடு!

துளசி

துளசி

வீட்டில் செல்வம் தங்கவும், மகாலஷ்மி நிலைத்திருக்கவும் துளசி வழிபாடு அவசியம் என்கிறது. துளசி வழிபாடு என்பது சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தருவதோடு குழந்தைப்பேறை தரும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசித்தாய் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்று துளசித் தாய்க்கு விரதமிருந்து பூஜை செய்வது மிகுந்த பலனை தரும். துளசி பூஜை செய்ய வாரத்தில் செவ்வாய்க் கிழமையும், வெள்ளிக் கிழமையும், கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசியும் ஏற்ற நாட்கள் ஆகும்.

கார்த்திகை மாதம் ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று மகாவிஷ்ணு துளசியைத் திருமணம் செய்து கொண்டார். அந்த நாளை ‘‘பிருந்தாவன துளசி’’ அல்லது ‘துளசிக்கல்யாணம்’ எனக் கொண்டாடுவார்கள். அன்று காலை சுமங்கலிப் பெண்கள் குளித்துவிட்டு, விரதமிருந்து துளசி மாடத்தை சுற்றி மெழுகி, கோலமிட்டு காவி பூச வேண்டும். சாதம், பால் பாயாசம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழங்கள், தேங்காய் வைத்து பூஜை செய்ய வேண்டும். ஒரு விளக்கு திரியை நெய்யில் வைத்து, தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.

மேலும் படிக்க... கந்தர் சஷ்டி கவசம் படிப்பதால் உண்டாகும் நன்மைகள்

துளசி லட்சுமி வடிவானவள். துளசி செடியுடன் நெல்லிமரக்குச்சி (மகாவிஷ்ணு வடிவம்) சேர்த்து வைக்க வேண்டும். வீட்டில் சாளகிராமம் இருந்தால் அதனையும் துளசி மாடத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும். நிவேதனமாக சர்க்கரை பொங்கல் வைத்து வணங்க வேண்டும். துளசி பூஜைக்கு முன்னர் விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும்.

பூஜை முடிந்ததும் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பூ, கண்ணாடி வளையல்கள் வைத்து கொடுக்க வேண்டும். ஒரு ஏழை அந்தண சிறுமியை மனையில் அமர வைத்து சந்தனம் பூசி, குங்குமம், புஷ்பம், புதுத்துணி கொடுக்க வேண்டும். பால் பாயாசத்தை பாத்திரத்துடன் தானம் கொடுக்கலாம்.

மேலும் படிக்க... ஆவணி மாதத்தில் வரும் விஷேசங்கள் என்னென்ன?

துளசி

இந்த துளசி இலையின் நுனியில் பிரம்மனும், அடியில் சிவபெருமானும், இடையில் விஷ்ணுவும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. துளசி என்றால் தன்னிகர் இல்லாத பெண். ஸ்ரீ மகாலஷ்மியின் அம்சமாக கருதப்படும் துளசி திருமாலின் மார்பை அலங்கரிப்பதிலும் முக்கிய இடம்பிடித்துள்ளது. துளசியில் சகல தேவதைகளும் வாழ்வதாக சொல்கிறார்கள் ஆன்மிக பெரியவர்கள்.

மேலும் படிக்க... வெற்றி பெற வைக்கும் காயத்ரி மந்திரங்களும் அதன் நன்மைகளும்!

துளசி இலை பட்ட தண்ணீர், கங்கை நீருக்குச் சமமானதாக கருதப்படுகிறது. துளசி செடியில் தேங்கியிருக்கும் நீர் புண்ணிய தீர்த்தத்துக்கு நிகரானது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துளசி பூஜை செய்தால் எட்டு வகை செல்வங்களும் பெறலாம் என்பது ஐதிகம். கன்னிப்பெண்கள் திருமணத்தடை நீங்க துளசி வழிபாடு செய்தால் விரைவில் மாங்கல்ய தோஷம் நீங்கி மண வாழ்க்கை அமையும்.

துளசி தண்ணீர்

ஜோதிட சாஸ்திரமானது வீட்டில் செல்வம் தங்கவும், மகாலஷ்மி நிலைத்திருக்கவும் துளசி வழிபாடு அவசியம் என்கிறது. மேலும் துளசியானது மகாலஷ்மியின் அம்சம் என்பதால் சுக்கிரனின் அம்சத்தையும் செவ்வாயின் காரகத்தையும் கொண்டிருக்கிறது. துளசியை வணங்கினால் செவ்வாய், புதன், சுக்கிரனிடம் நன்மைகளைப் பெறலாம்.

ஆயிரம் குடம் பாலைக் கொண்டு தரிசிப்பதை விட ஒரு குடம் துளசி தீர்த்தத்தால் உள்ளம் மகிழ்வார் விஷ்ணு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஒரு துளசி மாலை தந்துவிடும். மங்கலமாய் என்னை வணங்கினால் உங்கள் தீங்கை குறைத்து நல்வினை தருவேன் என்கிறாள் மகாலஷ்மியின் அம்சமான துளசி.

மேலும் படிக்க... நவகிரகங்களுக்கு உரிய நவதானிய தானங்கள்!

ஸ்ரீ பத்ம புராணத்தில் துளசி வழிபாடு பற்றி சிறப்பாக கூறப்பட்டுள்ளது. தசரத மகாராஜன் குழந்தை பேறு வேண்டி முதலில் துளசி பூஜை செய்ததாகவும் துளசி தேவி காட்சி தந்து துளசி காஷ்டம் என்னும் துளசி குச்சிகளைக் கொண்டு புத்திரகாமேஷ் என்னும் யாகம் செய் உனக்கு இறைவனே மகனாக பெறும் பாக்கியம் பெறுவாய் என்றாள். துளசி வழிபாடு என்பது சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தருவதோடு குழந்தைப்பேறை தரும் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

மேலும் படிக்க... ஒன்பது எனும் எண் ஆன்மீக மகத்துவங்கள் கொண்டது எப்படி?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Kollam thulasi, Temple