• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • முக்தியை அளிக்கும் திருவண்ணாமலை தீபம்!

முக்தியை அளிக்கும் திருவண்ணாமலை தீபம்!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என 5 வகையான தீபங்கள் ஏற்றப்படும். இந்த தீப தரிசனத்தின் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து தெரிந்துக் கொள்ளல்லாம் வாங்க...

  • Share this:
    நாம் நினைக்கும் மாத்திரத்திலேயே நமக்கு முக்தியை அருளும் தலம் திருவண்ணாமலை. இங்கே மிக சிறப்பான விஷயம் மலையே லிங்கமாக காட்சி அளிப்பதுதான்.  மலையை சுற்றி வரும்போது ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு கோணங்கள் மூலம் ஏகன் முதல் அனேகன் வரை ஐந்து விதமான தரிசனங்கள் கிடைக்கப்பெறும். கிரிவல முடிவில் திருவண்ணாமலையில் பஞ்சலிங்க தரிசனம் என்றொரு இடம் இருக்கிறது. அங்கே இசக்கி சித்தர் சமாதி அருகே நின்று உங்கள் ஐந்து விரல்களை விரித்து பாருங்கள். ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு மலையை சுட்டிக் காட்டும். அதில் நடுவிரல் காட்டும் மலையை இன்னும் ஆழகமாக பார்த்தால் ஒற்றை லிங்கமாக அங்கே உச்சியில் நம் அண்ணாமலையார் வீற்றிருப்பார்.

    திருவண்ணாமலை கார்த்திகை பௌர்ணமி அன்று மிக விசேஷமாக காணப்படும் காரணம் தெரியுமா?  மனிதபிறப்பெடுத்த ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த கார்த்திகை மகா தீபத்தை பார்ப்பது மோட்சத்தை அருளும். இன்னொரு பிறவித்துன்பம் இனி இருக்காது என்பது நம்பிக்கை

    மகா தீபம் ஏற்ற செப்பினால் ஆன கொப்பரை ஒன்றினைப் பயன்படுத்துகிறார்கள். இந்த கொப்பரை ஐந்து அடி உயரமானது. மேலே 4 அடி அகலமும் அடிப்பாகம் 2 அடி அகலமும் கொண்டிருக்கும். ஒவ்வொரு தீபத்திருநாளிற்கும் இதில்தான் தீபம் ஏற்றப்படுகிறது. விளக்கினை போல் எண்ணெய் ஊற்றி திரியிட்டு ஏற்றுவதல்ல மகாதீபம். காடா துணி என்ற துணி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 2000 மீட்டர் வரை காடா துணி வாங்கப்படுகிறது என்கிறார்கள். அதற்கு மேலும் பக்தர்கள் கொடுக்கும் துணியும் பயன்படுத்தப்படும்.

    மேலும் படிக்க... கார்த்திகை தீப திருநாள்: வழிபடும் முறைகளும் அதன் பலன்களும்  

    தீபமேற்றும் வழிமுறைகளும் அதன் பலன்களும்

    மகாதீபத்தை பார்த்தவர்களுக்கே மோட்சம் என்றால் அதனை ஏற்றுபவர்கள் எத்தனை பெரிய பாக்கியவான்கள்.. காலம் காலமாக மீனவ சமூகத்தினர் மட்டுமே இங்கே இந்த மகா தீபத்தை ஏற்ற முடியும். பர்வத மகாராஜா குலத்தை சேர்ந்த மீனவர்கள் இந்த சேவையை பக்தியுடன் செய்து வருகின்றனர்.

    திருக்கார்த்திகை தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு தினமும் 2500 அடி உயரம் உள்ள மலையில் கொப்பரையில் எரிந்து கொண்டிருக்கும் தீபம் அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது இவர்கள் கடமை. தினமும் மாலை கொப்பரையை சுத்தம் செய்து மீண்டும் நெய்யால் நனைத்த காடா துணியை வைத்து 11 நாட்கள் விடாமல் விளக்கேற்றுகிறார்கள். தினமும் சுத்தம் செய்யும்போது கொப்பரையில் உள்ள மையினை சேகரிக்கிறார்கள்.

    மேலும் படிக்க... கார்த்திகை தீப திருநாள்: வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?

    இந்த  11 நாட்களில் ஏதாவது ஒருநாள் இந்த தீபத்தின் தரிசனத்தை காண்பது பல செல்வங்கள் நிலைக்கவும் வம்சம் தழைக்கவும் அருளி செய்கிறது. இந்த நன்னாளில் பக்தர்கள் அவரவர் வீட்டில் விளக்கேற்றுவது உங்கள் வம்சத்தை செல்வச்செழிப்போடு வாழ வைக்கும். அறநெறி தவறாத பிள்ளைகளால் உலகம் மகிழும். ஒவ்வொரு நிலைப்படியிலும் இரண்டிரண்டு விளக்கு ஏற்றுங்கள். முன்வாசலில் குத்துவிளக்கு கொண்டு தீபம் ஏற்றுங்கள். இறை அருள் உங்கள் வீடு தேடி வரும் என்பது ஐதீகம்.

    மேலும் படிக்க... திருவண்ணாமலையும்.. ஒன்பது கோபுரங்களும்...

    நன்மைகள்

    1. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.

    2. திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து “நமசிவாய” சொன்னால், அந்த மந்திரத்தை 3 கோடி தடவை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.

    3. திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும் பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர், சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர்.

    மேலும் படிக்க... கார்த்திகை தீபத்தன்று பழைய விளக்குகளை ஏற்றலாமா?

    4. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைப் பார்த்து வணங்கியபடி கிரிவலம் வந்தால், அந்த ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு ஆன்மசக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

    5. தீபத் திருநாளில் 5 தடவை (மொத்தம் 70 கி.மீ. தூரம்) கிரிவலம் வந்தால், அவர்கள் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும், அவற்றில் இருந்து முழுமையான விமோசனம் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    6. மலை மீது தீபம் ஏற்றப்படும் போது, “தீப மங்கள ஜோதி நமோ, நம” என்ற பாடலை பாடி வழிபட்டால் வாழ்வில் மங்களம் பெருகும்.

    7. கார்த்திகைத் தீபத்துக்கு மூன்றாவது நாள் மலையை பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது மிகச்சிறப்பாக நடைபெறும்.

    8. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண சித்தர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை. அப்படி வரும் சித்தர்கள் மலை உச்சியில் தீபம் ஏற்றும் கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகைத் தைலங்களை சேர்த்து விடுவதாகச் சொல்கிறார்கள். இதனால் தீபத்தில் இருந்து வெளிப்படும் புகை தீய சக்திகளை அழிப்பதாக கருதப்படுகிறது.

    மேலும் படிக்க...  திருவண்ணாமலை தீப திருவிழா... 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை

    9. சிவபெருமான் கார்த்திகை தீபநாளில் அக்னியில் நடனம் ஆடுவதாக ஐதீகம். இந்த நடனத்துக்கு முக்தி நடனம் என்று பெயர்.

    10. மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும். பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம். இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.

    மேலும் படிக்க... திருவண்ணாமலையில் மகா தீபம் எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்களும்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: