• HOME
 • »
 • NEWS
 • »
 • spiritual
 • »
 • சனி தசை எப்படிப்பட்ட பலன்களை தருவார் தெரியுமா?

சனி தசை எப்படிப்பட்ட பலன்களை தருவார் தெரியுமா?

சனி தசை

சனி தசை

சனி பகவான் என்ற உடன் பலருக்கும் ஒருவித பயம், அச்சம் ஏற்படும். ஜோதிடத்தின் மீது பெரியளவில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனிப் பெயர்ச்சி நடக்கும் போது, தன்னுடைய ராசிக்கு என்ன பலன் என பார்க்க ஆர்வமாக பார்ப்பார்கள்.

 • Share this:
  சூரியன் - சாயா தேவியின் புத்திரரான சனி பகவான். காகத்தினை வாகனமாகக் கொண்டவர். இவருடைய கால் சிறிது ஊனமென்றும், அதனால் மெதுவாக அல்லது மந்தமாக நடப்பவர் என்றும் கூறப்படுகிறது. எனவே மந்தன் எனும் பெயர் இவருக்கு வழங்கப்படுகிறது. இவர் ஏழரை, அஷ்டம, அர்த்தாஷ்டம மற்றும் கண்டக சனி காலத்தில் ஒருவருக்குப் பல வித அனுபவங்களைத் தந்து மனதை பக்குவப்படுத்துவார்.

  எல்லோருமே தங்களது வாழ்நாளில் சனி தசை அல்லது சனி புத்தியை சந்திப்பார்கள். அப்படி சந்திப்பவர்கள் அனைவருக்குமே சனி தசை அல்லது புத்தி தங்களுக்குத் தீமைதான் செய்யுமா? அல்லது நன்மையும் செய்யுமா? சனி தசையின் பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க...

  சனி தசை அனுபவ ரீதியாகப் பார்க்கும் போது அனைவருக்குமே தீமை செய்வது கிடையாது. குறிப்பாக, ரிஷபம், துலாம், மகரம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி தசை அல்லது புத்தி அபரிவிதமான நன்மைகளைத் தான் செய்கிறது.

  மேலும் படிக்க... ஏழரைச் சனி என்றால் என்ன? யாருக்கு பாதிப்பு வரும்?

  அதுவே, கடகம், சிம்மம், மேஷம், விருச்சிகம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு தீய பலன்களை தருவது என்பது உண்மை தான். இதில் குறிப்பாக சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு நிச்சயம் சனி தசை அல்லது புத்தி சிம்ம சொப்பனமாகத் தான் இருக்கும்.

  மிதுனம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ஆகிய வீடுகளை லக்கினமாகக் கொண்டவர்களுக்கு சனி தசை அல்லது புத்தி என்பது மத்திம பலனைத்தான் தரும். மற்றபடி, ஒருவருடைய சுய ஜாதகத்தில் சனி பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று சுப கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் கூட சனி தசை அல்லது புத்தி ஓரளவு நல்ல பலன்களை அந்த ஜாதகருக்குத் தரும். அது அவர் எந்த லக்கினத்தில் பிறந்திருந்தாலும்...

  மேலும் படிக்க... குரு பெயர்ச்சி பலன்கள் 2021: 12 ராசிகளுக்கான பொது பலன்கள்

  சனி பகவான்


  அதுவே, சனி 8 ஆம் இடத்தில் இருந்து சனி தசை அல்லது புத்தி நடந்தால் அந்த ஜாதகருக்கு அறுவை சிகிச்சை கூட ஏற்பட இடம் உண்டு. அதிலும் குறிப்பாக சிலர் சனி தசையில் வேலை போய்விடும் என்று நினைக்கின்றனர். ஆனால், உண்மை யாதெனில், சனி தசை அல்லது புத்தியில் புதிய பொறுப்புகள் கொடுக்கப்படும். சவாலான காரியங்களை செய்ய வேண்டிய நிலை இருக்கும். சிலருக்கு ஒரே சமயத்தில் இரண்டு - மூன்று வேலைகளை முடிக்க வேண்டிக் கூட வரலாம். இதனால் வேலை பளு அதிகரிக்க இடம் உண்டு. அதிலும், அதிக அளவில் ஆட்குறைப்பு ஏற்பட்டு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்படும்

  இதனால் சனி தசை அல்லது சனி புத்தியில் அவர்களாகவே வேலையை விடும் படியான நிலையைப் பெறுவார்கள். அதை விடுத்து வேலை நம்மை வேண்டாம் என்று சொல்லாது. புதிய வேலை தேடும் சிலருக்கு சனி தசை அல்லது புத்தியில் எதிர்பார்த்ததை காட்டிலும் சொற்ப சம்பளம் கிடைக்கப்பெறலாம்.

  சனி பகவான்


  மேலும் படிக்க... கந்த சஷ்டி கவசத்தின் பாடல் வரிகள்...

  சனி தசை அல்லது சனி புத்தி அல்லது கோச்சாரப் படி சனி மோசமான இடங்களுக்கு செல்லும் சமயத்தில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்...

  1. ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு சனிக் கிழமையில் உங்களால் முடிந்த அளவில் உணவுப் பொட்டலம் வாங்கித் தரலாம்.

  2. பெற்றோர்களை பறி கொடுத்தவர்கள் காக்கைக்கு உப்பு போடப்படாத தயிர் சாதத்தில் கருப்பு எள் கலந்து சோறு வைத்து சனி தேவனை வழிபடலாம்.

  3. கோயில் தீபங்களுக்கு உங்களால் இயன்ற அளவில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் நல்லெண்ணெய் வாங்கித் தரலாம்.

  4. உடல் ஒத்துழைத்தால் சனிக் கிழமையில் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்யலாம்.

  இப்படி இந்த பரிகாரங்களை செய்து ஜாதகத்தில் சனி தசை அல்லது சனி புத்தியில் நடக்கும் தீமைகளை ஓரளவு குறைத்துக் கொள்ளலாம்.

  மேலும் படிக்க... பெளர்ணமி தினத்தின் சிறப்புகள் என்ன?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: