• HOME
 • »
 • NEWS
 • »
 • spiritual
 • »
 • கந்தர் சஷ்டி கவசம் படிப்பதால் உண்டாகும் நன்மைகள்

கந்தர் சஷ்டி கவசம் படிப்பதால் உண்டாகும் நன்மைகள்

கந்தர் சஷ்டி கவசம்

கந்தர் சஷ்டி கவசம்

முருகனின் பெயரால் நவகிரகங்களும் நமக்கு துணை நிற்பார்கள். எதிரிகளின் மனம் மாறி தோழமை உண்டாகும். வீட்டை பிடித்திருக்கும் தரித்திரம், பீடை, செய்வினைகள் அடியோடி அழிந்துவிடும். வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறை சக்திகளான லட்சுமி கடாட்சம், குழந்தை பாக்கியம், மன நிம்மதி உண்டாகும்.

 • Share this:
  முருகனை நினைத்தாலே கஷ்டங்களும், கடின சோதனைகளும் ஓடிவிடும். முருகனின்  அருள் பெற பாடப்படும் கந்த சஷ்டி கவசத்தைப் பாடுவதால் எப்படிப்பட்ட பலன்களைப் பெறலாம் என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

  கந்த சஷ்டி கவசத்தை தினமும் படிப்பதால் நம் உடலில் ஒருவித நேர்மறை ஆற்றல் பரவி, சுறுசுறுப்பு அதிகரிக்கும். அதானால் நம் செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். பொதுவாக  சில அலுவலகங்களில் யோகவும் சில பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றர். தொழிலாளர்களுக்காக நடத்தப்படும் இந்த வகுப்பில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடலைப் பேணிப் பாதுகாக்கவும் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள் அதில் ஒன்று அதிடென்ஷனாகவே வாழும் நாம் மனதை எப்படி அமைதிப்படுத்திக் கொள்வது என்பதற்கு ஒரு புதிய முறையைக் கற்றுக் கொடுப்பர். அந்த முறைக்கு மனோவியல் ரீதியாக கொடுக்கும் பயிற்சி நல்ல பலனைக் கொடுக்கும்.

   

  என்று ஒவ்வொரு பாகத்தையும் வாயால் சொல்லி மனதால் ரிலாக்ஸ் படுத்தினார் இவற்றை சொல்லி முடித்து விட்டு இப்பொழுது கண்களை மெதுவாக திறங்கள் இப்பொழுது உங்கள் மனதும் உடலும் ரிலாக்ஸாக இருக்கிறதா? என்று எல்லோரிடமும் கேட்டு தெரிந்து கொண்டார் பிறகு நிகழ்ச்சி பற்றி எல்லோரிடைய கருத்தையும் கேட்டார் என் முறை வந்தது நான் சொன்னேன்…’சார் இது என்ன பிரமாதம் இதை நான் குழந்தைப் பருவம் முதலே செய்து கொண்டிருக்கிறேனே!’ என்றேன்

  இந்த மனோவியல் முறையை குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் செய்துக் கொண்டிருக்கிறோம். இந்து மத தர்மத்தை கடைபிடிப்பவர்கள் அனைவரும் சிறு வயது முதலே கந்தர் சஷ்டி கவசம் கேட்டிருப்பார்கள் அல்லது படித்திருப்பார்கள். இது உடலின் ஒரு அவயவம் விடாமல் தியானிக்கும் பயிற்சியை ஆன்மீக ரீதியாக அருமையாக கொடுக்கிறது.

  கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.

  உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்

  கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க!

  விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க!

  நாசிகளிரண்டும் நல்வேல் காக்க!

  பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க!

  கன்னமிரண்டும் கருணைவேல் காக்க!

  என் இளங்கழுத்தை இனியவேல் காக்க!

  என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம் இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது. இப்படி மூளையின் தனி கவனத்திற்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது.

  மேலும் படிக்க... ஒன்பது எனும் எண் ஆன்மீக மகத்துவங்கள் கொண்டது எப்படி?

  இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும் மனோவைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்பதில்லையா இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.

  இந்த மனோவைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது. கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறினார்கள். இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவகோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம் நவ கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன?

  மேலும் படிக்க... நவக்கிரகங்கள் அருள் புரியும் தலங்கள்... முழு விபரம்...

  கிரகங்களின் மற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் சரிசெய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம் அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்

  இப்படி கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான நன்மைகள் உள்ளன. ஆனால் ஆராயாமலே தற்காலத்தில் எல்லாவற்றையுமே மூடநம்பிக்கை என்று சொல்லுபவர்களுக்கு இது புரிவது சாத்தியமில்லை. ஆகையால் இந்து தர்மத்தில் சொல்லப்படும் பல அறிவியல் மற்றும் மனோரீதியான சூட்சுமங்களை விளக்குகிறது. இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்’

  கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

  முருகனின் பெயரால் நவகிரகங்களும் நமக்கு துணை நிற்பார்கள். எதிரிகளின் மனம் மாறி தோழமை உண்டாகும். வீட்டை பிடித்திருக்கும் தரித்திரம், பீடை, செய்வினைகள் அடியோடி அழிந்துவிடும். வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறை சக்திகளான லட்சுமி கடாட்சம், குழந்தை பாக்கியம், மன நிம்மதி உண்டாகும்.

  தினமும் கந்த சஷ்டி கவசத்தை பாடுவோருக்கு மதிப்பு, மரியாதை உண்டாகும். மனமும், உடலும் வலிமை அதிகரிப்பதோடு, முக வசீகரம் ஏற்படும்.முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமைகளில் மூன்று முறை கந்த சஷ்டி கவசத்தைப் படிப்பதால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். முருகனுக்கு உகந்த நாட்கள், சஷ்டி விரதம் மேற்கொள்ளும் தினத்திலும், முருகனுக்கு விரதம் இருந்து மூன்று கந்த சஷ்டி கவசத்தைப் படிப்பதாலும், முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் நடக்காது என்று நினைத்த காரியங்கள் கூட நிறைவேறும்.

  மேலும் படிக்க... நவகிரகங்களுக்கு உரிய நவதானிய தானங்கள்!

  மேலும் கந்த சஷ்டி கவசம் என்பது சாதாரண பக்தி பாடல் அல்ல, இதில் சர்வ சக்திகளும் அடங்கிய மந்திரம். முற்காலத்தில் முனிவர்களும், சித்தர்களும் காட்டில் வசிக்கும் போதும், தியானத்தில் இருக்கும் போதும், தீய சக்திகளிடமிருந்து தப்பிக்க கந்த சஷ்டி கவசத்தையும், சிவ மந்திரத்தையும் பாடி வந்தனர். இப்படிப்பட்ட அற்புத பலன்களைத் தரக்கூடிய கந்த சஷ்டி கவசத்தை தினமும் மனமுறுக பாடினால் முருகனின் அருளால் வேதனைகள் விலகி அத்தனை நன்மைகளும் பெறலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: