Home /News /spiritual /

தை அமாவாசை: இன்று பஞ்சகவ்ய விளக்கு ஏற்றினால் நன்மைகள் உண்டாகும்...

தை அமாவாசை: இன்று பஞ்சகவ்ய விளக்கு ஏற்றினால் நன்மைகள் உண்டாகும்...

பஞ்சகாவிய விளக்கு

பஞ்சகாவிய விளக்கு

Thai Amavasai 2022 : தை அமாவாசையான இன்று மாலை பஞ்சகவ்ய விளக்கை நெய் ஊற்றி திரி போட்டு வீட்டின் முக்கியமான பகுதியில் ஏற்ற வேண்டும்.

    தை அமாவாசையில் பஞ்சகவ்ய விளக்கு ஏற்றினால் நல்லது. இந்த பஞ்சகவ்ய விளக்கானது பால், தயிர், நெய், கோமியம், சாணம், இவைகளால் செய்யப்பட்டது. உங்களால் முடிந்தால் இந்தப் பொருட்களையெல்லாம் வீட்டில் வாங்கி வைத்து, விளக்கு தயாரித்து, காய வைத்து விளக்கை ஏற்றி கொள்ளலாம். முடியாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இந்த  பஞ்சகவ்வியம் விளக்கை மொத்தமாக வாங்கி, வீட்டில் வைத்துக் கொள்ளலாம். 

    இந்த விளக்கை வீட்டில் ஏற்றினால் ஒரு ஹோமம் செய்ததற்கு சமம். அதிலும் தை அமாவாசையான இன்று மாலை நேரத்தில் இந்த பஞ்சகவ்ய விளக்கை 2 எடுத்து அதில் நெய் ஊற்றி திரி போட்டு வீட்டின் முக்கியமான பகுதியில் ஏற்ற வேண்டும். பூஜை அறை, வீட்டின் நடு பகுதி அல்லது நிலைவாசல் படி என எங்கு வேண்டுமானாலும் ஏற்றலாம். கண்டிப்பாக இதில் நெய்தான் ஊற்றி ஏற்ற வேண்டும். முக்கியமாக இந்த விளக்கை ஒரு அகலமான தட்டில் வைத்து ஏற்ற வேண்டும் ஏனென்றால் இது யாகம் செய்யும் போது வரும் தீயை போல விளக்கு முழுக்க எரியும்.



    மேலும் படிக்க...Thai Amavasai 2022 | தை அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க, படையல் வைக்க, பிண்டம் வைத்து வழிபட எது நல்ல நேரம்? என்பது குறித்த தகவல்கள்…

    அப்படி முழு விளக்கும் எரிந்தவுடன் அந்த சாம்பலை எடுத்து விபூதியாக பூசிக்கொள்ளலாம். இதனால் வீட்டில் உள்ள பிரச்னைகள் மறைந்து சந்தோஷம் பெருகும் என்பது நம்பிக்கை. மேலும் இந்த தீபத்தை ஏற்றிய பின்பு ஏதாவது ஒரு பிரசாதம் செய்து இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்து குழந்தைகளுக்கு பிரசாதமாக கொடுக்கலாம். யாகம் செய்த புண்ணியத்தை, பரிபூரணமாக அடைய அன்னதானமும் சேர்ந்திருந்தால் நல்ல பலனைத் தரும். இந்த பஞ்சகவ்ய விளக்கை அமாவாசையில் மட்டும் அல்ல வார வாரம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்றி வழிபடலாம்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Thai Amavasai

    அடுத்த செய்தி